Oct 7, 2013

கூகுள் குரோம் இணைய உலாவியில் தமிழ் ஒருங்குறி எழுத்து பிரச்சனை

என்னுடைய மடிக்கணினியில் உபுண்டு 12.04 LTS நிறுவியுள்ளேன்.  இணைய பயன்பாட்டிற்கு கூகுள் குரோம் இணைய உலாவியைப்  பயன்படுத்தி வருகிறேன். ஏனோ தெரியவில்லை பயர்பாக்ஸ்(நெருப்பு நரி) உலாவி சரிவர இயங்க மாட்டேன்ங்கிறது.  நானும் விரும்பி பயன்படுத்துவதில்லை.  தமிழக அரசின் இணையதளம் தொடர்பாக எழுத்துரு பிரச்சனை வந்ததால், சில ஒருங்குறி தமிழ் எழுத்துருக்களை இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்து நிறுவினேன்.  வந்தது சிக்கல்!

இதற்கு முன்பாக நன்றாக தெளிவாக தெரிந்து வந்த தமிழ் எழுத்துக்கள் தெளிவில்லாமல் தெரிய ஆரம்பித்தது.   அப்புறம் என்ன எப்பொழுதும் போல இணைய தேடுதல் வேட்டை தீவிரமானது.   வேட்டையில் தீர்வை கண்டுபிடித்தேன்.

நான் எழுத்துருக்களை நிறுவுவதற்கு உபுண்டுவினுடைய இருப்பியல்பாக இருக்கும் வசதியையே பயன்படுத்தினேன்.


இந்த முறையில் எழுத்துருக்களை நிறுவும் பொழுது அது Home அடைவில் .fonts எனும் அடைவிற்குள் நிறுவப்படுகிறது.  ஆகையால் Home->.fonts அடைவிற்குள் சென்று நான் தரவிறக்கம் செய்து நிறுவிய இரண்டு எழுத்துருக்களையும் நிரந்தரமாக அழித்தேன்.  தீர்ந்தது பிரச்சனை!





1 comment:

  1. In Blogger, in POST EDITOR, the transliteration page, CHOOSE "TRANSLATION LANGUAGE" BUTTON NOT FUNCTIONING...

    ReplyDelete

உங்களின் கருத்துக்களை வரவேற்கிறேன்.