Showing posts with label பென்டிரைவ் Format. Show all posts
Showing posts with label பென்டிரைவ் Format. Show all posts

May 1, 2017

dd கட்டளையும் - பென்டிரைவை format செய்தலும்

லினக்ஸ் ISO கோப்புகளை bootable ஆக மாற்றுவதற்கு dd கட்டளை பயன்படுகிறது. CD/DVD-யில் இயங்குதளங்களை எழுதி அவைகளைக்கொண்டு கணினியில் இயங்குதளங்களை நிறுவுவது பழைய உத்தி. இன்றைக்கு இருக்கக்கூடிய பெரும்பாலான இயங்குதளங்களும் சரி, கணினிகளும் சரி பென்டிரைவில் இருந்து இயங்குதளங்களை நிறுவுவதற்கு ஒத்துழைக்கிறது.

மிக எளிதாக இன்றைக்கு கணினியில் இயங்குதளங்களை நிறுவிவிடலாம். ஒருகாலத்தில் கணினியில் இயங்குதளம் நிறுவுவது விண்ணில் ராக்கெட் விடுவதைப் போல இருந்தது.

இயங்குதளத்தின் ISO கோப்பு, ஒரு பென்டிரைவ், ISO கோப்பை பென்டிரைவில் bootable ஆக மாற்றுவதற்கு ஒரு மென்பொருள் இவை மூன்றும் இருந்தால் போதும் நிறுவத்தக்க வகையிலான பென்டிரைவை தயார் செய்துவிடலாம். அந்தவகையில் லினக்ஸ் இயங்குதளங்களில் ISO கோப்புகளை பென்டிரைவில் bootable ஆக மாற்றுவதற்கு பயன்படும் கட்டளைதான் dd. dd கட்டளை அதற்கு மட்டும்  பயன்படுவதில்லை. அதன் பயன்பாடு பலவகைகளில் இருக்கிறது அதில் bootable ஆக மாற்றுவதும் ஒன்று.

சரி விஷயத்திற்கு வருவோம். dd கட்டளையைக் கொண்டு பென்டிரைவை bootable ஆக மாற்றுவது எப்படி? என்பதைப் பற்றி இங்கு ஏற்கனவே எழுதியுள்ளேன். அவ்வாறு bootable ஆக மாற்றிய பிறகு அந்த பென்டிரைவைக் கொண்டு இயங்குதளத்தை நிறுவிக்கொள்ளலாம். ஆனால் எந்த தகவலையும் அந்த பென்டிரைவில் பதிய முடியாது அதில் இருப்பதை நீக்கவும் முடியாது. ஏன் என்றால் dd கட்டளையானது ISO கோப்பின் அளவிற்கு ஏற்ப பென்டிரைவை பார்ட்டிசியன் செய்துவிடும். மீதமிருக்கும் இடங்களை பார்ட்டிசியன் பிரிக்காமல் free space ஆக வைத்துவிடும்.

உதாரணமாக, உபுண்டு 16.04.2 LTS ISO கோப்பினை dd கட்டளைக் கொண்டு 8GB அளவுள்ள பென்டிரைவில் bootable ஆக மாற்றுகிறோம் என்றால். உபுண்டுவின் 16.04.2 LTS ISO கோப்பின் அளவு 1.4GB. 8GB யில் 1.4GB க்கு உபுண்டு 16.04.2 ISO கோப்பை எழுதிவிட்டு மீதமிருக்கும் இடங்களை free space ஆக விட்டுவிடும். நம்மால் 1.4GB அளவுள்ள இடத்தை format செய்து பயன்படுத்திக்கொள்ள முடியும் ஆனால் மீதமிருக்கும் இடங்களை பயன்படுத்த முடியாது. இந்த பிரச்சனையை தீர்ப்பது எப்படி என்றுதான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

சுருக்கமாக சொல்லவேண்டுமானால் dd கட்டளையைப் பயன்படுத்திய பிறகு pendrive-வை partition மற்றும் format செய்வது எப்படி என்று பார்க்கப்போகிறோம்.

லினக்ஸில் பார்ட்டிசியன்களை கையாள்வதற்கு fdisk கட்டளைப் பயன்படுத்தப்படுகிறது. fdisk கட்டளையை கவனமாக கையாள வேண்டும். இதில் சொல்லியிருக்கும் வழிமுறைகள் புதியவர்களுக்கு புரிந்துகொள்ள கொஞ்சம் சிரமாக இருக்கலாம். பென்டிரைவை கணினியில் சொருகிவிட்டு lsblk கட்டளையை இயக்கினால் பென்டிரைவின் partition number ஐ தெரிந்து கொள்ளலாம். கணிணியில் இருக்கும் hard disk -ஐ /dev/sda என்று லினக்ஸ் அடையளப்படுத்தியிருக்கும். வேறு எந்த storage device -உம் இணைக்கப்படாதபட்சத்தில், பென்டிரைவ் /dev/sdb என அடையளப்படுத்தப்படும். இது ஒரு உத்தேசமான கணிப்புதான். உறுதிப்படுத்திக்கொள்ள lsblk கட்டளையை இயக்கினால் தெரிந்து கொள்ளலாம்.

fdisk கட்டளையை இயக்குவதற்கு முன்பு bootable pendrive -இல் திறந்திருக்கும் partition களை unmount செய்யவேண்டும். Partition களை unmount செய்வதற்கு umount கட்டளை பயன்படுகிறது. கீழே உள்ள படத்தைப் பார்க்கவும்.



பென்டிரைவ் /dev/sdb என அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் பட்சத்தில் fdisk கட்டளை கீழ்கண்டவாறு இருக்கும்

sudo fdisk /dev/sdb

fdisk கட்டளையின் உள்ளீட்டு விபரங்கள்

p - பார்ட்டிசியன் விபரங்களை பட்டியலிடுதல்(print)
d - பார்ட்டிசியனை நீக்குதல்(delete)
n - பார்ட்டிசியனை உருவாக்குதல்(new)
w - பார்ட்டிசியன் தொடர்பான மாற்றங்களை எழுதுதல்(write)
q - வெளியேறுவதற்கு

'w'  இயக்காதவரையில் நாம் fdisk மூலமாக செய்த மாற்றங்கள் disk -இல் எழுதப்படாது. ஏதாவது தவறுதலாக செய்திருந்தால் வெளியேறிவிடலாம் எந்த பிரச்சனையுமில்லை. 'w' இயக்கிவிட்டால் மாற்றங்களை திரும்ப பெற முடியாது.





பென்டிரைவில் பார்ட்டிசியனை உருவாக்கியபிறகு அதை FAT32 கோப்பு முறைமையில் format செய்ய இந்த கட்டளையை இயக்கவும் sudo mkfs.vfat -n "KATHIRVEL" /dev/sdb1


format செய்த பின்பு முழுஅளவுடன் பென்டிரைவ்

May 31, 2010

லினக்ஸில் Pendrive -ஐ Format செய்வது எப்படி ?

இன்று பென்டிரைவ் என்பது அனைவரிடமும் இருக்கக்கூடிய ஒரு சாதனம்.Floppy Disk -ன் பயன்பாடு பென்டிரைவின் வருகைக்குப்பிறகு மிகவும் குறைந்து விட்டது.நான் பாலிடெக்னிக் படிக்கும் பொழுது என்னுடைய வகுப்பில் ஒரே ஒரு மாணவணிடம் மட்டும் தான் இருந்தது.நான் அப்பொழுது அதைப்பார்த்து ஆச்சரியப்பட்ட காலமும் உண்டு.இன்று கணினியில் உள்ள தகவலை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்து செல்ல பென்டிரைவ் ஒரு மிக முக்கியமான் தகவல் சேமிப்பு சாதனமாக ஆகிவிட்டது.பென்டிரைவின் பயன்பாடு இன்றைக்கு எந்த அளவு அதிகரித்துள்ளதோ அதே அளவு வைரஸ்(நச்சு நிரல்கள்) களும் பென்டிரைவின் மூலம் பரவிக்கொண்டு இருக்கிறது.இவ்வாறு பென்டிரைவில் நச்சு நிரல்கள் இருப்பதாக நமக்கு தெரிந்தால் நாம் செய்யும் முதல் வேலை பென்டிரவை Format செய்வது பெரும்பாலும் நாம் பென்டிரைவினை விண்டோஸ் இயங்குதளத்தில் வைத்துதான் Format செய்து இருப்போம்.இதே வேலையினை லினக்ஸ் இயங்குதளத்தில் மிக எளிமையாக முனையத்தின் மூலம் செய்து முடிக்கலாம்.இதற்காக நீங்கள் எந்த ஒரு மென்பொருளையும் லினக்ஸ் இயங்குதளத்தில் நிறுவ வேண்டியதில்லை சரி விஷயத்திற்கு வருகிறேன் பென்டிரைவை உபுண்டு லினக்ஸில் Format செய்வது எப்படி என்று பார்ப்போமா
  • பென்டிரைவை யூ.எஸ்.பி போர்டில் (USB port) சொருகுங்கள்

படம்-1
  • முனையத்தில் dmesg | tail என்று தட்டச்சு செய்து Enter key யினை அழுத்துங்கள் படம்-1 உள்ளது போன்ற செய்திகள் உங்களுக்கு கிடைக்கும்.அதில் நான் இரண்டு வரியினை மட்டும் தேர்வு செய்து காட்டியுள்ளேன் அதில் முதல் வரியில் sdb:sdb1 என்று காட்டியுள்ளது இதை குறித்துக்கொள்ளவும்.இவ்வாறு என்னுடைய கணினியில் காட்டியுள்ளது நீஙகள் உங்கள் உங்கள் கணினியில் காட்டும் செய்தியினை குறித்துக்கொள்ளுங்கள்.
  • உபுண்டு லினக்ஸில் Top Panel -லில் Places என்பதை க்ளிக் செய்தீர்களேயானால் கீழ் விரியும் வரிசையில் உங்களினுடைய பென்டிரைவ் mount செய்யப்பட்டு பென்டிரவிற்கு கொடுத்த பெயருடன் காட்டப்பட்டிருக்கும்.அதை கிளிக் செய்யவும்

படம்-2
  • க்ளிக் செய்தவுடன் படம்-2 உள்ளது போன்ற திரை காண்பிக்கப்படும் அதில் உங்களினுடைய பென்டிரைவின் பெயருக்கு அருகே ஒரு சிறிய செங்கோண முக்கோண வடிவில் ஒரு சிறிய icon இருக்கும் (சிவப்பு நிறத்தில் வட்டமிட்டுக் காட்டியுள்ளேன்) அதை மீது click செய்தீர்களேயானால் உங்களினுடைய பென்டிரைவ் Unmount ஆகிவிடும்.

படம்-3
  • பென்டிரைவ் unmount ஆகியவுடன் படம்-3 உள்ளது போன்று உங்களினுடைய பென்டிரைவ் காட்டப்படும்.
  • பென்டிரைவ் unmount ஆகியவுடன் முனையத்தை திறந்து
  • sudo mkfs.vfat -n ’R_KATHIRVEL’ /dev/sdb1 என்று கொடுத்து Enter key -யினை அழுத்துங்கள்.கடவுச்சொல்லை உள்ளீடச்சொல்லிக் கேட்கும் கடவுசொல்லை உள்ளிட்டு Enter key -யினை அழுத்துங்கள்.அவ்வளவுதான் பென்டிரைவ் Format ஆகிவிடும்.
  • இங்கு நான் R_KATHIRVEL என்று கொடுத்திருப்பது pendrive வினுடைய volume label (அதாங்க பென்டிரைவிற்கு பெயர்) -க்காக இந்த இடத்தில் நீங்கள் உங்களுக்கு விருப்பமான பெயரினை கொடுத்துக்கொள்ளலாம்.கண்டிப்பாக ' ' இவைகளுக்கு இடையில்தான் கொடுக்க வேண்டும்.
  • அடுத்து மிக மிக மிக முக்கியமான விஷயம் /dev/sdb1 என்று கொடுத்துள்ளது இதில் நீங்கள் sdb1 என்பதற்கு பதிலாக ஆரம்பத்தில் முனையத்தில் dmesg | tail கட்டளையை கொடுத்தவுடன் கிடைத்த செய்தியை நீங்கள் குறித்து வைத்திருப்பீர்களல்லவா அதைதான் இங்கு நீங்கள் கொடுக்க வேண்டும்.இதில் நீங்கள் கவனக்குறைவாக மாற்றிவோ கொடுத்துவிட்டீர்களேயானால் நீங்கள் மாற்றிக் கொடுத்த உங்களினுடைய வோறொரு டிரைவ் Format ஆகி விடும் உங்களினுடைய விலையுயர்ந்த தகவல்கள் இழக்க நேரிடும்.மிக கவனமாக இருக்கவும்.