Apr 9, 2010

விண்டோஸ் இயங்குதளத் திற்குள் உபுண்டு லினக்சை நிறுவுவது எப்படி?

விண்டோஸ் இயங்குதளத்தை பயன்படுத்தி உபுண்டு லினக்சை மிகவும் எளிமையான முறையில் நிறுவிவிடலாம்.இந்த முறையில் நிறுவ உங்களுக்கு விண்டோஸ் இயங்குதளத்தில் மென்பொருள்களை நிறுவிய அனுபவம் இருந்ததாலே போதுமானது. Partition எல்லாம் செய்ய வேண்டியதில்லை.மிக மிக எளிமையான ஒரு வழிமுறை.

எப்படி நிறுவுவது என்பதை இங்கு pdf கோப்பாக கொடுத்துள்ளேன்.pdf கோப்பினை தரவிறக்கம் செய்ய மற்றும் படிப்பதற்கு இங்கு சொடுக்கவும்.

இந்த கோப்பினை பற்றிய உங்களது கருத்துக்களை பின்னூட்டம் மூலமாகவோ ,அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தெரிவியுங்கள்.இந்த முறையில் நிறுவுதலில் ஏதேனும் சந்தேகம் இருந்தாலும் பின்னூட்டம் அல்லது மின்னஞ்சல் மூலமாக தெரிவியுங்கள்.

14 comments:

  1. வணக்கம் கதிர்வேல்! விண்டோஸ் இயங்குதளத்திற்குள் உபுந்து நிறுவும் வழியை கற்று கொடுத்தீர்கள். அதேபோல் அதை எவ்வாறு முழுவதுமாக அகற்றுவது என்பதையும் கூறமுடியுமா? நான் ஏற்கெனவே அகற்றியபோதும் பின்னர் கணணியை மீள துவக்கம் செய்யும்போது இயங்குதளத்தை தெரிவு செய்யும்படி கூறுகின்றது.உபுந்துவை தனி இயங்குதளமாக மேசைக்கனணியில் நிறுவியதால் மடிக்கணணியிலிருந்து அகற்ற விரும்புகிறேன்.

    ReplyDelete
  2. வாங்க prakash விண்டோஸ் இயங்குதளத்திற்குள் நிறுவியுள்ள உபுண்டு லினக்ஸை நீக்குவதற்கு ,விண்டோஸ் இயங்குதளத்திற்குள் control panel சென்று Add Remove program ல் ubuntu என்பதை தேர்வு செய்து uninstall கொடுங்கள்.

    ReplyDelete
  3. ஆமாம் கதிர்! அப்படித்தான் நீக்கினேன். ஆனால் ஒவ்வொரு முறையும் கணணி துவக்கும் போதும், உபுந்து கணனியில் இல்லாதபோதும் இரட்டை இயங்குதளங்களில் ஒன்றை தெரிவு செய்யும்படி கேட்கிறது. முப்பது வினாடிகளில் நாமாக தெரிவு செய்யாதபோது தானாக விண்டோசில் நுழைகிறது. இந்த நிலையை தவிர்ப்பது எப்படி? கணணி துவக்கும்போது முப்பது வினாடி தாமதத்தை தவிர்த்து நேரடியாக விண்டோசில் இயங்கும்படி செய்வது எப்படி? தற்போதைய நிலையில் கணணி இயக்கத்தில் எந்தவித பிரச்சனையும் இல்லை.

    ReplyDelete
  4. பிரகாஷ் அவர்களுக்கு
    நீங்கள் உபுண்டு 9.10 நிறுவியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.உபுண்டு வை Add/Remove program ல் இருந்து நீக்கியபிறகும் இயங்குதளங்களை தேர்வு செய்ய சொல்லி கேட்டால் அதற்கு விண்டோஸ் இயங்குதளத்தினுடைய boot.ini கோப்பில் மாற்றம் செய்ய வேண்டி வரும்.இதை பற்றி நான் உங்களுக்கு விரைவில் கூறுகிறேன்.பின்னூட்ட பகுதியில் இதைப்பற்றி விளக்கமாக கூற இயலாது.உங்களுக்கு மின்னஞ்சலிலோ அல்லது ஒரு பதிவாக பதிவு செய்கிறேன்.

    ReplyDelete
  5. நன்றி கதிர்! தங்களின் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறேன். தறபோதைய நிலையில் கணணியை துவக்கும் போது இரட்டை இயங்குதளங்களில் ஒன்றை தெரிவு செய்யும்படி கேட்கும்போது வழங்கும் முப்பது வினாடிகளை மட்டும் மூன்று வினாடியாக BOOT.INI அமைப்பில் குறைத்து இருக்கிறேன். வேறு வழி எதுவும் தெரியவில்லை.

    ReplyDelete
  6. தகவலுக்கு நன்றி,
    இதை போல் வேறு லினக்ஸ்யை
    விண்டோஸ் இயங்குதளத்துக்கு உள்ளே
    நிறுவ முடியுமா?
    இருந்தால் குறிப்பிடவும்?

    ReplyDelete
  7. என் கணினியில் நிறுவினால், கடைசியில் வழுச்செய்தி வருகிறது. அதன் பின்னர் எதுவும் நிறுவப்படுவதில்லை.ஏன்?

    ReplyDelete
  8. விண்டோஸ் 7 அல்லது vista உபயோகிக்கிறீர்கள் என நினைக்கிறேன்.. .exe கோப்பின் மீது வலது விசையைச் சொடுக்கி, Run as administrator என்று தெரிவு செய்து முயற்சித்துப் பார்க்கவும்.

    ReplyDelete
  9. //sethupathy said...//
    சந்தேகத்தை விளக்கியமைக்கு ரொம்ப
    நன்றி தோழர் சேதுபதி

    ReplyDelete
  10. ஐயா எனது கணினி windows xp பயன்படுத்துகிறேன் , எனக்கும் உபுண்டு 12.04 இன்ஸ்டால் செய்ய ஆசை , உங்கள் பதிப்பை நான் படித்தேன் (how to install ubuntu inside windows) இதனால் எந்த பிரச்சினையும் வராது தானே? , இப்போது உள்ள எந்த கோப்பும் அழியாது தானே?

    தயவு செய்து உதவவும் ...............

    ReplyDelete
  11. ஐயா எனது கணினி windows xp பயன்படுத்துகிறேன் , எனக்கும் உபுண்டு 12.04 இன்ஸ்டால் செய்ய ஆசை , உங்கள் பதிப்பை நான் படித்தேன் (how to install ubuntu inside windows) இதனால் எந்த பிரச்சினையும் வராது தானே? , இப்போது உள்ள எந்த கோப்பும் அழியாது தானே?

    தயவு செய்து உதவவும் ...............

    ReplyDelete
  12. //sivakumar said//
    நன்றி.

    உபுண்டு 12.04 பதிப்பை நான் எழுதியுள்ள இந்த முறைப்படி நிறுவ முடியாது.

    ReplyDelete
  13. //sivakumar said//

    நீங்கள் பார்ட்டிசியன் செய்து முழுமையான நிறுவலாகத்தான் நிறுவ வேண்டும்.

    ReplyDelete

உங்களின் கருத்துக்களை வரவேற்கிறேன்.