Jul 29, 2014

உபுண்டுவில் Firefox இணைய உலாவியின் புதிய பதிப்பை நிறுவ

Firefox இணைய உலாவியின் புதிய பதிப்பு 31.0. நீங்கள் பழைய Firefox பதிப்பை வைத்திருந்தால் Firefox இன் புதிய பதிப்பை உபுண்டுவில் நிறுவிக்கொள்ளலாம். முனையத்தில்(Terminal) கீழ்காணும் கட்டளைகளை ஒன்றன்பின் ஒன்றாக இயக்கவும்.

sudo apt-get update
sudo apt-get install firefox




Jul 20, 2014

FOSS மற்றும் LINUX பற்றிய அடிப்படைகளை தமிழில் தெரிந்து கொள்ள

 

Spoken Tutorial எனும் திட்டம் இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் நிதி மற்றும் ஆலோசையுடன் ஐ.ஐ.டி மும்பையால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தினுடைய நோக்கம் தகவல் தொடர்பு மற்றும் கணினி தொழில்நுட்பங்களை அனைத்து மக்களும் அவரவர் மொழிகளில் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே.

அனைத்து வீடியோக்களும் FOSS ஐ அடிப்படையாகக் கொண்டது என்பது மகிழச்சிக்குரிய செய்தி. பல்வேறு தலைப்புகளில் மொத்தமாக 542 க்கு மேற்பட்ட வீடியோக்கள் பதிவேற்றப்பட்டுள்ளது. ஆங்கிலம், தமிழ் என பல்வேறு மொழிகளில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆரம்பநிலை பயனாளர்களுக்கும், மாணவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அனைவரும் அவசியம் பார்த்து பயன்பெற வேண்டிய தளம்.

லினக்ஸைப் பற்றி அடிப்படையாக தெரிந்து கொள்ள வேண்டியவைகளை லினக்ஸ் எனும் தலைப்பில் 13 தமிழில் வீடியோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் உபுண்டு இயங்குதளத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது. கற்றுக்கொள்ள மொழி ஒரு தடையல்ல முயற்சியும் பயிற்சியும் இருந்தால் எதுவும் சாத்தியம்.

தரவிறக்கம் செய்து அனைவரும் பயன்பெறவும். http://www.spoken-tutorial.org தளத்தை ஆராய்ந்தால் நீங்கள் நிறைய தெரிந்து கொள்ளலாம்.

LINUX FOR YOU(Open Source For You Now) 50% சலுகை



சந்தாதாரராக : Open Source For You

Jul 6, 2014

Restore KDE


குபுண்டுவை பயன்படுத்திப் பார்க்கும் ஆர்வத்தில் KDE அமைப்பை கண்டபடி மாற்றி அமைத்து குளறுபடி செய்துவிட்டேன். ஒரு கட்டத்தில் என்னென்னவற்றில் மாற்றம் செய்தோம் என்று என்னால் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியவில்லை. ஆகையால் குபுண்டுவை நிறுவும் போது எப்படி இருந்தததோ அது போலவே இருந்து விட்டால் நன்றாக இருக்கும் என நினைத்தேன்.

கீழ்காணும் கட்டளையை முனையத்தில் கொடுத்ததன் மூலம் அதை செய்ய முடிந்தது.

mv /.kde/ ~/.kde.old

குபுண்டுவை மறுதொடக்கம்(Restart) செய்து உள்நுழைந்த போது புத்தம் புதிய KDE Desktop கிடைத்தது. குபுண்டு Desktop இல் என்னத்தை வேண்டுமானாலும் மாற்றி அமைத்து விட்டு, இந்த கட்டளையை கொடுத்து விட்டால் பழையபடி KDE Desktop கிடைத்து விடும். இருந்தாலும் என்னுடைய KDE Settings ஐ மாற்றி அமைத்து வெட்டு/குத்து செய்யும் படலம் தொடரும். அதன்பிறகு இந்த கட்டளையை கொடுத்து Restore செய்யும் படலுமும் தொடரும்.


Reference: