Showing posts with label chrome unicode tamil font problem. Show all posts
Showing posts with label chrome unicode tamil font problem. Show all posts

Aug 4, 2014

கூகுள் குரோமில் தமிழ் எழுத்துக்கள் தெளிவாக தெரிய


/usr/share/fonts/opentype/freefont/ அடைவிற்குள் உள்ள அனைத்து font களையும் நீக்கிவிடவும். அதன்பின் குரோம் உலாவியை மூடிவிட்டு, புதிதாக திறந்து தமிழ் தளங்களை பார்த்தால் தமிழ் எழுத்துக்கள் தெளிவாக தெரியும்.



May 8, 2014

Kubuntu 14.04 LTS இல் எழுத்துக்கள் அழகாக தோற்றமளிக்க

Kubuntu வைப் பற்றி ஏற்கனவே இரண்டு பதிவுகள் எழுதியிருந்தேன். அதனுடைய தொடர்ச்சியாகவும் இந்த பதிவை எடுத்துக்கொள்ளலாம். உபுண்டு லினக்ஸின் புதிய பதிப்பு 14.04 LTS அண்மையில்தான்(ஏப்ரல்-17 2014) வெளியிடப்பட்டது. உபுண்டு வழங்களின் கிளை வழங்களான குபுண்டுவும் அன்றைய தினமே வெளியிடப்பட்டது. என்னுடைய கிராமத்தில் கடுமையான மின்வெட்டு நிலவிய காரணத்தினால் 1GB அளவுள்ள குபுண்டுவை தரவிறக்கம் செய்வது என்பது இயலாத காரியமாக இருந்தது. ஆனால் நல்லதொரு வாய்ப்பாக இந்த மே மாத Open Source For You(LINUX For You) இதழுடன் இணைப்பாக வந்த DVD யில் Ubuntu(32, 64 bit), Kubuntu(32-bit) மற்றும் Lubuntu ஆகிய வழங்கல்கள் கொடுக்கப்பட்டன. ஆகையால் தரவிறக்கம் செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. குபுண்டுவை கணினியில் நிறுவிய பின் அதனுடைய எழுத்தின் தோற்றங்கள் எனக்கு திருப்தியாக இருக்கவில்லை. அதோடு மட்டுமில்லாமல் தமிழ் எழுத்துக்களும் கூர்மையாக(sharp) இல்லாமல் அசிங்கமாக தோற்றமளித்தது. இது தொடர்பாக இணையத்தில் தேடிக்கொண்டிருந்த போதுதான் கீழ்காணும் முறையில் எழுத்துக்களை அமைத்தால் அழகாக தோற்றமளிக்கும் என ஒருவர் குறிப்பிட்டிருந்தார். அதன்படி செய்து பார்த்தபோதுதான் குபுண்டு மட்டுமல்ல, தமிழ் எழுத்துக்களும் அழகாக தோற்றமளித்தது. குறிப்பாக Libreoffice Writer இல் தமிழ் எழுத்துக்கள் அற்புதமாகவும், தெளிவாகவும் தெரிந்தது.



படி 1:



Font Settings க்குச் சென்று Fixed width ஐ Ubuntu Mono 12, Small ஐ Ubuntu 9, Windows title ஐ Ubuntu 10 Bold எனவும், மற்ற அனைத்தையும் Ubuntu, Size 10, Regular என அமைக்கவும்.


படி 2:


Use Anti-aliasing என்பதை Enabled செய்யவும், configure எனும் பொத்தானை அழுத்தி Exclude Range என்பதை Uncheck செய்யவும், Sub-pixel rendering ஐ RGB க்குச் set செய்யவும். Hinting style என்பதை Slight என மாற்றம் செய்து OK கொடுக்கவும் அதன்பின் Apply பொத்தானை அழுத்தவும். இறுதியாக Logout செய்துவிட்டு Login செய்தால் குபுண்டு(Kubuntu) அழகாக தோற்றமளிக்கும்.

Oct 7, 2013

கூகுள் குரோம் இணைய உலாவியில் தமிழ் ஒருங்குறி எழுத்து பிரச்சனை

என்னுடைய மடிக்கணினியில் உபுண்டு 12.04 LTS நிறுவியுள்ளேன்.  இணைய பயன்பாட்டிற்கு கூகுள் குரோம் இணைய உலாவியைப்  பயன்படுத்தி வருகிறேன். ஏனோ தெரியவில்லை பயர்பாக்ஸ்(நெருப்பு நரி) உலாவி சரிவர இயங்க மாட்டேன்ங்கிறது.  நானும் விரும்பி பயன்படுத்துவதில்லை.  தமிழக அரசின் இணையதளம் தொடர்பாக எழுத்துரு பிரச்சனை வந்ததால், சில ஒருங்குறி தமிழ் எழுத்துருக்களை இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்து நிறுவினேன்.  வந்தது சிக்கல்!

இதற்கு முன்பாக நன்றாக தெளிவாக தெரிந்து வந்த தமிழ் எழுத்துக்கள் தெளிவில்லாமல் தெரிய ஆரம்பித்தது.   அப்புறம் என்ன எப்பொழுதும் போல இணைய தேடுதல் வேட்டை தீவிரமானது.   வேட்டையில் தீர்வை கண்டுபிடித்தேன்.

நான் எழுத்துருக்களை நிறுவுவதற்கு உபுண்டுவினுடைய இருப்பியல்பாக இருக்கும் வசதியையே பயன்படுத்தினேன்.


இந்த முறையில் எழுத்துருக்களை நிறுவும் பொழுது அது Home அடைவில் .fonts எனும் அடைவிற்குள் நிறுவப்படுகிறது.  ஆகையால் Home->.fonts அடைவிற்குள் சென்று நான் தரவிறக்கம் செய்து நிறுவிய இரண்டு எழுத்துருக்களையும் நிரந்தரமாக அழித்தேன்.  தீர்ந்தது பிரச்சனை!