Showing posts with label கல்லூரி காலங்கள். Show all posts
Showing posts with label கல்லூரி காலங்கள். Show all posts

Dec 18, 2015

கல்லூரி காலங்கள் - வெ.இறையன்பு


கல்லூரி காலங்கள் எனும் நிகழ்ச்சி பொதிகை தொலைக்காட்சியில் இரவு 10.30 மணிக்கு திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பப்படுகிறது. இந்நிகழச்சியை வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்கள் வழங்குகிறார்கள். நான் அலுவலகத்திலிருந்து வீட்டுக்குச் சென்றவுடன் இந்நிகழச்சியை தவறாமல் பார்ப்பேன். மிகவும் அருமையாக இருக்கும். அறிவுரையாக இல்லாமல் நண்பனோடு நண்பனாக தோளில் கைப்போட்டு பேசுவதுபோல் மிகவும் அழகாக கருத்துக்களை எடுத்துகூறுவார். அரைமணி நேரம் போவதே தெரியாது. இச்ச அதுக்குள்ள முடிந்துவிட்டதே என நினைக்கும் அளவுக்கு நிகழச்சி இருக்கும். கல்லூரி வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்ளலாம் என நினைப்பவர்களும், கல்லூரி வாழ்க்கையை வாழ்வின் முன்னேற்றுக்கு ஏணி படியாக அமைத்துக்கொள்வது எப்படி என நினைப்பவர்களும், அனைத்து கல்லூரி மாணவ மாணவிகளும், இளைஞர்களும் அவசியம் பார்க்கவேண்டிய நிகழ்ச்சி. இந்த தொடர் முழுவதும் பார்க்க முடிந்தால் நன்றாக இருக்குமே என நினைத்துக்கொண்டிருந்தேன். சரி யூடியுப் தளத்தில் தேடிப்பார்ப்போமே என நினைத்து தேடிப்பார்த்தேன். இதுவரை வந்த அனைத்து தொடர்களையும் பொதிகைத் தொலைக்காட்சி நிர்வாகத்தினர் யூடியுப் தளத்தில் பதிவேற்றியுள்ளனர். மிக்க மகிழச்சி அடைந்தேன். பொதிகை தொலைக்காட்சி நிர்வாகத்தினருக்கு ஆயிரமாயிரம் நன்றிகள். தரவிறக்கம் செய்ய இங்கு செல்லவும்.
நிகழ்ச்சியை நான் தரவிறக்கம் செய்த போது
இந்நிகழச்சி ஒளிபரப்பப்படுவதற்கு முன் அதைப்பற்றி வெ.இறையன்பு இ.ஆ.ப அவர்கள் கூறியது. "கல்லூரிப் பருவம் எவ்வளவு முக்கியமானது? இந்தப் பருவத்தில்தான் நாம கரியாகப் போகிறோமா? வைரமாகப் போகிறோமா? கூழாங்கல்லாகப் போகிறோமா? என்பது தீர்மானிக்கப்படுகிறது. இந்த டைம்ல நாம் எப்படி படிக்கிறோம்? எப்படி வாழ்க்கைய பார்க்கிறோம்? எப்படி கோரக்டரை வடிவமைச்சிக்கிறோம்? எப்படி நாம உலகத்தை அணுகிறோம்? எப்படி பண்புகளை வளர்த்துக்குறோம்? இதுதான் நம்மோட வெற்றிய தீர்மானிக்கப்போகிறது. இந்த பருவத்தைப் பொறுத்தவரைக்கும் இது ஒரு மகத்தான பருவம். சரியா கையாளுகிறவங்க பிற்காலத்துல மிகப்பெரிய தலைவர்களா, நிர்வாகிகளா மிகப்பெரிய வர்த்தகத்துல நிபுணர்களா, மிகப்பெரிய பேச்சாளர்களா, மிகப்பெரிய விஞ்ஞானிகளா வருவாங்க அதனால இந்த பருவத்துல முதல் நாள்ல இருந்து நம்மல நாம எப்படி வடிவமைச்சிக்கிறலாம்ங்கிறது குறிச்சு கொஞ்சம் பகிர்ந்துக்கிட்டம்னா உங்களுக்கு பயனுள்ளதா இருக்கும், நம்ம நாட்டுக்கும் பயனுள்ளதாக இருக்கும்."