Showing posts with label GPRS மூலம் லினக்ஸில் இன்டர்நெட். Show all posts
Showing posts with label GPRS மூலம் லினக்ஸில் இன்டர்நெட். Show all posts

May 10, 2014

குபுண்டுவில் KPPP மூலமாக Nokia 6300 + Bluetooth + Airtel GPRS பயன்படுத்தி இணைய இணைப்பை ஏற்படுத்துதல்


மடிக்கணினியில் நான் அடிக்கடி செய்யும் வேலைகள் என்னவென்றால், வலைப்பதிவிற்காக தமிழில் கட்டுரைகள் எழுதுவது, இணையத்தில் உலாவுவது மற்றும் நிரல்கள் எழுதிப்பார்ப்பது இவைகள்தான். இந்த வேலைகள் அனைத்தையும் உபுண்டு லினக்ஸ் மூலமாகத்தான் மேற்கொள்கிறேன். ஆகையால் உபுண்டுவை நிறுவியவுடன் மேற்கண்ட வேலைகளைச் செய்வதற்கு ஏற்ப இயங்குதளத்தை மாற்றி அமைக்கும் பணியில் ஈடுபடுவேன். அண்மையில் என்னுடைய மடிக்கணினியில் புதிதாக நிறுவிய குபுண்டு லினக்ஸில் தமிழ் தட்டச்சு தொடர்பான அமைப்புகளை சில பல போராட்டங்களுக்குப் பிறகு ஏற்படுத்தி விட்டேன். தமிழுக்காக போராடிய விபரங்களெல்லாம் அடுத்தடுத்த பதிவுகளில் விரிவாக எழுதப்படும். ஆனால் இணைய இணைப்பை குபுண்டுவில் ஏற்படுத்துவதில்தான் பிரச்சனை விஸ்பரூபம் எடுத்தது. என்னிடம் இருப்பது ஒரு Nokia 6300 கைப்பேசி மற்றும் தோழர் பா.சக்திவேல் அவர்களினுடைய Bluetooth Stick இவை இரண்டையும் வைத்துதான் இணையத்தை பயன்படுத்தி வருகிறேன். அதாவது கைப்பேசியில் GPRS மூலம் கிடைக்கும் இணைய இணைப்பை Bluetooth Stick மூலமாக கைப்பேசியை மடிக்கணினியுடன் இணைத்து அந்த இணைய இணைப்பை மடிக்கணினியில் பயன்படுத்துதல். உபுண்டுவில் Mobile Broadband இணைப்பை ஏற்படுத்தியது போல, குபுண்டுவில் அவ்வளவு எளிதாக இணைப்பை ஏற்படுத்த முடியவில்லை. சுருக்கமாகச் சொன்னால் குபுண்டுவில் Mobile Broadband வேலை செய்யவில்லை.

இந்த விஷயத்தில் குபுண்டுவானது இப்படி காலை வாரிவிடுமென்று நான் எதிர்பார்க்கவில்லை. சரி இனிமேல் இதைப்பத்தி கவலைப்பட்டுக்கொண்டிருப்பதால் ஒன்றும் ஆகப்போவதில்லை, அடுத்தகட்ட வேலையில் இறங்கிவிடுவோம் என முடிவு செய்து இணையத்தில் தேட ஆரம்பித்தேன். இணையத்தில் இது தொடர்பாக தேடிய போது 'குபுண்டுவில் Mobile Broadband வேலை செய்யாது' என தெளிவாக சொல்லிவிட்டார்கள். இன்னும் சில ஐடியாக்கள் கூறியிருந்தார்கள் அதெல்லாம் படித்துப்பார்த்து விட்டது எனக்கு தலைச்சுற்றல்தான் வந்தது. சரி அடுத்துகட்ட நடவடிக்கை என்ன? wvdial அல்லது KPPP இவைகள் மூலமாகத்தான் இணைக்க முடியும். wvdial மூலமாக இணைத்துவிட முடியும் என்ற நம்பிக்கை என்னிடம் இருந்தது ஆனால் அதன்மூலமாகவும் இணைக்க முடியவில்லை. கடைசியாக இருப்பது KPPP ஒன்றுதான், wvdial மூலமாகவே இணைக்க முடியவில்லை KPPP யால் முடியுமா என்ற சந்தேகத்துடனே செய்துப்பார்த்தேன் கிடைத்தது வெற்றி! வெற்றி!! வெற்றி!!!

குபுண்டுவில் Nokia 6300 + Bluetooth + Airtel GPRS மூலமாக இணைப்பை ஏற்படுத்துதல்:


முனையத்தில் sudo apt-get install kppp wvdial bluez-utils bluez-tools எனக் கொடுத்து பொதிகளை நிறுவிக்கொண்டேன். அடுத்து Bluetooth Stick ஐ USB Port இல் இணைத்தேன். அதன்பின் முனையத்தில் hcitool scan கட்டளையை இயக்கினேன். இந்த கட்டளையை இயக்கியவுடன் Bluetooth Stick இன் MAC Address கிடைத்தது. அடுத்து sdptool search dun கட்டளையை இயக்கினேன். அதில் channel என்பதில் கிடைக்கும் மதிப்பை குறித்துக்கொண்டேன். எனக்கு 1 என கிடைத்தது.


அடுத்து முனையத்தில் sudo kate /etc/bluetooth/rfcomm.cfg எனக்கொடுத்து
bind yes;
device 00:1C:35:5F:60:5A;
channel 1;
ஆகியவைகளை சரியாக உள்ளீடு செய்தேன்.


அதன்பின் முனையத்தில் sudo rfcomm show 0 எனக்கொடுத்தேன் அதில் வெளியீடாக rfcomm0: 00:1C:35:5F:60:5A channel 1 clean என வெளியீடு கிடைத்து. அதன்பின் KPPP ஐத் திறந்து கீழ்காணும் முறையில் அமைத்தேன். படங்களைப் பார்க்கவும்.










உதவி:

Jun 5, 2010

Nokia Xpress Music 5310c அலைபேசியில் Aritel GPRS வசதியினைக் கொண்டு உபுண்டு 9.04 ல் Internet Connect செய்வது எப்படி?

இன்று கணினி பயன்படுத்தும் அனைவரும் Internet என்ற இணையவசதியினை பயன்படுத்துகின்றனர்.இந்த இணைய சேவையை நிறைய நிறுவனங்கள் அவர்களுடைய பாணியில் வழங்குகின்றனர்.முந்தைய நாளிலெல்லாம் எனக்கு தெரிந்து இண்டர்நெட்டை பயன்படுத்த Dial Up modem த்தைக்கொண்டு BSNL தொலைதொடர்பு நிறுவனத்திடமிருந்து Dial up account னினை பெற்று அதன்மூலம் இணையத்தை பயன்படுத்தி வந்தோம்.ஆனால் இன்றைய நாளிலோ நிலைமையே வேறு ஏனென்றால் இணையத்தை பயன்படுத்த எத்தனை வசதிகள் Reliance Netconnect stick, Tata Indicam Net Stick, Airtel Net Stick, MTS net Stick, BSNL net Stick, BSNL broadband, Reliance Broadband, Airtel Broadband இன்னும் எத்தனையோ வசதி இது தவிர செல்பேசிகளில் GPRS வசதியின் மூலம் இணைய வசதி இவ்வாறு இணையத்தை பயன்படுத்த எவ்வளவோ வழிகள்.இந்த வசதிகளிலேயே மிகவும் எளிமையாக குறைவான கட்டணத்தில் இணையத்தை பெற ஒரே வழி செல்பேசிகளில் பயன்படுத்தப்படும் GPRS வசதிதான்.என்ன ஒன்று உங்களுடைய செல்பேசி GPRS வசதியுள்ள செல்பேசியாக இருக்க வேண்டும்.GPRS வசதியின் மூலம் பெறப்படும் இணைய இணைப்பின் வேகம் குறைவாகத்தான் இருக்கும்.நான் இந்த வலைப்பூவினை படத்துடன் விளக்கி எழுதும் அளவிற்கு வேகம் போதுமானதாக இருக்கிறது.தரவிறக்கம் வேகம் ஒரளவு உள்ளது நான் இறுதியாக எழுதிய நான்கு பதிவுகள் இந்த வசதியினைக் கொண்டுதான் எழுதப்பட்டது.நீங்கள் GPRS வசதியுள்ள எந்த நிறுவனத்தின் செல்பேசி வைத்திருந்தாலும் அந்த நிறுவனத்தினுடைய செல்பேசியுடன் ஒரு வட்டுக்கொடுப்பார்கள் அதில் உள்ள மென்பொருளை நிறுவி விண்டோஸ் இயங்குதளத்தில் உங்கள் செல்பேசியில் உள்ள GPRS வசதிமூலம் விண்டோஸ் இயங்குதளத்தில் இணையத்தில் உலாவலாம்.ஆனால் செல்பேசி நிறுவனங்கள் எதுவும் லினக்ஸ் இயங்குதளத்தில் செல்பேசியினை கணினியுடன் இணைப்பதற்கான மென்பொருளகளை வழ்ங்குவதாக தெரியவில்லை ஆனால் எந்த மென்பொருள்களின் உதவியல்லாமல் உபுண்டு லினக்ஸில் நாம் செல்பேசியில் உள்ள GPRS வசதியின் மூலம் உபுண்டு லினக்ஸில் Internet Connect செய்து பயன்படுத்தலாம்.நான் இங்கு கொடுத்துள்ளது Nokia Xpress Music 5310c செல்பேசி மற்றும் Airtel Sim card க்கானது.ஆனால் நான் சொல்லியிருக்கும் இந்த வழிமுறை Nokia செல்பேசிக்கு மட்டுமல்ல மற்ற நிறுவனங்களினுடைய செல்பேசிகளுக்கும் பொருத்தமாக இருக்கும் நான் nokia செல்பேசி மட்டுமில்லாது என் நண்பர் இரா.குமரேசன் அவர்களினுடைய LG மாடல் செல்பேசி, பிரகாஷ் அவர்களினுடைய Samsung மாடல் செல்பேசி, யோகேஷ் அவர்களினுடைய Samsung corby மாடல் செல்பேசி ஆகியவைகளையும் பயன்படுத்தியுள்ளேன்.சரி விஷயத்திற்கு வந்து விடுகிறேன்.
Nokia Xpress Music 5310c,Airtel GPRS இவற்றைக் கொண்டு எப்படி இணையத்தை இணைத்தேன் என்பதை விளக்கமாக கூறிவிடுகிறேன்.
  • முதலில் என்னுடைய செல்பேசியில் Airtel GPRS Setting -யினை Airtel நிறுவனத்திடமிருந்து வாங்கி செல்பேசியில் சேமித்துக்கொண்டேன்.செல்பேசியினை off செய்து on செய்தேன்.
  • Menu => internet => Browser சென்று இணையதள முகவரிகளைக்கொடுத்தேன் மிக அழகாக இணைந்ததுடன் இணையத்தில் உலாவ முடிந்தது.சரி செல்பேசி பக்கம் உள்ள வேலைகள் முடிந்து விட்டது.அடுத்து உபுண்டு 9.04 லினக்ஸ் பக்கமாக உள்ள வேலைகள் அதை படத்துடன் காண்போம்.
  • செல்பேசியினுடைய Data Cable -னை கணினியுடைய USB port ல் இணைத்தேன்
  • System => Preferences சென்று Network Connections என்பதை தேர்வு செய்து Click செய்யுங்கள்.படம் இரண்டில் உள்ளது போன்ற திரைக் காண்பிக்கப்படும்.
படம்-1

படம்-2
  • படம்-2 -ல் உள்ள திரையில் Mobile Broadband என்பதை தேர்வு செய்து Add Button ஐ அழுத்துங்கள்.அழுத்தியவுடன் படம்-3 உள்ளது போன்ற திரைக்காண்பிக்கப்படும்
படம்-3
  • படம்-3 உள்ள திரையில் Forward Button ஐ அழுத்துங்கள்.Forward Button ஐ அழுத்தியவுடன் படம்-4 -ல் உள்ளது போன்ற திரைக்காண்பிக்கப்படும்

படம்-4
  • படம்-4 ல் உள்ளது திரையில் Country என்பதற்கு கீழ் India வையும், Provider என்பதற்கு கீழ் Airtel என்பதையும் தேர்வு செய்யவும் நீங்கள் Airtel அல்லாமல் வேறோரு sim card அதாவது vodafone,BSNL வைத்திருந்தால் அவற்றை தேர்வு செய்யவும்.இவற்றையெல்லாம் தேர்வு செய்து Forward Button ஐ அழுத்துங்கள் அழுத்தியவுடன் படம்-5 உள்ளதுபோன்ற திரைக் காண்பிக்கப்படும்.
படம்-5
  • படம்-5 -ல் Apply என்பதை click செய்யுங்கள்.Apply என்பதை click செய்தவுடன் படம்-6 -ல் உள்ளது போன்ற திரைக் காண்பிக்கப்படும்.
படம்-6
  • படம்-6 -ல் உள்ள திரையில் Airtel என்பதை தேர்வு செய்து Edit Button ஐ click செய்யுங்கள்.click செய்தவுடன் படம்-7 ல் உள்ள திரைக் காண்பிக்கப்படும்.
படம்-7
  • படம்-7 ல் உள்ள திரையில் Connect Automatically எனபதை டிக் செய்து Apply Button ஐ அழுத்துங்கள்.அழுத்தியவுடன் ஒரு சில வினாடிகளில் Connection Establish ஆகி விடும் பார்க்க படம்-8
படம்-8
இணைப்பு கிடைத்த பிறகு நெருப்பு நரியில் என்னுடைய வலைப்பூ

இணைப்பை துண்டிக்க Disconnect என்பதைக் click செய்யவும்