Nov 13, 2010

உபுண்டு 10.10 லினக்ஸில் புதிய எழுத்துருக்களை நிறுவுதல் ( New Font Installation )

விண்டோஸ் இயங்குதளத்தில் ஒரு புதிய எழுத்துருவை நிறுவுவதற்கு, நாம் வைத்திருக்கும் எழுத்துருவை Copy செய்து Control Panel => Fonts சென்று Paste செய்து விட்டால் போதும்.புதிய எழுத்துரு நிறுவப்பட்டுவிடும்,அதுபோல உபுண்டு 10.10 லினக்ஸிலும் முனையத்தில் எந்தவிதமான கட்டளைகளையும் கொடுக்காமல் மிகவும் எளிதாக புதிய எழுத்துருவை நிறுவிக்கொள்ளலாம்.

படம்-1
நாம் புதியதாக எந்த எழுத்துருவை நிறுவவேண்டுமோ அந்த புதிய எழுத்துருவின் மீது Mouse Pointer ஐ வைது Right Click செய்யுங்கள்.கிடைக்கும் தேர்வில் Open With Font Viewer என்பதைக் Click செய்யுங்கள்.(பார்க்க படம்-1)

Click செய்தவுடன் நம்முடைய புதிய எழுத்துரு Font Viewer மூலம் திறக்கப்படும்.திறக்கப்பட்டவுடன் Font Viewer -ல் Install Font என்ற பொத்தான் ஒன்று இருக்கும்(பார்க்க படம்-2).அதை Click செய்யுங்கள்.

படம்-2

Click செய்தவுடன் Install Font எனும் பொத்தான் Disable ஆகிவிடும் (பார்க்க படம்-3).அவ்வளவுதான் புதிய எழுத்துரு நிறுவப்பட்டு விட்டது.

படம்-3
Open Office Word Processor ஐத் திறந்து நீங்கள் புதிதாக நிறுவிய எழுத்துருவை பயன்படுத்திக்கொள்ளலாம்.

படம்-4

படம்-5
நான் புதிதாக நிறுவிய தமிழ் எழுத்துருவை என்னுடைய உபுண்டு 10.10 லினக்ஸில் உள்ள Open Office Word Processor -ல் பயன்படுத்தியபொழுது.(பார்க்க படம்-5)

7 comments:

  1. சின்ன விசயம்தான் ஆனால் லினக்சை புதிதாய் பயன்படுத்தும் பலருக்கும் ஒரு எழுத்துருவை எப்படி நிறுவ வேண்டுமெனத் தெரியாது. இக்கட்டுரை லினக்ஸ் பயன்படுத்துபவர்களுக்கு பயனுள்ள கட்டுரை.

    ReplyDelete
  2. //Rajkumar Ravi said...
    சின்ன விசயம்தான் ஆனால் லினக்சை புதிதாய் பயன்படுத்தும் பலருக்கும் ஒரு எழுத்துருவை எப்படி நிறுவ வேண்டுமெனத் தெரியாது. இக்கட்டுரை லினக்ஸ் பயன்படுத்துபவர்களுக்கு பயனுள்ள கட்டுரை.//

    நன்றி Rajkumar Ravi

    ReplyDelete
  3. அருமை, அற்புதம். இதுவரை எழுத்துருக்களை நிறுவுவது பற்றி வெவ்வேறு பிலாகுகளிலும் வலைத்தளத்திலும் நிறைய பார்த்திருக்கிறேன். அந்த முறைகள் எல்லாம் நம்மை கண்ணாமூச்சி காட்டி உசிரை எடுத்துவிடும், நீங்கள் சொல்லியுள்ளது மிக எளிது, நன்றி. அது சரி, அதிக எண்ணிக்கையில் எழுத்துருக்களை நிறுவ என்ன செய்ய வேடும், எளிய வழி உள்ளதா?

    ReplyDelete
  4. Jayadev Das said..
    //அதிக எண்ணிக்கையில் எழுத்துருக்களை நிறுவ//
    login root account
    copy your fonts
    paste this directory /usr/share/fonts/trutype
    thats all sir

    ReplyDelete

உங்களின் கருத்துக்களை வரவேற்கிறேன்.