Showing posts with label startup disk creator. Show all posts
Showing posts with label startup disk creator. Show all posts

Mar 9, 2016

உபுண்டுவில் USB bootable disk உருவாக்குவது எப்படி?

"தரவிறக்கம் செய்த ISO கோப்பினை extract செய்து அதை CD/DVD அல்லது Pendrive இல் பிரதி(copy)யெடுத்துவிட்டு, அவற்றின் மூலமாக கணினியை பூட் செய்தால் இயங்குதளத்தை நிறுவ முடியாதா?" என என்னிடம் நிறைய நண்பர்கள் கேட்பதுண்டு, அதற்கான பதில் "முடியாது" என்பதே. கணினியை பூட் செய்ய வேண்டுமென்றால், bootable -ஆக இருக்கும் ஒரு கருவியைக் கொண்டுதான் பூட் செய்ய முடியுமே தவிர மற்ற எவற்றாலும் முடியாது. அதுபோல, உபுண்டு இயங்குதளத்தை தரவிறக்கம் செய்தபின், அதை கணினியில் நிறுவ வேண்டுமானால், முதலில் உபுண்டு ISO கோப்பினை CD/DVD யிலோ அல்லது Pendrive-லோ பூட்டபிளாக மாற்றிக்கொள்ள வேண்டும். அதன்பின்தான் live ஆக பயன்படுத்துவதையோ, நிறுவுதலையோ தொடங்க வேண்டும்.

உபுண்டுவை கணினியில் நிறுவுபவர்கள் இரண்டு வகையினர். ஏற்கனவே உபுண்டு இயங்குதளமோ அல்லது வேறு ஏதாவது ஒரு லினக்ஸ் இயங்குதளமோ வைத்திருந்து அதில் உபுண்டுவை நிறுவுபவர்கள், இவர்கள் முதல் வகையினர். இரண்டவாது வகையினர், விண்டோஸ் இயங்குதளம் மட்டும்தான் வைத்திருப்பார்கள், அதோடு உபுண்டுவை நிறுவ வேண்டும் என நினைப்பவர்கள்.

இப்போது நாம் பார்க்கப்போவது முதல் வகையினருக்கானது. அதாவது உபுண்டு வைத்திருப்பவர்களுக்கானது. நீங்கள் ஏற்கனவே உபுண்டு வைத்திருந்தால் மிக எளிமையாக Pendrive -இல் உபுண்டுவை bootable மாற்றிக்கொள்ள முடியும். இதற்கென தனியாக எந்தவொரு Application -ஐயும் நீங்கள் நிறுவ வேண்டியதில்லை. Startup Disk Creator எனும் Application உபுண்டுவுடன் இணைந்தே வருகிறது.

இதைக் கொண்டு Pendrive-இல் உபுண்டுவை bootable ஆக மாற்றுவது எப்படி? என்றுதான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

தேவையானவை:

1.Ubuntu ISO image
2.Pendrive(குறைந்தது 2GB அளவு இருக்கவேண்டும், அதிகபட்சமாக எத்தனை GB வேண்டுமானாலும் இருந்துகொள்ளலாம். அந்த Pendrive இல் உள்ள அனைத்து கோப்புகளையும் backup எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். bootable ஆக மாற்றும் போது Pendrive-இல் உள்ள தகவல்கள் அனைத்தும் அழிந்துவிடும்.)

படி சுழியம்:
முதலில் உங்களுக்குத் தேவையான உபுண்டுவை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். உபுண்டுவில் எந்த பதிப்பை தரவிறக்கம் செய்ய வேண்டும்? என தெரிந்து கொள்ள இங்கு செல்லவும்.

படி ஒன்று:
Pendrive-ஐ கணினியில் இணைத்துவிட்டு, Dash Home சென்று startup disk creator என தட்டச்சு செய்து Startup Disk Creator Application ஐ திறந்து கொள்ளுங்கள்.


படி இரண்டு:
தரவிறக்கம் செய்த ISO கோப்பினை தேர்வு செய்ய 'Other' எனும் பொத்தானை அழுத்துங்கள். தரவிறக்கம் செய்த ISO கோப்பினை தேர்வு செய்து 'Open' எனும் பொத்தானை அழுத்துங்கள்.



படி மூன்று:
Disk to use எனும் பெட்டியில், தேவையான பென்டிரைவை தேர்வுசெய்து கொள்ளுங்கள்(ஒரே ஒரு பென்டிரைவ்தான் என்றால் பிரச்சனையில்லை)




படி நான்கு:
இறுதியாக 'Make Startup Disk' எனும் பொத்தானை அழுத்துங்கள். இப்போது உபுண்டு ISO பென்டிரைவில் bootable மாறத்தொடங்கும். இடையில் ஒரு இடத்தில் கடவுச்சொல் கேட்கும் அப்போது உங்கள் உபுண்டுவின் கடவுச்சொல்லை உள்ளீடு செய்து 'Authenticate' எனும் பொத்தானை அழுத்துங்கள்.



படி ஐந்து:
Bootable Installation முடிந்த பிறகு 'Installation Complete' எனும் செய்திபெட்டி(information box) கிடைக்கும். Quit எனும் பொத்தானை அழுத்தவும். இப்போது நீங்கள் வெற்றிகரமாக Ubuntu USB bootable disk -ஐ உருவாக்கிவிட்டீர்கள்.



படி ஆறு:
கணினியை மறுதொடக்கம் செய்து, BIOS திரை வரும்போது boot device options -க்கான key யை அழுத்தி Pendrive தேர்வுசெய்து Enter key ஐ அழுத்துங்கள்.(பெரும்பாலும் F2, F12, F10 key-கள் boot device option-க்கு கொடுக்கப்பட்டிருக்கும். கணினியில் இருக்கும் BIOS-ஐப் பொருத்து இது மாறுபடும்.) இப்போது உபுண்டு Pendrive -இல் இருந்து தொடங்க ஆரம்பிக்கும். Live, Install உங்களுக்கு எது தேவையோ அதை தேர்வுசெய்துவிட்டு, அதற்கான வேலைகளைப் பார்க்க வேண்டியதுதான்.


References:

நன்றி: எனது நண்பர் கிருஷ்ணன் அவர்களின் அன்பான வேண்டுகோளுக்கிணங்க எழுதப்பட்டது.
 

Mar 5, 2014

dd கட்டளை - முனையத்தில் ஒரு அற்புதமான Startup Disk Creator Tool

இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்யப்படும் லினக்ஸ் இயங்குதளங்கள் பெரும்பாலும் ISO கோப்புகளாகவே கிடைக்கின்றது. அவ்வாறு ISO கோப்புகளாக தரவிறக்கம் ஆகும் இயங்குதளங்களை CD அல்லது DVD அல்லது பென்டிரைவ் இவைகளில் ஏதாவது ஒன்றில் பூட்டபிளாக எழுதி(Burning), அதன்மூலம் கணினியினை பூட் செய்து இயங்குதளத்தை நிறுவலாம் அல்லது லைவ் மோடில்(நிகழ் வட்டு) பயன்படுத்தலாம். CD/DVD யாக இருக்கும் பட்சத்தில் Nero, Brasero, K3B அல்லது ஏதாவது ஒரு ISO Image Burner மென்பொருள் கொண்டு ISO கோப்பினை CD/DVD எழுதலாம். பென்டிரைவின் வருகைக்குப் பிறகு, CD/DVD யின் ஆதிக்கம் மிகவும் குறைந்து விட்டது.  பாடல்கள் கேட்பதற்கே இப்பொழுதெல்லாம் பென்டிரைவினைத்தான் அதிகமாக பயன்படுத்துகின்றனர். அப்படியிருக்கையில் இன்றைக்கு இயங்குதங்களங்களை நிறுவுவதற்கு பெரும்பாலும் Pendrive தான் பயன்படுத்தப்படுகின்றது. விண்டோஸ் இயங்குதளத்தை பொறுத்த மட்டிலே பென்டிரைவில் எழுதிக்கொள்ளவதற்கென தனியாகவே USB Creating Tool கிடைக்கிறது.

அதுபோல உபுண்டுவை பொறுத்தவரையில் Startup Disk Creator Tool இருக்கிறது. இதன்மூலம் நாம் உபுண்டு இயங்குதளத்தின் ISO கோப்புகளை Pendrive இல் Bootable ஆக எழுதி உபுண்டு இயங்குதளத்தை நிறுவுவதற்காகவோ அல்லது Live ஆக பயன்படுத்தி பார்ப்பதற்காகவோ பயன்படுத்திக்கொள்ளலாம்.

dd கட்டளை மூலமாக, உபுண்டு இயங்குதளத்தில் இருந்து கொண்டோ அல்லது வேறு ஏதாவது ஒரு லினக்ஸ் வழங்கல்களில் இருந்து கொண்டோ, அனைத்து  லினக்ஸ் வழங்கல்களையுமே(Ubuntu, Kubuntu, Xubuntu, Lubuntu, Fedora, CentOS, OpenSUSE, etc....) பென்டிரைவில் Bootable ஆக மாற்ற முடியும். நாம் dd கட்டளையினை முனையத்தின் மூலமாகதான் செயல்படுத்த வேண்டும். dd கட்டளை மூலம் பென்டிரைவினை Bootable ஆக மாற்றி பயன்படுத்தும் போது மிகவும் விரைவாக செயல்படுகிறது. அதிகபட்சமாக 40 வினாடிகளில் இருந்து 45 வினாடிகளுக்குள் உபுண்டு Live Desktop கிடைத்து விடுகிறது. அதுபோலவே Fedora, CentOS மற்றும் OpenSUSE வழங்கல்களும்.

dd கட்டளையின் மூலமாக பென்டிரைவினை Bootable ஆக மாற்ற முடியும் என்ற விஷயம் எனக்கு ரொம்ப நாளாக தெரியாது. கடந்த ஜனவரி மாத Open Source For You(Linux For You) இதழில் OpenSUSE 13.1 இன் ISO கோப்புகளை கொடுத்திருந்தார்கள். அது எப்படி செயல்படுகிறதென மடிக்கணினியில் சோதித்துப் பார்ப்போமே என நினைத்தேன். அதனால் பென்டிரைவில் பூட்டபிளாக மாற்றி பயன்படுத்திப் பார்ப்போமே என முடிவு செய்தேன். உதவிகளைப் பெறுவதற்காக OpenSUSE இன் இணையதளத்திற்குச் சென்றேன். அங்குதான் dd கட்டளையினைப் பயன்படுத்தி பென்டிரைவில் Bootable மாற்றும் வழிமுறைகளை கொடுத்திருந்தார்கள். உடனே dd கட்டளையினைக் கொண்டு OpenSUSE 13.1 ஐ பென்டிரைவில் Bootable ஆக மாற்றினேன். அற்புதமாக வேலை செய்தது, கடுமையான வேகமாகவும் இருந்தது.

நமக்குத்தான் மூளை சும்மாவே இருக்காதே. அதனாலே இதே dd கட்டளை Ubuntu, Fedora, CentOS, Kubuntu, Xubuntu, Lubuntu மற்றும் Remastersys மூலமாக தயார் செய்த Customize Ubuntu ஆகிய வழங்கல்களின் ISO கோப்புகளுக்கு வேலை செய்கிறதா என சோதித்துப் பார்த்தேன். மேற்கண்ட அனைத்து வழங்கல்களுமே அற்புதமாக வேலை செய்தது. மிக்க மகிழ்ச்சியடைந்தேன். காரணம்? ஒவ்வொரு வழங்கல்களுக்கெனவும் ஒரு USB Creator Tool ஐ தேடிக்கிட்டு, இல்லேனா ஏதாவது ஒரு Graphical USB tool ஐக் கொண்டு Bootable ஆக மாற்றிக்கொண்டு இருப்பதற்கு பதிலாக ஒரே கட்டளையின் மூலமாக அனைத்து வழங்கல்களையும் பென்டிரைவில் பூட்டபிளாக மாற்றி விடலாம் என்பது வசதியான ஒன்றுதேனே, இதான் காரணம். dd கட்டளை, அனைத்து வழங்கல்களுக்கும் ஒரே Tool ஆக இருப்பதோடு, மிகவும் வேகமாகவும் இருக்கிறது.

ஆகையால் இனிமேல் தோழர்கள் அனைவரும் பென்டிரைவில் லினக்ஸ் வழங்கல்களை பூட்டபிளாக மாற்ற வேண்டுமென்றால் dd கட்டளையையே பயன்படுத்துங்கள். உங்களுக்கு நேரம் மிச்சமாகும்!

dd கட்டளை மூலமாக பென்டிரைவினை Bootable ஆக மாற்றுதல்:

படி ஒன்று:



முதலில் Disk Utility மூலமாக பென்டிரைவினுடைய Device Identification ஐ கண்டுபிடிக்கவும். அடுத்ததாக பென்டிரைவினை Unmount செய்யவும்.

படி இரண்டு:

முனையத்தை(Terminal) திறந்து கொள்ளுங்கள், அதன்பின் கீழ்காணும் கட்டளையினை இயக்குங்கள்.



sudo dd if=/location/of/your/ISO/Image of=/Device/Identification/of/Pendrive

உதாரணமாக நான் /home/kathirvel/Azureus Downloads எனும் அடைவிற்குள்(Folder) CentOS-6.5 னுடைய ISO கோப்பினை வைத்திருந்தேன். Disk Utility இல் காட்டியுள்ளதுபடி என்னுடைய பென்டிரைவின் Device Identification /dev/sdb . ஆகையால்,

நான் முனையத்தில் கீழ்கண்டவாறு கட்டளையினை கொடுத்துள்ளேன்.

sudo dd if=/home/kathirvel/Azureus\ Downloads/CentOS-6.5-i386-LiveCD/CentOS-6.5-i386-LiveCD.iso of=/dev/sdb