Jan 12, 2016

உபுண்டுவில் initramfs பிழையை சரிசெய்வது எப்படி?

அலுவலகத்தில் திடீரென்று மின் இணைப்பு தடைப்பட்டு உடனே மின்சாரம் வந்தது. ஆனால் கணினியை தொடங்கியபோது உபுண்டுவிற்குள் செல்லவில்லை. GRUB எந்தப் பிரச்சனையும் இல்லாமல் வந்தது. அதில் உபுண்டுவைத் தேர்வு செய்து இயக்கியபோது initramfs என்பதுடன் வந்து நின்றுகொண்டது. கீழே உள்ள படத்தைப் பார்க்கவும்.


பிரச்சனைக்கான காரணம் என்னவென்றால் மின்சாரம் திடீரென்று நின்றதால் உபுண்டு இயங்குதளத்தின் root partition corrupt ஆகியிருக்கிறது. fsck கட்டளையைப் பயன்படுத்தி இந்த பிழையை சரிசெய்தேன். fsck கட்டளையானது corrupt ஆன block க்குகளை சரிசெய்து மீட்டுத்தந்தது.


கணினியில் இருந்த உபுண்டுவிற்குள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டதால், வெளியிலிருந்து ஏதாவது ஒரு இயங்குதளத்தின் மூலமாகத்தான் அதை அணுக முடியும். அதனால், உபுண்டுவை பென்டிரைவில் live bootable ஆக மாற்றிக்கொண்டேன். பென்டிரைவைக் கொண்டு கணினியை தொடக்கம் செய்து, Gpartition Editor மூலமாக hard disk இல் இருந்த உபுண்டுவின் corrupt ஆன root partition இன் device number ஐக் கண்டுபிடித்தேன். அதன்பிறகு fsck கட்டளையை இயக்கி பிழையை சரிசெய்து உபுண்டுவை மீட்டெடுத்தேன்.


புகைப்படம் மற்றும் பென்டிரைவ் உதவி தோழியர் புஷ்பா கந்தசாமி அவர்கள். தோழியருக்கு நன்றி.

4 comments:

Siva said...

Sir did u use Ubuntu inside windows 7 by doing dual booting?

இரா.கதிர்வேல் said...

லினக்ஸ் பயன்படுத்த ஆரம்பித்த காலத்தில் கல்லூரி படிக்கும் போது பயன்படுத்தியிருக்கிறேன். அதன்பின் விண்டோஸிற்குள் உபுண்டுவை நிறுவி பயன்படுத்துவதை தவிர்த்து விட்டேன். அவ்வாறு பயன்படுத்துவது பாதுகாப்பானது கிடையாது. விண்டோஸ் செயலிழக்கும் பட்சத்தில் உபுண்டுவையும், அதற்குள் இருந்த தகவல்களையும் மீட்பது கடினம். இது என்னுடைய பரிந்துரை.

Siva said...

Thanks for replying. Now how did u use Ubuntu and windows ? Is it installed separately ?

இரா.கதிர்வேல் said...

Yes. It is installed separately.