Jun 10, 2018

உபுண்டு 18.04 LTS -இல் தமிழ் தட்டச்சு செய்வது எப்படி?

உபுண்டுவில் இணைய இணைப்பைக் கொடுக்கவும். உபுண்டுவில் இணையம் வேலைசெய்கிறதா என உறுதிசெய்துவிட்டு. முனையத்தை(Terminal) திறக்கவும்.


கீழ்காணும் கட்டளைவரியினை முனையத்தில் இயக்கவும்.

sudo apt-get update; sudo apt-get install m17n-db m17n-contrib ibus-m17n ibus-gtk ibus-gtk3


இந்த கட்டளை வரி தமிழ் தட்டச்சுக்கு தேவையான பொதிகளை உபுண்டுவில் நிறுவும். முனையத்தை மூடிவிட்டு.


Logout செய்துவிட்டு மறுபடியும் Login செய்யவும்.


Settings -> Region & Language பிரிவுக்குச் செல்லவும். Input Source என்பதற்கு கீழே உள்ள '+' பொத்தானை அழுத்தவும்.


அதன்பிறகு மூன்று புள்ளிகளின் தோற்றத்துடன் இருக்கும் பொத்தானை அழுத்தவும். 


உள்ளீட்டுப் பெட்டியில் 'tamil' என தட்டச்சு செய்த பிறகு Other என்பதை சொடுக்கவும். அதில் உங்களுக்கு பிடித்தமான தட்டச்சு முறையை தேர்ந்தெடுத்து 'Add' பொத்தானை அழுத்தவும். நான் தமிழ் 99 உள்ளீட்டு முறையை தேர்ந்தெடுத்துள்ளேன். உதாரணமாக நான் Tamil(tamil99(m17n)) என்பதை தேர்வு செய்து 'Add' பொத்தானை அழுத்தியுள்ளேன். 





Region & Language சாளரத்தை மூடிவிட்டு. Windows+Space பொத்தானை அழுத்தி தமிழ் தட்டச்சு செய்யலாம் அல்லது வலது பக்க மேல் மூலையில் இருக்கும் 'en' என்பதை சொடுக்கி தமிழ் உள்ளீட்டு முறையை தேர்வு செய்துவிட்டும் தமிழ் தட்டச்சு செய்யலாம். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய வேண்டுமென்றால் மேற்கண்ட முறையில் சென்று மாற்றிக்கொள்ளுங்கள்.

Text Editor ஐத் திறந்து தமிழில் தட்டச்சு செய்து மகிழுங்கள்.


15 comments:

  1. உங்களுடைய விடாமுயற்சியை பாராட்டுகிறேன். இதை தொடங்கியவர்கள் பல நபர்கள் விலகிவிட்ட நிலையிலும் தொடர்ந்து எழுதுவது சிறப்பு. வாழ்த்துகிறேன்.
    அன்புடன்
    நாமதேவன்

    ReplyDelete
  2. நன்றி நாமதேவன் சார். உங்களைப் போன்றோர்களின் ஊக்குவிப்பும் நான் தொடர்ந்து எழுவதற்கு ஊக்கமளிக்கிறது.

    ReplyDelete
  3. மிக்க மகிழ்ச்சி கதிர் அனைவருக்கும் பயன்பெறும் வகையில் எடுத்துரைப்பது அதுவும் தமிழில் மிக சிறப்பு..

    ReplyDelete
  4. உபுண்டில் தமிழ் கேட்கவே இனிமை. கணணி வட்டில் பதிந்து இதை இயக்கவேண்டுமா அல்லது cd pendrive இல் இருந்தே தமிழ் எழுத முடியுமா நண்பரே. நான் தற்போது உபுண்டு 18.4 நேரடியாக pendrive முலமே இயக்கிவருகிறேன் கணனியில் பதியவில்லை.

    ReplyDelete
  5. அன்பு நண்பரே தங்களின் பதிவின் படி ubuntu 18.04 கு தமிழ் இறக்கி பதிந்துள்ளேன் ஆனால் text editor ல் தட்டச்சு செய்யும்போது தமிழ் தவறுதலாக வருகிறது.amma என்று தட்டச்சு செய்தால் அரரல என்று வருகிறது. இதை எவ்வாறு சரி செய்வது. மேலும் kde ubundu என்றால் என்ன விளக்கம் தரவும். நன்றி.

    ReplyDelete
  6. நன்றி நாமதேவன் சார். Phonetic method முறையை தேர்வு செய்யவும் அதில் 'ammaa' என்று தட்டச்சு செய்தால் 'அம்மா' என்று வரும். ஏதேனும் சந்தேகம் இருந்தால் பின்னூட்டம் இடவும்.

    ReplyDelete
  7. Klavaro ,typing master mathiri "tamil typing kathuka " yethavathu software iruka sir... Which is best to tamil typing in pc phonetic or tamil 98...

    ReplyDelete
  8. Hi Sridhar,

    Tamil99 is the best one.

    Regards,
    Kathirvel Rajendran

    ReplyDelete
  9. Tamil99 super sir ... Phonetic க விட தமிழ்99 நல்லாருக்கு சார் .... ஆரம்பத்தில் எழுத்துக்கள் கண்டு பிடிக்க கொஞ்சம் கடினமா இருந்துச்சு ... அ ஆ.. க ச ட த ப.... நல்லா வரிசை படுத்தி வச்சி இருக்காக ...
    இந்த keyboard பாத்ததும் இலக்கணம் படுச்ச மாதிரி பில் சார் ....
    நன்றி....

    ReplyDelete
  10. how to download the file m17n-db m17n-contrib ibus-m17n ibus-gtk ibus-gtk3 by external and install using flash drive on ubuntu-linux 18.04.

    ReplyDelete
  11. Kathirvel RajendranApril 21, 2020 at 7:03 PM

    Hi Unknown,

    Thanks. First connect the internet in Ubuntu and run below commands one by one.

    sudo apt update
    sudo apt install m17n-db m17n-contrib ibus-m17n ibus-gtk ibus-gtk3

    This steps are applicable for live Ubuntu also.

    ReplyDelete
  12. hi brother....

    ubu20.4 lts, tamil99 install panna mudila .... pls help

    its said...

    Package m17n-contrib is not available, but is referred to by another package.
    This may mean that the package is missing, has been obsoleted, or
    is only available from another source

    E: Package 'm17n-contrib' has no installation candidate

    ReplyDelete
  13. உபுண்டு 20.4-ல் இணையம் கிடைத்தவுடன் Terminal-ல் 'sudo apt update -y' கட்டளையை இயக்குங்கள். அதன்பிறகு 'sudo apt install m17n-db ibus-m17n ibus-gtk ibus-gtk3 -y' கட்டளை வரியைக் கொடுத்து தமிழுக்கான பொதிகளை நிறுவுங்கள்.

    https://gnutamil.blogspot.com/2018/06/1804-lts.html இணைப்பில் கூறியுள்ளபடி Settings சென்று தமிழ் தட்டச்சுக்கான அமைப்புகளை ஏற்படுத்துங்கள்.

    ReplyDelete
  14. நன்றி ப்ரோ.... உபுண்டு20.4lts தமிழ் இப்போது வேலை செய்கிறது....

    ReplyDelete

உங்களின் கருத்துக்களை வரவேற்கிறேன்.