Jan 25, 2012

chm2pdf - கட்டளையினைப் பயன்படுத்தி, CHM வடிவ கோப்பினை PDF வடிவ கோப்பாக மாற்றுதல்

CHM - Microsoft Compiled HTML Help. CHM கோப்பு வடிவமானது விண்டோஸ் இயங்குதளத்தில் பயன்படுத்தப் படும் ஓர் உரிமமுடைய Online Help Format. இது விண்டோஸ்-98 இயங்குதளத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப்பட்டது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அண்மைய பதிப்பான விண்டோஸ்-7 இயங்குதளம் வரை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

விண்டோஸ் இயங்குதளத்தினுடைய மென்பொருள்கள் அல்லது மைக்ரோசாப்ட் நிறுவனத்தினுடைய ஏதாவது ஒரு பயன்பாட்டிற்குண்டான Help -னை பார்த்தீர்களேயானால் உதவிப் பக்கமானது இந்த கோப்புவடிவத்தில் திறக்கும்.

இது ஒருங்கிணைந்த HTML பக்கங்களையும், உள்ளடக்கத்தின் HyperLink களையும், Index கோப்புகளையும் கொண்டிருக்கும். இது ஒரு இருமவடிவ கோப்பு ஆகும்.

விண்டோஸ் இயங்குதளங்களில் (அனைத்து பதிப்புகளிலும்) எந்தவிதமான மென்பொருளினையும் CHM கோப்பிற்காக நிறுவ வேண்டிய அவசியமில்லை. இயல்பிருப்பாகவே நிறுவப்பட்டு இருக்கும்.

நாம் இந்த கோப்பினை லினக்ஸ் இயங்குதளத்தில் இயல்பாக திறக்க முடியாது. இதற்கான Application லினக்ஸ் இயங்குதளத்துடன் சேர்ந்து வராது. இந்த CHM கோப்பினைத் திறப்பதற்கான Application -களை நாம்தான் நிறுவிக்கொள்ள வேண்டும்.

இந்த கோப்பினை திறந்து படிப்பத்தற்கு xCHM Viewer -எனும் Application உள்ளது. இதை நாம் Ubuntu Sotware Center மூலமாக நிறுவிக்கொள்ளலாம்.

நான் உபுண்டு 9.04 லினக்ஸ் பயன்படுத்திய பொழுது இந்த கோப்பினை படிப்பதற்கு Mozilla Firefox -ல் CHM Addon ஐ நிறுவி அதன் மூலம்தான் படித்து வந்தேன்.


chm2pdf - கட்டளையினை நிறுவ:

முனையத்தை திறந்து sudo apt-get install chm2pdf என தட்டச்சு செய்து Enter Key அழுத்துங்கள். ஒரு சில நிமிடங்களில் நிறுவப்பட்டு விடும்.

நிறுவியப் பிறகு CHM கோப்பு இருக்கும் அடைவுக்குள் CD கட்டளையினைப் பயன்படுத்தி செல்லுங்கள் (அல்லது) CHM கோப்புகளை Home Folder க்குள் Copy செய்துக்கொள்ளுங்கள். இதற்குப் பிறகு.

முனையத்தில் chm2pdf --webpage YourFileName.chm PdfFileName.pdf என தட்டச்சு செய்து Enter Key யினை அழுத்துங்கள். ஒரு சில நிமிடங்கள் CHM கோப்பு PDF கோப்பாக மாற்றப்பட்டிருக்கும்.

இங்கு
YourFileName.chm எனும் இடத்தில் chm கோப்பினுடைய FileName னையும் PdfFileName.pdf எனும் இடத்தில் PDF கோப்பிற்கு என்ன பெயர் வேண்டுமோ அதையும் கொடுக்கவும். (கொடுக்கப்பட்டுள்ள படத்தை பெரிதுபடுத்திப் பார்த்துக்கொள்ளுங்கள)


சரிப்பா தம்பி இதனால் என்ன பயன் என்றுக் கேட்கலாம்:

1. CHM கோப்புகளை PrintOut எடுக்க வேண்டுமென்றால் மிகவும் சிரமமாக இருக்கும். அனைத்துப் பக்கங்களையும் Print எடுக்க முடியாது. ஒவ்வொரு பக்கமாகத்தான் Print எடுக்க முடியும்.

2. மற்றவர்களுடன் எளிதில் பரிமாரிக்கொள்ளலாம். ஒருவேளை நம்மிடம் இருந்து CHM கோப்பினைப் பெற்றுச் சென்றவர் அவரது லினக்ஸில் இயங்குதளத்தில் xCHM Viewer Application நிறுவாமல் இருந்தால். PDF கோப்பு பயன்மிக்கதாக இருக்கும்.


chm2pdf கட்டளையினைப் பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள முனையத்தில் man chm2pdf எனக்கொடுக்கவும்.

Jan 11, 2012

உபுண்டு நிகழ் வட்டுக்கான (Live CD) கடவுச்சொல் என்ன?

வன்வட்டினை பார்ட்டிசியன் செய்வதற்கு, GRUB Boot Loader -னை மீள நிறுவுவதற்கு, தகவல்களை மீட்டெடுப்பதற்கு என உபுண்டுவினை நாம் ஒரு சில நேரங்களில் நிகழ் இயங்குதளமாக (Live Operating System) பயன்படுத்துவோம்.

அவ்வாறு பயன்படுத்தும் பொழுது, ஒரு குறிப்பிட நேரம் கணினியில் எந்த விதமான உள்ளீடுகளும் செய்யாவிட்டால் உபுண்டுவினுடைய திரை மூடிக்கொள்ளும்.

நாம் மறுபடியும் சுட்டியினை நகர்த்தினால் கடவுச்சொல் கேட்கும் அவ்வாறு கேட்கும் பொழுது கடவுச்சொல் என்னவென்று தெரியாமால் எதையாவது தட்டச்சு செய்து உள் நுழைய முயற்சிப்போம். ஆனால் நம்மால் உள் நுழையமுடியாது.

அப்படியென்றால், மறுபடியும் கணினியினை மறுதொடக்கம் செய்துதான் தொடங்க வேண்டுமா? அல்லது

நிகழ் வட்டிற்கென ஏதாவது இருப்பியல்பான கடவுச்சொல் இருக்கிறதா? எனக் கேட்கலாம்.

ஆம் கடவுச்சொல் இருக்கிறது.

கடவுச்சொல் கேட்கும் பொழுது வெறும் Enter Key -னை அழுத்தினால் போதும்.

முனையத்தில் ஒரு சில கட்டளைகளுக்கு கடவுச்சொல் தேவைப்படும் அப்பொழுதும் Enter Key - னை மட்டும் அழுத்தினால் போதும்.
Live Cd User Name=ubuntu
Live Cd Password = blank (வெற்று)