Aug 6, 2015

உங்களது மின்னஞ்சல் கண்காணிக்கப்படுகிறது

அமெரிக்காவின் NSA திட்டத்தைப் பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். கூகுள் போன்ற பெரும் நிறுவனங்கள் அமெரிக்காவின் CIA போன்ற உளவு அமைப்புகளுக்கோ அல்லது வேறு நாட்டின் உளவு அமைப்புகள் கேட்டுக்கொண்டாலோ தங்களுடைய மின்னஞ்சல் சேவைகளைப் பயன்படுத்தும் பயனர்களின் விவரங்கள் அனைத்தையும் கொடுத்துவிடுகிறார்கள்.  Edward Snowden இன் கைது விபரங்களைப் தேடிப்பார்தாலே உங்களுக்கு பல பூதாகரமாக தகவல்கள் கிடைக்கும்.


இது பற்றி இன்னும் அதிகமான விபரங்களை தெரிந்துகொள்ள வேண்டுமா? கீழ்காணும் கட்டுரைகளைப் படித்துப் பாருங்கள்


நாம் அனுப்பும் மின்னஞ்சல்கள் பாதுகாப்பானவைகள் அல்ல. யார் வேண்டுமானாலும் நாம் அனுப்பும் மின்னஞ்சல்களை திறந்து படித்து விட முடியும். குறிப்பாக NSA போன்ற Bulk Surveillance திட்டத்தின் கண்காணிப்புகளிலிருந்து தப்பிக்க முடியாது. இதைப்பற்றி எழுதியதினாலேயே கூட இந்த பதிவு என்னுடைய வலைப்பூவிலிருந்து என்னை கேட்காமலேயே நீக்கப்படலாம்!

அப்படியொன்றும் இரகசியமான தகவல்களெல்லாம் என்னோட மின்னஞ்சலில் இல்லையென்று நீங்கள் கூறலாம். அப்படியே வைத்துக்கொள்வோமே உங்களுடைய Privacy உங்களுக்கு முக்கியமில்லையா?

இந்த கண்காணிப்பிலிருந்து தப்பிக்க என்ன வழி? விபரங்கள் கீழே உள்ளன படித்துப்பார்த்து தெளிவு பெறுங்கள்.



பின்குறிப்பு: தம்பி இவ்வளவு வக்கனையா பேசுறீயே உன்னோட இந்த வலைப்பூவே கூகுளோடதுதான் தெரியுமா? அப்புறம் நீ மட்டும் ஏன் கூகுளோட சேவைகளை பயன்படுத்துறேன்னு நீங்க கேட்கிறது எனக்கு புரியுது

Aug 3, 2015

Windows 7 நிறுவும் போது கிடைத்த பிழைச்செய்தியும், அதற்கான தீர்வுகளும்

எனது நண்பர் ராஜாசிங்கும், தம்பி வினோத்தும் தங்களது கணினியில் விண்டோஸ் 7 -ஐயும், உபுண்டுவையும் இரட்டை நிறுவுதலாக நிறுவித்ததரச் சொன்னார்கள். இரண்டு பேருடைய கணினியிலும் உபுண்டுவை நிறுவும் போது எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. விண்டோஸ் 7 நிறுவும் போதுதான் தலா இருவரினுடைய கணினியிலும் பிரச்சனை வந்தது.

விண்டோஸ்னாவே பிரச்சனைதானே, பிரச்சனைக்காகவே கண்டிபிடிக்கப்பட்டதுதானே அது!

நண்பர் ராஜாசிங்கின் கணினியில் விண்டோஸ் 7 நிறுவும்போது ஏற்பட்ட பிரச்சனை 

நண்பர் ராஜாசிங்கினுடையது Lenovo Ideapad z580 மாடல் மடிக்கணினி. ஏற்கனவே அதில் விண்டோஸ் 8 பதிப்பு நிறுவப்பட்டிருந்தது. அதை நீக்கிவிட்டு விண்டோஸ் 7 + உபுண்டு 14.04 நிறுவித்தரச் சொன்னார். UEFI Enabled செய்யப்பட்டிருந்தது. UEFI Enabled செய்யப்பட்டிருக்கும் மடிக்கணினியில் வேறு எந்த இயங்குதளத்தையும் நிறுவமுடியாது. லைவ் மோடில் உபுண்டுவை பரிசோதித்துப் பார்க்க வேண்டுமென்றால்கூட UEFI ஐ Disable செய்துவிட்டுத்தான் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். எனவே முதலில் BIOS -க்குச் சென்று UEFI ஐ Disable செய்துவிட்டு உபுண்டுவை லைவ் மோடில் இயக்கி Gpartition Manager கருவி மூலமாக 1TB வன்வட்டை Partition செய்து முடித்தேன். முதலில் விண்டோஸை 7 நிறுவிவிட்டு பிறகு உபுண்டுவை நிறுவுவோம் என முடிவு செய்து விண்டோஸை 7 ஐ Pendrive இல் Bootable ஆக மாற்றிக்கொண்டு நிறுவுதலை ஆரம்பித்தேன். Install Now என்பதை கொடுத்த பிறகு ஒரு பிழைச்செய்தி காண்பித்தது. அந்த பிழைச்செய்தி இதுதான், "No device drivers were found. Make sure the installation media contain the correct drivers, and then click OK." 




விண்டோஸ் 7 இதை ஒரு பெரிய பிழைச்செய்தியாக காண்பித்துக்கொண்டிருந்தது. இந்த பிழைச்செய்திக்கு காரணம் USB 3.0 -க்கான drivers windows 7 இல் இல்லை அதுதான். ராஜாசிங்கின் மடிக்கணினியில் இடதுபுறமாக இருந்த இரண்டு USB port களும் USB 3.0 வகையைச் சேர்ந்தது. வலதுபுறமாக இருந்த ஒரே ஒரு USB port, USB 2.0 வகையைச் சேர்ந்தது. ஆகையால் இடதுபுறமாக உள்ள USB 3.0 port இல் சொருகியிருந்த pendrive ஐ பிடுங்கி, வலதுபுறமாக உள்ள USB 2.0 port  இல் சொருகிவிட்டு விண்டோஸ் 7 நிறுவுதலை தொடங்கினேன். ஏற்கனவே காண்பித்த பிழைச்செய்தியும் காண்பிக்கப்படவில்லை, நிறுவுதலும் சுமூகமாக முடிந்தது. நீங்களும் இதுபோன்ற பிழைச்செய்திகளை விண்டோஸ் 7 நிறுவும் போது எதிர்கொண்டால் இந்த வழிமுறையையும் ஒருமுறை செய்துபார்த்துவிடுங்கள். தீர்வு கிடைக்கலாம்.

தம்பி வினோத்தின் கணினியில் விண்டோஸ் 7 நிறுவும் போது ஏற்பட்ட பிரச்சனை 

தம்பி வினோத் அவருடைய 1TB வன்வட்டினை முறையாக partition செய்து அதில் விண்டோஸ் 7 ஐயும், உபுண்டுவையும் நிறுவித்தரச்சொன்னார். உபுண்டுவைக் கொண்டு வன்வட்டினை partition -னெல்லாம் செய்து முடித்தபிறகு நிறுவுதலை தொடங்கினோம். வீட்டிலிருந்து வன்வட்டினை மட்டும் தனியாக கழட்டி எடுத்துக்கொண்டு வந்திருந்தார். அதை மற்றொரு கணினியில் இணைத்து விண்டோஸ் 7 நிறுவுதலை தொடங்கினோம். partitions ஐ list out செய்யும் இடத்தில் பிழைச்செய்தி வந்தது. என்னென்னவெல்லாமோ செய்துபார்த்தோம் சரிசெய்ய முடியவில்லை. இறுதியில் இணையத்தை துழாவ ஆரம்பித்தோம். தீர்வு கிடைத்தது.

பிரச்சனை என்னவென்றால் விண்டோஸ் 7 ஐ நிறுவும் போது கணினியின் mother board -இல் ஒரே ஒரு வன்வட்டு மட்டுமே இணைக்கப்பட்டிருக்க வேண்டுமாம். தம்பி வினோத் வீட்டிலிருந்து வன்வட்டினை கழட்டி எடுத்து வந்திருந்ததினால், அதை இன்னொரு கணினியில் இணைத்தோமல்லவா அந்த கணினியில் ஏற்கனவே ஒரு வன்வட்டு இருந்தது. தம்பியோடதையும் கூடுதலாக இணைத்து விட்டதால் இரண்டு வன்வட்டு motherboard -இல் இணைக்கப்பட்டிருந்தது. அதனால் பிழை. அப்புறமாக ஏற்கனவே கணினியில் இணைக்கப்பட்டிருந்த வன்வட்டினை நீக்கிவிட்டு. தம்பியோட வன்வட்டினை மட்டும் இணைத்து விண்டோஸை 7 நிறுவியபோது, நிறுவுதல் சுமூகமாக முடிந்தது. இதையும் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள் உங்களுக்கு இதுபோன்ற சூழல் ஏற்பட்டால். இந்த வழிமுறையை கடைபிடித்துப் பாருங்கள்.