Nov 20, 2010

இணையத்தைப் பற்றி கூகிள் வெளியிட்டுள்ள இலவச புத்தகம்

இன்று இணையத்தைப் பயன்படுத்துவோர் அனைவருக்கும் கூகுள் என்பது பரிச்சையமான வார்த்தை.கூகிள் தேடுபொறியினை பயன்படுத்தாவரே இணைய உலகில் இல்லை என்றே சொல்லலாம்.

கூகுள் நிறுவனம் தன்னுடைய எந்த சேவையினையுமே வித்தியாசமாகவும், எளிமையாகவும் இருக்குமாறும் வெளியிடும்.

அத்தோடில்லாமல் லினக்ஸ்,திறவூற்று (OpenSource) இந்த இரண்டிலும் கூகுள் நிறையவே பங்களித்து வருகிறது.

இன்னும் ஐந்து ஆண்டுகளில் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் சரிக்கு சமமாக போடிபோடும் அளவிற்கு கூகுள் வளர்ந்து விடும் என்று கூறுகின்றனர்.இப்படி எவ்வளவோ சிறப்புகளை கூகுளைப் பற்றிக் கூறிக்கொண்டே போகலாம்.


கூகுள் சமீபத்தில் இணையத்தைப் பற்றியும் ,உலாவிகளைப் பற்றியும் ,இணையத்தில் பயன்படுத்தப்படும் தொழில்நுடபங்களைப் பற்றியும்,இணையத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஒரு இலவச புத்தகத்தினை வெளியிட்டுள்ளது.புத்தகத்தின் பெயர் "20 things I learned about browsers and the web". இந்த புத்தகத்தினை அனைவரும் இலவசமாக படித்துக்கொள்ளலாம்.
முகவரி: http://www.20thingsilearned.com/
இந்த புத்தகத்தில் இணையத்தைப் பற்றி உள்ள அடிப்படையான செய்திகள் :
  • இணையம் என்றால் என்ன?
  • சமீபத்திய உலாவிகளில் எந்த மாதிரியான தொழில் நுட்பர்ங்கள் பயன்படுத்தப்படுகிறது?
  • இணையத்தில் எப்படி பாதுகாப்பாட உலாவுவது?
  • இணையத்தில் இருந்து நாமக்கு வேண்டியதைப் பெற உலாவிகளை எப்படி பயன்படுத்துவது?
இதுப் போன்று இன்னும் நிறைய..... இதைத் தவிர,
  • Cloud Computing என்றால் என்ன ?
  • IP Address என்றால் என்ன?
  • DNS (Domain Name System) என்றால் என்ன?
படித்து சுவைத்துத் தெரிந்துக்கொள்ளுங்கள்.எளிய ஆங்கிலத்தில், படங்களுடன் மிக அருமையாக இருக்கிறது.

7 comments:

Ravi kumar Karunanithi said...

good information.. thanks for sharing..

இரா.கதிர்வேல் said...

நன்றி Ravikumar Karunanithi

அணில் said...

ஓஹோ!... படித்துவிட வேண்டியதுதான்

இரா.கதிர்வேல் said...

நன்றி Rajkumar Ravi

blogger tips said...

நன்றி

இரா.கதிர்வேல் said...

Thanks BloggerTips

இரா.கதிர்வேல் said...

நன்றி தமிழ்மகன்.