பைத்தான் என்பது ஒரு சுதந்திர மற்றும் திறவூற்று கணினி மொழி ( Free and Open Source Computer Language). கற்றுக்கொள்வதற்கு மிகவும் எளிமையான அதே நேரத்தில் சக்தி வாய்ந்த கணினி மொழியும் ஆகும்.
உபுண்டு லினக்ஸினுடைய பல்வேறு விதமான பயன்பாட்டு மென்பொருள்களும், இயங்குதளத்திற்குத் தேவையான பல நிரல்களும் பைத்தான் மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன.
பைத்தானினுடைய Syntax அதை கற்றுக்கொள்வதற்கும், செயல்படுத்துவதற்கும் நம்மை ஆர்வப்படுத்தும் விதத்தில் உள்ளது.
Guido van Rossum எனும் கணிப்பொறியாளர் தான் பைத்தான் மொழியினை உருவாக்கியவர். BBC யினுடைய "Monty Python's Flying Circus” எனும் நிகழ்ச்சிக்குப் பிறகுதான் அவர் உருவாக்கிய மொழிக்கு 'பைத்தான்' என்று பெயரிட்டார்.
பைத்தான் என்றால் மலைப்பாம்பு என்று தமிழில் அர்த்தம். தனது இரைக்காக அது விலங்குகளைக் கொல்லும். தனது பலம் மிக்க நீளமான உடலமைப்பால் இரையினைச் சுற்றி நொறுக்கி அதன் பின்பு இரையினை விழுங்கி சாப்பிடும்.
பைத்தானின் சிறப்பம்சங்கள்:
- எளிமையானது
- கற்பதற்கும் எளிமையானது
- சுதந்திர மற்றும் திறவூற்று மொழி
- உயர்நிலை மொழி (High Level Language)
- எளிதில் எடுத்துச் செல்லக்கூடியது (Portability)
- இன்டர்பிரிட்டர் மொழி
- ஆப்ஜக்ட் ஓரியண்டட் மொழி
- நீட்டித்துக்கொள்ளக்கூடியது
- பொதிந்து கொள்ளக்கூடியது (Embedded)
பைத்தான் ஒரு எளிமையான, தெளிவான, நிரல்களை எழுதுவதற்கு எளிமையான, புரிந்து கொள்ளக்கூடிய மற்றும் நிர்வகிக்கக் கூடிய கணினி மொழி.
நிரலாளர்கள் என்ன சொல்கிறார்கள்?
பைத்தான் என்னுடைய 'Favorite Programming Language'
--Eric S.Raymond--
பைத்தானைக் காட்டிலும் வேறொரு மொழியினை இன்னும் உருவாக்கவில்லை.
--Bruce Eckel--
கூகுள் நிறுவனத்தினுடைய ஒரு அங்கமாகவே பைத்தான் மொழி இருக்கிறது. பைத்தானைப் பற்றிய அறிவு கூகுளில் வேலை செய்யும் நிரலாளர்களுக்கு அவசியமான ஒன்று. இதை நாம் இந்த தளத்திற்கு சென்று உறுதிப் படுத்திக் கொள்ளலாம் [http://www.google.com/jobs/index.html].
--Peter Norvig--மேலும் பைத்தானைப் பற்றி தமிழில் தெரிந்து கொள்ள:
பைத்தானைப் பற்றிய ஒரு சிறப்பான கட்டுரையினை நமது தோழர் ந.ர.செ.ராஜ்குமார் அவர்கள் தனது வலைப்பூவில் பதிவிட்டுள்ளார்.
மேலும்:
பைத்தானின் இணையதளம் : www.python.org
[பைத்தன் ஒரு முழு தொடராக வெளிவரும் என்பதனை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.]
தொடர்ந்து எழுதுங்கள்.. எத்தனையோ பேர் தமிழ் Python பற்றி எழுத ஆரம்பித்து இருந்தார்கள்; இதுவரை எவரும் 2 பதிவுகளை தாண்டியது இல்லை...
ReplyDeleteநன்றி. POWER Thaz
ReplyDeleteதொடர்ந்து பைத்தானைப் பற்றி எழுதுவோம்.
// POWER Thaz said...//
ReplyDeleteதோழர் ஸ்ரீனிவாசன் அவர்கள் பைத்தானைப் பற்றிய கணியம் இதழில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
// POWR Thaz said... //
ReplyDeleteதோழர் ஸ்ரீனிவாசன் அவர்களின்
பைத்தான் தொடர்
கண்டிப்பாக தொடர்ந்து எழுதுங்கள், ஆவலாக காத்திருக்கிறேன் உங்களுடைய அடுத்த பதிவிற்காக நண்பரே,
ReplyDeleteநன்றி குமரேசன்.
ReplyDeleteநன்றி , நான் ஒரு mechanic , ஆனால் கம்ப்யூட்டர் ப்ரோக்ராம்மிங் மொழிகளின் கட்டளை தொடர்களை கற்றுக்கொள்ள ஆசை. அதன் மூலம் இயந்தரங்களின் problem solving approach -இன் எனது பார்வையை மாற்றிக்கொள்ள முடியும் என்று ஒரு நம்பிக்கை. உங்களின் இந்த தொடர் மூலம் அது நிறைவேறும் என்று ஒரு நம்பிக்கை. தேங்க்ஸ் இன் அட்வான்ஸ்
ReplyDeleteஇத்தொடர் பலருக்கு பயன்படும் என்பதில் ஐயமில்லை. ’மரியாதைக்குரிய’ என்கிற வார்த்தையை அவைக்குறிப்பிலிருந்து நீக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
ReplyDeleteAptana Studio, Pycharm editor போன்ற பைத்தான் நிரலெழுதப் பயன்படும் IDE குறித்தும் எழுதுங்கள்.
// Anonymous said...//
ReplyDeleteநன்றி.
நன்றி தோழர் ராஜ்குமார்.
ReplyDeleteஇணைப்புக்கு நன்றி
ReplyDeletethanks powerthazan thazan
ReplyDelete