Sunday, March 3, 2019

நிம்மதி தரும் நிதித் திட்டம்


என்னுடைய அப்பாவும், அம்மாவும் 5-ஆம் வகுப்பு கூட படிக்காதவர்கள். கூலி வேலைப் பார்த்துதான் என்னை Diploma, Engineering, MBA என படிக்க வைத்தார்கள். என் தம்பியை M.Com., M.Phil என படிக்க வைத்தார்கள். அதுபோக குடும்பத்தையும் நடத்தினார்கள்.

இன்றைக்கு நான் வாங்கும் மாதச் சம்பளத்தை விட குறைவாகவே என் பெற்றோர்கள் இருவருடைய சம்பளமும் இருந்தது. இருந்தும் எப்படி குடும்பத்தை திறமையாக நடத்தினார்கள்? என்னையும் என் தம்பியையும் இவ்வளவு படிக்க வைத்தார்கள்?

சேமிப்பு, சிக்கனம்,  தாங்கள் சம்பாதித்த குறைவான தொகையைக்கூட  வருங்காலத் தேவைக்காக திட்டமிட்டு சிறுகச்சிறுக சேமித்து வைத்தது இவைகள்தான் காரணம். இந்தப் பழக்கம் இன்றைய தலைமுறையினராகிய நமக்கு இருக்கிறதா? என்றால், இல்லை என்பதுதான் பெரும்பான்மையாக இருக்கிறது.

எனக்கு திருமணம் ஆகுவதற்கு முன்பு சேமிப்பு, ஆயுள் காப்பீடு, வரி தொடர்பானவற்றில் பெரிதாக ஆர்வம் இல்லை.

திருமணம் ஆன பின்பு என் மனைவியுடன் ஒரு நாள் பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென்று, இதுவரை தாங்கள் சம்பாதித்ததில் எவ்வளவு சேமித்து வைத்திருக்கிறீர்கள்? மாதம் மாதம் எவ்வளவு சேமித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டார். ரஜினிகாந்திடம் "உங்க கொள்கை என்ன?" என்று கேட்டதற்கு "எனக்கு தலையே சுத்திவிட்டது" என்று கூறினார் அல்லவா அதுபோல ஆகிவிட்டது என்னுடைய நிலைமையும்.

அப்படியெல்லாம் எதுவும் சேமிக்கிற பழக்கம் கிடையாது ரம்யா என்று கூறினேன். அப்படியெல்லாம் இருக்கக்கூடாதுங்க நம்முடைய செலவுகளை குறைத்து, மாதம் ஆயிரம் ரூபாயாவது சேமிக்கனும்ங்க என்று கூறினார். எனக்கும் அந்த அக்கறையுடன் கூடிய அறிவுரை சரியென்று பட்டது.

அன்றைய தேதியிலிருந்து சேமிப்பு, முதலீடு, காப்பீடு, நிதித் திட்டமிடல் போன்றவை தொடர்பான புத்தகங்கள், இதழ்கள், இணையதளங்கள் ஆகியவைகளை ஒரு மாத காலம் தொடர்ந்து படித்து வந்தேன், வருகிறேன்.

நிதி திட்டமிடல் தொடர்பாக நான் படித்த புத்தகங்களின் பட்டியல் கீழே உள்ளது. என்னிடம் கிண்டில் கருவி இருக்கிறது. கீழே உள்ள புத்தகங்களில் பெரும்பான்மையானவை கிண்டிலில் படித்ததுதான்.
 1. அறம் பொருள் இன்பம் - வ.நாகப்பன்
 2. பணம் செய்ய விரும்பு - நாகப்பன் புகழேந்தி
 3. வீட்டுக் கணக்கு - சோம.வள்ளியப்பன்
 4. பணமே ஓடி வா - சோம.வள்ளியப்பன்
 5. பணவளக்கலை - டாக்டர் எஸ்.கார்த்திகேயன்
 6. சேமிப்பு - முதலீடு தகவல் களஞ்சியம் - சி.சரவணன்
 7. முதலீட்டு மந்திரம் 108 - சி.சரவணன்
 8. மணி மணி மணி! - அனிதா பட்
 9. மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள்.: ஒரு சிறு அறிமுகம் - சுரேஷ் பரதன்
 10. பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை - ராபர்ட் கியோஸாகி
 11. ஷேர் மார்க்கெட்  A-Z - சொக்கலிங்கம் பழனியப்பன்
 12. நாணயம் விகடன் - வார இதழ்.(ஆன்லைன் சந்தா வசதி உள்ளது. ஓராண்டுச் சந்தா ரூ.1,500 மட்டுமே. 2006-ஆம் ஆண்டிலிருந்து உள்ள பழைய இதழ்களையும் படித்துக்கொள்ளலாம். விகடன் குழுமத்தில் இருந்து வரும் 11-இதழ்களுக்கும் சேர்த்து ஆன்லைனில் படிப்பதற்கு ஆண்டுச்சந்தா ரூ.1,500 மட்டுமே)
 13. Mutual Funds: The Money Multiplier - Lalitha Thamaraipandy
 14. Let's Talk Money: You've Worked Hard for It, Now Make It Work for You - Monika Halan
 15. 108 Questions & Answers on Mutual Funds & SIP - Yadnya Investments
 16. 16 Personal Finance Principles Every Investor Should Know (Master Your Financial Life Book 1) - Manish Chauhan
 17. 3 Pillars of Financial Security - Manish Chauhan

மேற்கண்ட புத்தகங்களை படித்ததில் இருந்த நான் தெரிந்து கொண்டது இவைகள்தான்

 • காப்பீடு என்பது முதலீடு கிடையாது.
 • டேர்ம் இன்ஷூரன்ஸைத் தவிர வேறு எந்த இன்ஷூரன்ஸ் பாலிசியும்  எடுக்கக் கூடாது.
 • சம்பாதிக்கும் ஒவ்வொருவரும் டேர்ம் இன்ஷூரன்ஸ் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். உங்களுடைய வருமானத்தை உங்கள் மனைவியோ, பெற்றோரோ, அல்லது உறவினர்களோ யாராவது நம்பியிருந்தால் உங்களுடைய ஆண்டு வருமானத்தைப் போல் 10 அல்லது 15 மடங்கு தொகைக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும்.
 • நீங்கள் வாங்கும் சம்பளத்தில் உங்களுடைய வயதின் சதவீதத்திற்கு மேல் சேமிக்க வேண்டும். உதாரணமாக, உங்கள் வயது 30 என்றால் உங்கள் சம்பளத்தில் 30% தொகையை சேமிக்க வேண்டும். அதற்கு மேலும் சேமித்தால். அது அற்புதம்.
 • தங்கம், ரியல் எஸ்டேட் என்பது முதலீட்டிற்கு ஏற்றதல்ல. அது ஒரு நல்ல முதலீடும் கிடையாது.
 • உங்களுடைய முதலீடு, சேமிப்பு, காப்பீடு, கடன் விபரங்களை உங்கள் மனைவியுடன் அவசியம் பகிர்ந்து கொள்ள வேண்டும்
 • கிரெடிட் கார்டு தேவையில்லை.
 • ஒவ்வொரு நாளும் ஆகும் செலவை தனியாக ஒரு நோட்டுப்போட்டு குறித்து வைக்க வேண்டும். மாத இறுதியில் அன்றைய மாதத்திற்கான மொத்த செலவை கணவன், மனைவி இருவரும் அமர்ந்து கணக்கீட்டுப் பார்க்க வேண்டும்.
 • பிள்ளைகளின் படிப்பு, உயர்கல்வி, திருமணம் போன்றவைகளுக்கு இப்போதிலிருந்தே சேமிக்க வேண்டும்.
 • ஓய்வு காலத்திற்கான சேமிப்பை முதல்மாத சம்பளம் வாங்கிய தேதியிலிருந்தே தொடங்க வேண்டும்.
 • பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்யாமல், மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம். மாதச் சம்பளதாரர்கள் SIP முறையில் மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்யலாம்
 • வரிச்சேமிப்பிற்கு ஏப்ரல் முதல் தேதியிலிருந்தே திட்டமிட வேண்டும்.
 • வரிச்சேமிப்பிற்காக தேவையில்லாத இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுக்கக்கூடாது.
 • இது போன்ற இன்னும் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா? மேற்கண்ட புத்தகங்களை படித்துப்பாருங்கள். எல்லா புத்தகங்களும் சேர்த்து ரூ.3,000 க்குள்தான் வரும். மூவாயிரம் ரூபாயா??? ஆமாம். நீங்கள் வைத்திருக்கும் ஸ்மார்ட் போனின் விலையில் கால்பங்கு.

Saturday, February 23, 2019

KDE neonஓராண்டு காலமாக நான் Kubuntu இயங்குதளத்தை பயன்படுத்தி வருகிறேன். Gnome சூழலை விட KDE சூழலே எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று customization. கேடீஇ சூழலை நாம் எப்படி விரும்புகிறோமோ அப்படி customize(தனிப்பயனாக்கலாம்) செய்து கொள்ளலாம்.

லினக்ஸ் இயங்குதளங்களில் குறிப்பிடத்தக்க சூழல்கள் Gnome, KDE, XFCE, LXDE. இந்த நான்கு சூழல்களிலும் நான் லினக்ஸை பயன்படுத்தியிருக்கிறேன். இறுதியில் என்னை கவர்ந்துள்ளது KDE தான்.
உபுண்டு இயங்குதளத்திற்கான KDE சூழல் KUbuntu(KDE + Ubuntu) எனும் பெயரில் கிடைக்கிறது. நன்றாக இருக்கிறது. அண்மையில் இணையத்தில் உலாவியபோது KDE குழுவினர் தனியாக KDE neon எனும் பெயரில் இயங்குதளம் வெளியிட்டு இருப்பதாக அறிந்தேன். KDE குழுவினரின் மேம்படுத்துதல் உடனுக்குடன் அதில் கிடைக்கிறது. இன்னொரு முக்கியமான செய்தி என்னவென்றால் அது Ubuntu வை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

KDE neon வெளியீடுகளை உபுண்டுவின் LTS பதிப்பை அடிப்படையாக வைத்து வெளியிடுகிறார்கள். KDE neon 2019 ஆண்டிற்கான வெளியீட்டை உபுண்டு 18.04 LTS பதிப்பை அடிப்படையாக வைத்து வெளியிட்டிருக்கிறார்கள்.

லினக்ஸ் ஆரம்பநிலை பயனர்களைவிட, ஓரளவிற்கு லினக்ஸை பயன்படுத்தியவர்களுக்கு மிகவும் ஏற்ற இயங்குதளம் KDE neon. என்னுடைய தேவைகளை அனைத்தையும் KDE neon இல் செய்ய முடிகிறது.

 • தமிழ் எழுத்துருக்கள் மிகவும் அற்புதமாக தோற்றமளிக்கிறது.
 • IBus உதவியுடன் தமிழ்99 முறையில் தமிழில் தட்டச்சு செய்ய முடிகிறது.
 • பிழைச்செய்திகள் தோன்றுவதில்லை.
 • உறுதியாகவும், நிலையாகவும் இருக்கிறது.
 • KDE இன் மேம்படுத்துதல்கள் உடனுக்குடன் கிடைக்கின்றன.

தரவிறக்கம் செய்ய KDE neon தளத்திற்குச் செல்லவும். Developer Edition, User Edition என்று இரண்டு விதமாக கிடைக்கிறது. தொடர்ந்து பயன்படுத்த விரும்புவர்கள் User Edition ஐ தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

KDE neon பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கு FAQ பகுதியில் பதில்சொல்லியிருக்கிறார்கள்.

Tuesday, December 18, 2018

கேஉபுண்டுவில் Number Lock பொத்தானை தொடக்க நிலையில் தானாக இயங்க செய்வது எப்படி?

இரண்டு விதமான தட்டச்சு பலககைகளுடன் மடிக்கணினிகள் சந்தையில் கிடைக்கிறது. எண்களுக்கான பொத்தான்களை தனியாக கொண்ட பலகைகள், எண்களுக்கான பொத்தான்கள் தனியாக இல்லாத பலகைகள்.

Without Numeric Keys


With Numeric Keys
எண்களுக்கான பொத்தான்களை தனியாக கொண்ட மடிக்கணினிகளில் எண்களை விரைவாகவும், எளிமையாகவும் உள்ளீடு செய்யலாம். இந்த பொத்தான்களை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கென 'Num Lock' என்கிற பொத்தான் பலகையில் தனியாக இருக்கும். அதை அழுத்திவிட்டு, நாம் எண்களை உள்ளீடு செய்ய ஆரம்பிக்கலாம்.

Num Lock பொத்தானை நாம் ஒவ்வொரு முறையும் அழுத்திவிட்டு எண்களை உள்ளீடு செய்வது கடினமாக தோன்றினால் இதை கணினியின் தொடக்க நிலையிலேயோ அல்லது இயங்குதளத்தின் தொடக்க நிலையிலேயோ தானாக செயல்பாட்டிற்கு கொண்டு வரலாம்.

கணினியின் தொடக்க நிலையிலேயே கொண்டு வருவதற்கு BIOS அமைப்பில் மாற்றம் செய்ய வேண்டி வரும். நீங்கள் கேஉபுண்டு பயன்படுத்துபவராக இருந்தால் BIOS அமைப்பிற்குச் செல்லாமலேயே செயல்பாட்டிற்கு கொண்டு வரலாம். எப்படி?

System Settings -> Input Devices -> Keyboard -> Hardware Tab -> Click 'Turn On' in NumLock on Plasma Startup -> Click 'Apply'


Sunday, December 16, 2018

ஜிமெயில் மின்னஞ்சல் அறிவிப்புகளை செயல்படுத்துவது எப்படி?

தகவல் தொழில்நுட்பம் மட்டும்மல்லாது அனைத்துத்துறை வேலைகளிலும் மின்னஞ்சல் என்பது ஒரு முக்கியமான தகவல் தொடர்பு கருவி. சில மின்னஞ்சல்களுக்கு ஒரு சில நிமிடங்களுக்குள்ளாகவே பதிலளிக்க வேண்டிய கட்டாயம் இருக்கும். நாம் ஏதாவது ஆழ்ந்த வேலைகளில் மூழ்கியிருக்கும் போது நமக்கு வந்திருக்கும் முக்கியமான மின்னஞ்சல்களை கவனிக்காமல் விட்டுவிடக்கூடும்.

அந்த மாதிரியான சூழலில் நமக்கு வந்திருக்கும் மின்னஞ்சல்களை அறிவிப்புகளாக கூறினால் நன்றாக இருக்குமல்லவா. ஜிமெயில் இந்த வசதியினை கொண்டிருக்கிறது.

இந்த வசதியினை செயல்படுத்த, உங்களுடைய ஜிமெயில் கணக்கின் அமைப்புக்குச்(settings) சென்று General என்பதைச் சொடுக்கி அதில் Desktop Notifications எனும் பிரிவில் உள்ள New mail notifications on என்பதைத் தேர்ந்தெடுத்து கீழே உள்ள Save Changes பொத்தானை அழுத்தவும்.
இனிமேல் உங்களுக்கு புதிய மின்னஞ்சல் வந்தால் அது அறிவிப்பாக காட்டப்படும். நான் கேஉபுண்டு(Kubuntu) 18.04.1 LTS பயன்படுத்துகிறேன். இந்த வசதி நன்றாக வேலை செய்கிறது.

Tuesday, December 4, 2018

பணம் செய்ய விரும்பு

சிறு துளி பெரும் பணம் - எழுத்தாளர் சோம.வள்ளியப்பன்

 

பணம் செய்ய விரும்பு - நிதி.ஆலோசகர் வ.நாகப்பன்

 

நிதி நலம் - எழுத்தாளர் செல்லமுத்து குப்புசாமி  

Friday, October 26, 2018

தீபாவளி நட்டக் கணக்கு

தீபாவளிப் பண்டிகையால் ஏற்படும் கஷ்ட நஷ்டங்கள் பற்றித் தந்தை பெரியார் எடுத்துக் காட்டும் கணக்கு விபரம்:-

1. துணி தேவை இருக்கின்றவர்களும், தேவை இல்லாதவர் களும் "தீபாவளி"ப் பண்டிகையை உத்தேசித்துப் புதுத் துணிகளை வாங்குவது.

2. மக்கள், மருமக்களை மரியாதை செய்வதற்கென்று,  யோக்கியதைக்கு மேலானவும், சாதாரணமாக உபயோகப்படுத்து வதற்கு ஏற்றனவல்லாதனவுமான துணிகள் வாங்குவது.

3.அர்த்தமற்றனவும் பயனற்றனவுமான வெடி மருந்து சம்பந்தப்பட்ட பட்டாசு வகைகளை வாங்கிக் கொளுத்துவது.

4. பலர் இனாம் என்றும், பிச்சை என்றும் வீடு வீடாய்க் கூட்டம் கூட்டமாய்ச் சென்று பல்லைக் காட்டிக் கெஞ்சிப் பணம் வாங்கி அதைச் சூதாட்டத்திலும், மதுக்குடியிலும் செலவழித்து நாடு சிரிக்க நடந்து கொள்வது.

5. இவற்றிற்காகப் பலர் ஊர்விட்டு ஊர் பிரயாணம் செய்து பணம் செலவழிப்பது.

6. அன்று ஒவ்வொருவர் வீட்டிலும் அமிதமான பதார்த்தங் களை (பலகாரங்கள் - காய்கறி, சாப்பாட்டு வகைகளை)த் தேவைக்கு மிகுதியாகச் செய்து அவைகளில் பெரும்பாகத்தைக் கண்டவர்களுக்குக் கொடுப்பதும், வீணாக்குவதும்.

7. இந்தச் செலவுகளுக்காகக் கடன் படுவது.

Monday, October 22, 2018

ராஜீவ்காந்தி சாலை நாவல் - ஒரு பார்வை


எழுத்தாளர் விநாயக முருகன் எழுதிய "ராஜீவ்காந்தி சாலை" நாவலை அண்மையில் படித்து முடித்தேன். "ராஜீவ்காந்தி சாலை" நாவல் நான் படிக்க விரும்பி நீண்ட நாட்களாக கிடைக்காமல் இருந்த புத்தகம். உயிர்மை பதிப்பகத்தின் வெளியீடு இது.

எழுத்தாளர் விநாயக முருகன்

உயிர்மை பதிப்பகத்தை அடிக்கடித் தொடர்புகொண்டு எப்போது "ராஜீவ்காந்தி சாலை" நாவல் வெளிவரும்? எனக் கேட்டுக்கொண்டிருந்தேன். விரைவில் வெளிவருவதாக கூறினார்கள். உயிர்மை இதழில் சென்னை புத்தகக் காட்சியில்(2018) "ராஜீவ்காந்தி சாலை" நாவல் வெளிவருவதாக விளம்பரப்படுத்தியிருந்தார்கள். அங்குதான்(சென்னை புத்தகக் காட்சி) இந்தப் புத்தகத்தை வாங்கினேன்.

நான் ஐடியில் வேலை செய்வதால் படிப்பதற்கு மிகவும் விறுவிறுப்பாகவும், ஆர்வமாகவும் இருந்தது. ஐடி என்று சொல்லக்கூடிய தகவல்தொழில்நுட்ப துறையில் நடப்பவைகளை அப்படியே பதிவு செய்திருக்கிறார் விநாயக முருகன்.

நாவலில் வரும்  கதாபாத்திரங்கள் பேசிக்கொள்ளக்கூடிய கருத்துக்களை வாசிக்கும் போது இதையெல்லாம் எழுவதற்கு ஒரு தைரியம் வேணும்யா என நினைத்துக்கொண்டேன்.

பார்ப்பனர்கள் - பெரியார் - காந்தி கொலை - ஐடி கம்பெனிகளுக்குள் பார்ப்பனர்கள், மலையாளிகள் செய்யும் அரசியல் என ஒன்றுவிடாமல் பதிவு செய்திருக்கிறார் நாவலில்.

விநாயக முருகன் முற்போக்கானவர். அவருடைய முகநூல் பதிவுகளை தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு தெரியும். நான் அவருடைய பதிவுகளை தொடர்ந்து படித்து வருபவன். அவர் எழுதிய "சென்னைக்கு மிக அருகில்", "நீர்" ஆகிய நாவல்களை ஏற்கனவே படித்திருக்கிறேன். "சென்னைக்கு மிக அருகில்" நாவலிலும் பார்ப்பனர்கள் - பெரியார் பற்றிய உரையாடல்கள் வரும்.

உயிர்மையில் விநாயக முருகன் எழுதிய "பிராய்லர் பண்ணைகளும் திறமை இல்லா திண்டாட்டமும்" கட்டுரை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: http://marinabooks.com/category?authorid=6448

ஐடி துறையில் இருக்கும் ஒவ்வொருவரும், ஐடி துறையில் அப்படி என்னதான் நடக்கிறது என தெரிந்து கொள்ள விரும்புவோரும் அவசியம் படிக்க வேண்டிய நாவல்.

எந்த புத்தகத்தைப் படித்தாலும் அதில் எனக்கு பிடித்த வரிகளை அடிக்கோடிட்டு வைப்பது என்னுடை பழக்கம். அவ்வாறு "ராஜீவ்காந்தி சாலை" நாவலில் எனக்கு பிடித்த வரிகள் என அடிக்கோடிட்டு வைத்தவைகள்...

"உதாரணத்துக்கு அமெரிக்காவில் இருக்கும் மருந்து கம்பெனிக்கு சாஃப்ட்வேர் தேவைப்பட்டால் அவர்கள் ஆட்களைப் போட்டு அதை எழுதச் சொல்லமாட்டார்கள். இந்தியா போன்ற ஏதாவது ஒரு நாட்டின் ஐடி நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் வேலை தருவார்கள். அவர்களுக்கு வேலைசெய்யும். சாஃப்ட்வேர் தயாரித்துக் கொடுத்துவிட்டு வெளியே வந்துவிடும். ஆனால் சில புத்திசாலிகள் சாஃப்ட்வேர் தயாரித்துக் கொடுத்தாலும் அதன் பிறகு பராமரிப்பு அது இதுவென்று சொல்லி டேரா போட்டு இன்னும் காசு கறப்பார்கள்."

"இங்கிருந்த காடுகளை அழித்துத்தான் இந்த மென்பொருள் நிறுவனங்கள் வளர்ந்துள்ளன. அதே நிறுவனங்கள் இன்று "மரங்களை" நடுவோம். மரங்களைப் பாதுகாப்போம்" எனப் பிரச்சாரம் செய்வதைப் பார்த்தால் சந்திராவுக்கு உள்ளுக்குள் சிரிக்கத் தோன்றியது."

"மற்ற எத்தனையோ தொழில்களைவிட இந்தத் தொழில் மூலமே இந்தியாவுக்கு நேர்மையான வெளிப்படையான வரிகள் கிடைக்கின்றன. அதன் வழியாகவே இந்தியாவில் சாலைகள், பாலங்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் கட்டப்படுகின்றன என்று சந்திரா போன வாரம்தான் என்டிடிவி பேட்டியில்கூடச் சொல்லியிருந்தார்."

"சாலைகளே தேசத்தின் அடையாளம் முன்னேறிய தேசத்தின் மனித குல வளர்ச்சியை அளக்க விரும்பினால் அதன் சாலைகளை அளந்தால் போதும். சாலைகளே மனித நாகரிகங்களை இணைக்கும் பாலங்கள். இரண்டு வெவ்வேறு கலச்சாரப் பின்னணி கொண்டவர்கள் உறவாடவும் சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்ளவும் சாலைகளே பெரிதும் உதவுகின்றன."

"இந்த மென்பொருள் நிறுவனங்களில் இப்படித்தான் எழுபது சதவீத ஆட்கள் உயிரைக் கொடுத்து வேலைசெய்வார்கள். மீதியுள்ள முப்பது சதவீதம் பேர் வேலை எதுவும் செய்யாமல் ஓபி அடித்துப் பொழுதை ஓட்டுவார்கள். அந்த எழுபது சதவீத ஆட்கள் இவர்கள் வேலையையும் சேர்த்துச் செய்வார்கள். ஆனால் பணி உயர்வு, சம்பள உயர்வு, பாராட்டுகள் என்று வரும்போது மட்டும் அந்த முப்பது சதவீத ஆட்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். பொதி சுமக்கும் மாடுகள் மேல்தானே மேலும் மேலும் அடுக்கிவைப்பார்கள்?"

"இந்த ஐ.டி கம்பெனிகளில் எப்போது எந்த தகுதி அடிப்படையில் யாருக்கு பதவியுயர்வு வருமென்றே சொல்ல முடியாது. எம்.சி.ஏ படித்தவனைவிடப் பி.எஸ்.சி படித்தவன் அதிக சம்பளம் வாங்குவான். பத்து வருட அனுபவம் உள்ளவனைவிடப் பதினைந்து வருட அனுபவம் உள்ளவன் குறைந்த சம்பளம் வாங்குவான். தனியார் கல்லூரியைவிட ஐஐஎம்மில் படித்து வருபவனுக்கு சம்பளம் அதிகம். கலைக்கல்லூரியிருந்து கணிப்பொறியியல் படித்து வந்தால் அடிமாட்டுச் சம்பளம் கொடுப்பார்கள். பெரிய நிறுவனத்திலிருந்து இரண்டு வருட அனுபவத்தை மட்டுமே வைத்துக்கொண்டு எவனாவது இன்டர்வியூவுக்கு வருவான் அவனுக்கு ஆண்டுக்கு பத்து லட்ச ரூபாய்ச் சம்பளம் கிடைக்கும். அதுவே சின்னச் சின்ன, பேர் தெரியாத ஐடி நிறுவனங்களிலிருந்து பத்து வருட அனுபவத்தை வைத்துக்கொண்டு இன்னொருவன் இன்டர்வியூவுக்கு வருவான். அவனுக்கும் ஆண்டுக்குப் பத்து லட்ச ரூபாய் சம்பளம் தருவார்கள். காரணம் கேட்டால் இன்டர்வியூவுக்கு ஆட்கள் எடுக்கும் ஹெச்.ஆர் ஆட்கள் ஏதேதோ சொல்வார்கள். இது போன்ற ஐடி நிறுவனங்களுக்குச் குறைந்த  கூலிக்கு ஆட்களை பிடித்து தருவதில்தான் ஹெச்.ஆர் ஆட்களின் திறமையை மதிப்பிடுவார்கள். இதனாலேயே எந்தக் கம்பெனி அதிக சம்பளம் தருகிறதோ அதற்குத் தாவித் தாவிச் செல்பவர்கள் என்னும் பெயரை ஐடி ஆட்கள் எடுத்திருந்தார்கள். அரசியல் கட்சிகள்போல இப்படித் தாவித் தாவி வருபவர்களையும் நிறுவனங்கள் வரவேற்று வேலை கொடுக்கத்தான் செய்தன."

"ஒரு காலத்தில் அதிகாரம் ராசாக்களிடம் குவிஞ்சு கெடந்துச்சு. சபையில கெடந்துச்சு. ஆலோசனை சொல்றேன்னு அங்கப் பாப்பானுங்க நொழஞ்சாங்க. பொறவு அதிகாரம் ராசா சபைகளைவிட்டு வெளியே வந்து கோவிலுக்குப் போச்சு. பாப்பானுங்க அங்கயும் நகர்ந்தானுங்க. பொறவு வெள்ளைக்காரன் வந்தான். அதிகாரம் கவுருமெண்ட்டு ஆபிசருங்க கைக்குப் போச்சு. இவனுங்க அங்கயும் போய் ஜால்ரா போட்டாங்க. இப்ப அதிகாரம் டெல்லிலேயும் சாப்ட்வேர் கம்பேனிலேயும் அமெரிக்காவுலேயும் இல்ல கெடக்கு. ஆனா ஒண்ணு செட்டியார். ஆயிரந்தான் சொல்லுங்க. எங்க, எப்ப அதிகாரமும் பணமும் கெடைக்குமுன்னு  கணிக்கறதுல பாப்பானுங்கள மிஞ்ச முடியாது."

"ஒரு காலத்துல தமிழ்நாட்டுல பாப்பாரப் பசங்களத் தொரத்தித் தொரத்தி அடிச்சாங்க. ஆனா அவங்க சத்தமே இல்லாம இந்தியும் இங்கிலீசும் படிச்சுட்டு இன்னைக்கு டெல்லிலேயும் அமெரிக்காவுலேயும் உட்கார்ந்துகிட்டுத் தமிழ்நாட்டை ஆட்டிப் படைக்கறாங்க. இவங்க வச்சதுதான் சட்டம். ஜெயலலிதா வந்தாலும் சரி, கருணாநிதி வந்தாலும் சரி. இதுதானே நிலைமை."

"வெள்ளைக்காரன் ஒன்னும் சும்மா நாட்டை விட்டுப் போகலை. போகும்போதே இங்க அருக்கற ஜனங்களுக்கு இங்கிலீஷ் ஆசையை மூட்டிவிட்டுட்டுப் போயிட்டான். போற மாதிரி போய் இங்க இங்கிலீஷ் தெரிஞ்ச பாப்பான்களை அவன் நாட்டுக்கு வேலை செய்ய அழைச்சுட்டுப் போயிட்டான். இவனுங்களும் காசு எங்க இருக்குதுன்னு தொடையை விரிக்கிற தேவடியா கணக்கா விரிச்சுப் போட்டு கெளம்பிட்டானுங்க. திரும்ப இங்க வந்து கங்காணி வேலை செய்றாங்க. நோகாம நோம்பு கும்பிடுற பயலுங்க பாப்பானுங்க."

"உடம்பு மொத்தத்தையும் தண்ணிக்குள்ள வச்சிருந்தாலும் தலையை மேலேயே வச்சிருக்கிற தண்ணிப் பாம்பு மாதிரியில்லை இந்தப் பயலுங்க. இவனுங்க திருட்டுத்தனம், மொள்ளமாரித்தனத்தைத் தெளிவாகப் புரிஞ்சுவச்சிருந்தவங்க ரெண்டு பேரு. ஒருத்தர் காந்தி. இன்னொருந்தர் பெரியார். காந்தியைவிட்டு வச்சா இவனுங்க பொழைக்க முடியாதுன்னு அவரையும் கொன்னுட்டாங்க. பெரியாரைத்தான் இவனுங்களால மயிரக்கூடப் பிடுங்க முடியல. தன்னோட கைத்தடியால தொரத்தித் தொரத்தி இல்ல அடிச்சார்."

இந்த ஐடி கம்பெனிங்க வந்துதான் ஊருக்குள்ள ஜாதிக் கலப்பு நடந்துடுசுச்சு. எவன் என்ன ஜாதின்னே தெரியமாட்டேங்குது. பேரை வச்சு ஜாதியக் கண்டுபிடிக்கலாமுன்னு பார்த்தாக்கூட எல்லாப் பயலுகளும் ரமேசு, சுரேசுனுன்னுல்ல வச்சிக்கிட்டுத் திரியறானுங்க. சேரிப் பசங்களும் அங்கதான் வேலைசெய்றாங்க. நம்ம ஆளுங்களும் அங்கதானே வேலைசெய்யுறாங்க?

"ஆனா பெரியாருக்குதான் நாம நன்றி சொல்லணும்" என்று சந்திரா ஆரம்பித்தார். "என்னது, பெரியாரா?" ரங்கா ஆச்சரியத்தோடு கேட்டார். "அந்தாளு மட்டும் இல்லன்னா நானும் இந்நேரம் சீரங்கத்துல கோவில்ல மணியடிச்சுட்டுப் பிரசாதம்தான் சாப்பிட்டுண்டு இருந்திருப்பேன்."

"ஆனா பாரு ரங்கா. நாம இவ்வளவு தூரம் கடல் கடந்து போயி மாடர்னா மாறி வாழக் கத்துக்கிட்டோம். இவாளால இன்னும் சொந்த ஜாதியைக்கூடத் தாண்டி வர முடியல. காலையில பேப்பர் பார்த்தீயா? வன்னியப் பொண்ணை லவ் செஞ்சுட்டான்னு அவா இருந்த தலித் கிராமத்தை எரிச்சுட்டா. எத்தனை பெரியார் வந்தாலும் திருத்த முடியாதுன்னு இவாளப் பார்த்துதான் நாம சொல்லணும்."

"பெரும்பாலானோர் கல்லூரி முடித்தவுடனேயே ஐடி கம்பெனிகளில் வேலைக்குச் சேர்ந்துவிடுவார்கள். முதல் மாசமே சுளையாக நாற்பதாயிரம் கைக்கு வரும். அவ்வளவு பணத்தை நம்பி யாரும் வீட்டில் இருக்கமாட்டார்கள். அது போன்ற ஆட்கள் நல்ல உயர்தர சென்ட் பாட்டில்கள் வாங்குவார்கள். வாரத்திற்கு இரண்டு செட் விலை உயர்ந்த பிராண்டட் ஆடைகளை வாங்குவார்கள். மாதம் ஐந்துமுறை அழகுநிலையம் செல்வார்கள். மிச்சம் உள்ள பணத்தைப் பார்ட்டிகளில் செலவழிப்பர்கள். சிலர் செல்ஃபோன்களை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். மார்க்கெட்டில் வரும் புதுப் புது எலக்ட்ரானிக் பொருட்களை வாங்கிக்கொண்டே இருப்பார்கள். செல்ஃபோனை அடிக்கடி மாற்றுவது ஒருவித மனவியாதி."

"அது ஏன் இந்தப் பிறந்தநாள் கொண்டாடுபவர்கள் தலையில் எல்லாம் பேப்பர் குல்லா வைத்து முகத்தில் கேக்கை அப்பி அலங்கோலம் செய்து பின்னர் படம் எடுக்கிறார்கள்? ஏன் சமோசா கூடத்தான் அங்கு இருக்கிறது? அதை எடுத்து முகத்தில் அப்பிக் கொள்ள வேண்டியது தானே."

"திருமணத்திற்குப் பின்பு இரவு பகலாக வேலை செய்வதைக் குறைத்துக்கொண்டான். அதுவும் வார இறுதி நாட்களில் அலுவலகம் செல்வதில்லை. தேவைப்பட்டால் வீட்டிலிருந்து வேலைசெய்தான். என்னதான் இந்த ஐடி நிறுவனங்களில் மாடு மாதிரி வேலை செய்தாலும் அங்கு அரசியல்  செய்யத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே எல்லாச் சலுகைகளும் கிடைக்கும் எனத் தெரிந்து விட்டது. மாடுபோல வேலை செய்தால் யாராவது அமெரிக்கன் 'குட் ஜாப்' என்று பாராட்டி மின்னஞ்சல் அனுப்புவான். பைசாவுக்குப் பிரயோசனம் இருக்காது. அதே நேரம் இரண்டு நாளில் செய்ய வேண்டிய வேலைகளை ஒரே நாளில் செய்வதில் இன்னோர் ஆபத்தும் உண்டு. இன்னும் அதிகமாக வேலையைத் தலையில் கட்டுவார்கள். எந்த மாடு அதிகமாக பொதி சுமக்கிறதோ அதன் தலையில்தானே இன்னும் அதிகமாகச் சுமையை ஏற்றுவார்கள். கொஞ்சமாக வேலை செய். அதிகமாக அதை வெளிக்காட்டு என்பது அங்கே சர்வைவலுக்கான தந்திரம். அது தெரியாதவர்கள் அதிகமாக வேலைசெய்து பதவி உயர்வு கிடைக்கும் என்று நம்பி ஏமாந்தார்கள். கண்ணி வெடிகளில் காலை வைத்து எடுக்கவும் முடியாமல், விடவும் முடியாமல் தவித்தார்கள்."

"நிறுவனங்கள் கொடுக்கும் சொற்பப் பணமும் இன்ஷூரன்ஸ் பணமும் குடும்பத்துக்குச் சென்று சேரும். இது தவிர அவர்கள் வேலைசெய்திருந்த டீம் நண்பர்கள் ஆளுக்குக் கொஞ்சம் பணம் போட்டு ஏதாவது தருவார்கள். என்ன இருந்தாலும் ஓர் உயிரின் மதிப்பை எதைக் கொடுத்து நிரப்ப முடியும்?"

"அதிலும் பெண்கள் எல்லாம் கொழுத்த ஆடுகள்போலவே இருந்தார்கள். ஆண் ஆடுகளுக்குத் தலை வழுக்கை விழுந்து தொந்தி கொழுத்திருந்தது. உடற்பயிற்சி எதுவும் இல்லாமல் இப்படித் தின்றால் எழுந்துகூட வெளியில் செல்லாமல் வேலை பார்த்தால் ஹார்ட் அட்டாக் வராமல் வேறு என்ன வரும்? இன்னும் சிலர் இருந்தார்கள். அவர்கள் இருக்கையிலிருந்து அரை மணிக்கு ஒருமுறை எழுந்து வெளியில் சென்றுவிட்டு வருவார்கள். சரி. நடந்து உடலுக்கும் மனதுக்கும் உழைப்பு தருகிறார்கள் என்று பார்த்தால் அவர்கள் நேராக பேன்டரி செல்வார்கள். பேப்பர் குவளைகளில் தேநீர் எடுத்துக்கொண்டு லிப்ட்டில் இறங்கிச் செல்வார்கள். அலுவலகத்தின் வெளியில் சென்று தேநீர் குடித்தபடி சிகரெட் பிடிப்பார்கள். அரை மணி நேரத்துக்கு என்று கணக்கிட்டால்கூட நாளொன்றுக்கு இரண்டு பாக்கெட் சிகரெட் குடிப்பார்கள். அவர்களும் சீக்கிரமாக மேலே சென்றுகொண்டிருக்கிறார்கள்."

"முன்பெல்லாம் பொருள் பழசானால் அல்லது பழுதானால் மட்டும் அதைத் தூக்கிப் போட்டு விட்டுப் புதிதாக வேறு பொருள் வாங்குவார்கள். ஆனால் இப்போதெல்லாம் புதிதாக இருக்கும் பொருளையே தூக்கிப் போட்டுவிட்டு இன்னொன்று வாங்குகிறார்கள். ஒன்றை வாங்கி அதை எப்படிப் பயன்படுத்துவது என முழுதாகத் தெரிந்துகொள்வதற்குள் அடுத்த பொருளை வாங்க மனம் பறக்கிறது. இப்போதெல்லாம் பொருட்கள் பழசாவதில்லை. தொழில்நுட்பம் பழசாகிறது. அதனால்தான் புதுசு புதுசாகப் பொருட்களை வாங்குகிறார்கள் எனத் தோன்றியது."

"இந்த ஐடி கம்பெனியில் வேலைபார்த்தால் ட்ரீட் கொடுத்து கொடுத்தே சொத்து அழியும்போல."

"வேலை இருந்தால் செய். இல்லாவிட்டால் வீட்டுக்குப் போ. எட்டு மணிநேரத்தில் முடிக்க வேண்டிய வேலையப் பன்னிரண்டு மணிநேரம் செய்தால் பிரச்சினை உன்னிடம்தான் இருக்கிறது. ஏன் எட்டு மணிநேரத்தில் அதை முடிக்கவில்லை என்று யோசி. எட்டு மணிநேரத்தில் முடிக்க என்ன செய்ய வேண்டுமென்று யோசி."

"நாங்க அப்படி இருக்க முடியாது. மாசம் ஐம்பதாயிரம் வீட்டுக்கு லோன் கட்டுறோம். வருஷத்துக்கு ரெண்டு செல்ஃபோன் மாத்தணும். அடிக்கடி பார்ட்டி, ட்ரீட்னு வைக்கணும். பசங்கள இன்டர்நேஷனல் ஸ்கூல்ல படிக்கவைக்கணும். காருக்கு லோன் கட்டணும். இதுக்கு லட்ச ரூபாய் வந்தாக்கூட எங்களுக்குப் பத்தாது."

"எப்பவும் எல்லாத்துக்கும் தயாராகவே இருக்கணும். எது வேணா நடக்கலாம். ஆறு மாசத்துக்கு தேவையான பணத்தைச் சேர்த்து வச்சுக்கணும். லோன் அதிகமா வாங்காம இருந்தாலே சமாளிச்சுடலாம்."

"சமீப காலமாக மனிதர்களின் பைத்தியக்காரத்தனம் அதிகரித்து வந்ததாக அவளுக்குத் தோன்றியது. மனிதர்கள் தங்களுக்குத் தாங்களே பேசிக்கொள்கிறார்கள். தானே சிரித்துக்கொள்கிறார்கள். செல் ஃபோனைப் பார்த்துச் சிரிக்கிறார்கள். வாகனங்களைப் பார்த்துச் சிரிக்கிறார்கள். காரணம் இல்லாமல் கொலை செய்கிறார்கள். கொலை செய்யப்படுகிறார்கள். அளவுக்கு அதிகமாகக் கடன் வாங்குகிறார்கள். ஆடம்பரப் பொருட்களை வாங்கிக்குவிக்கிறார்கள். கடன்காரனுக்குப் பயந்து தற்கொலை செய்து கொள்கிறார்கள். திருடுகிறார்கள். பொய் சொல்கிறார்கள். கொள்ளையடித்த பணத்தை எடுத்துக்கொண்டு ஊரை விட்டு ஓடுகிறார்கள். சட்டையைக் கிழித்துக்கொண்டு அலைகிறார்கள்."

"இப்போது எங்கே திரும்பினாலும் கார்பரேட் சாமியார்களின் பேனர்கள் இருக்கின்றன. ஆண்களும், பெண்களும் கும்பல் கும்பலாக அவர்களிடம் சென்று யோகா கற்றுக்கொள்கிறார்கள். நல்ல விஷயம்தான். ஆனால் ஊழியர்களுக்கு அல்ல. அந்தச் சாமியார்களுக்கு. அவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் புரள்கிறது. யோகா வகுப்புகளுக்கு மாதம் ஐந்தாயிரம்வரைக்கூடச் சில சாமியார்கள் வாங்குகிறார்கள்."

"இவ்வளவு செலவு செஞ்சு யோகா கத்துக்கறத்துக்குப் பதில் சாயங்காலம் அலுவலகத்திலிருந்து கொஞ்சம் சீக்கிரம் கிளம்பி வீட்டுக்குப் போனால் என்னவென்று நினைத்தான். அதில் சில புத்திசாலிகள் மாலை ஆறு மணிவரை வேலைசெய்துவிட்டுப் பிறகு அலுவலகத்திலேயே நடத்தப்படும் யோகா வகுப்புகளுக்குச் செல்வார்கள். அவர்களைப் பார்த்தால் கார்த்திக்கிற்கு தன் ஊரில் இரவில் ஆலமரத்தில் அமர்ந்திருக்கும் மண்ணாந்தைகள்தான் நினைவுக்கு வரும்."

"எந்தத் தொழிலாளியை நம்பியும் முதலாளி இல்லை. எந்த முதலாளியை நம்பியும் தொழிலாளி இல்லை."

Monday, July 30, 2018

பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா?

ஜூலை மாத அந்திமழை இதழ் 'பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா?' எனும் தலைப்பில் பொறியியல் கல்வியின் இன்றைய நிலைமையைப் பற்றி விவாதித்திருக்கிறது. அந்த கட்டுரைகள் உங்கள் பார்வைக்கு. எழுத்துக்கள் சிறியதாக தெரிந்தால், படங்களை தரவிறக்கம் செய்து பெரிதுபடுத்தி படித்துக்கொள்ளலாம்.
உபரி செய்தி: