Aug 3, 2014

உபுண்டு 14.04.1 லும் அந்த பிழை இருக்கிறது


எனது மடிக்கணினியில் நிறுவியிருக்கும் உபுண்டு 14.04.1 LTS இன் Flashback அமைப்பு

அண்மையில் உபுண்டு 14.04 இன் மேம்படுத்தப்பட்ட பதிப்பாக உபுண்டு 14.04.1 பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. உபுண்டு Unity DE இல் ஒரு சிறிய பிழை இருப்பதாக ஏற்கனவே கூறியிருந்தேன். அந்த பிழை இந்த மேம்படுத்தப்பட்ட பதிப்பில் சரிசெய்யப்பட்டு இருக்கும் என்ற நம்பிக்கையில் தரவிறக்கம் செய்து நிகழ் வட்டாக பயன்படுத்திப் பார்த்தேன். நிகழ்வட்டாக பயன்படுத்திப் பார்த்த போது இந்த பிழை இல்லை, நிறுவி பயன்படுத்தும் போது இருக்கிறது. கோப்புகளுக்கு தமிழ் எழுத்துக்களில் பெயர் கொடுக்கப்பட்டு இருந்து அந்தக் கோப்பைத் திறந்தால் Restore Window கொடுக்கும் போது Titlebar இல் கோப்பின் பெயர் செவ்வகவடிவ கட்டமாக தெரிகிறது, Maximize செய்து விட்டால் இதுபோன்று தெரிவதில்லை. இதுதான் அந்த பிழை. மற்றபடி அனைத்தும் சிறப்பாக இருக்கிறது.

ubuntu-flashback இல் இந்த பிழை இல்லை. பிழை Unity DE தான் இருக்கிறதேயொழியே, உபுண்டுவில் இல்லை.


2 comments:

Unknown said...

நீங்கள் குறிப்பிட்ட மாதிரியே அப்பிழை எனக்கும் வருகிறது. ஆனால் அந்த விண்டோவினை maximize செய்யும் போது அந்த எழுத்து வடிவங்கள் சரியாகத் தெரிகின்றன.

இரா.கதிர்வேல் said...

நன்றி குமாரசாமி.