Mar 18, 2014

Triple Booting - இரண்டிற்கு மேற்பட்ட இயங்குதளங்களை நிறுவுதல் - Windows7 + Ubuntu 12.04 LTS + Fedora 20 + CentOS 6.5

ஒரு வன்வட்டில் அதிகபட்சமாக எத்தனை இயங்குதளங்களை நிறுவ முடியும்? இரண்டு இயங்குதளங்களுக்கு மேல் நிறுவமுடியாதா? அப்படி நிறுவினால் அனைத்து இயங்குதளங்களையும் ஏன் அணுகமுடியவில்லை? Dual Booting மூலம் விண்டோஸ்+லினக்ஸ் என இரண்டு இயங்குதளங்கள் மட்டும்தான் சாத்தியமா? இது போன்ற கேள்விகள் அனைவரின் மனதிலும் இயல்பாகவே எழும். ஒரு வன்வட்டில் இரண்டு இயங்குதளங்களுக்கு மேல் நிறுவமுடியாது என்றில்லை, எத்தனை இயங்குதளங்களை வேண்டுமானாலும் நிறுவ முடியும். அதிகபட்சமாக எவ்வளவு என்று கேட்டீர்களேயானால், அதற்கான பதில், ஒரு வன்வட்டில் எத்தனை பார்ட்டிசியன்கள் அதிகபட்சமாக இருக்கிறதோ அதனைப் பொறுத்து நாம் அத்தனை இயங்குதளங்களையும் நிறுவிக்கொள்ள முடியும். எண்ணிக்கையில் வேண்டுமானால் ஒன்றிரண்டு குறையலாம். அவ்வளவுதான்.

லினக்ஸ் இயங்குதளத்தை பயன்படுத்தும் நாம் அனைவரும் பெரும்பாலும் நம்முடைய கணினியில் ஏற்கனவே நிறுவப்பட்டிருக்கும் விண்டோஸ் இயங்குதளத்துடன் சேர்த்து லினக்ஸை நிறுவி பயன்படுத்துவோம். ஆக மொத்தம் ஒரு வன்வட்டில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லாமல் விண்டோஸ்+லினக்ஸ் என இரண்டு இயங்குதளங்களை நிறுவி பயன்படுத்த முடியும். இந்த செய்தி பெரும்பாலும் அனைவருக்கும் அறிந்த ஒன்றே.

ஆனால் இதையும் மீறி மூன்று, நான்கு, ஐந்து என எத்தனை லினக்ஸ் இயங்குதளங்களை வேண்டுமானாலும் நிறுவி பயன்படுத்த முடியும். அதற்கான வழிமுறைகள் என்ன? என்பதைப் பற்றித்தான் இந்த பதிவில் நாம் காண இருக்கிறோம். நமது தோழர்களில் பலபேருக்கு நிறைய லினக்ஸ் வழங்கல்களை பயன்படுத்திப் பார்க்கவேண்டும் என்ற ஆசை இருக்கும். அவர்களுக்கு இந்த வழிமுறை உதவும் என நினைக்கிறேன்.

என்னுடைய மடிக்கணினியில் விண்டோஸ் 7 + உபுண்டு 12.04 + பெடோரா 20 ஆகிய மூன்று இயங்குதளங்களை நிறுவி வைத்திருக்கிறேன். தேவைப்பட்டால் இன்னும் மூன்று இயங்குதளங்களை(லினக்ஸ்)க்கூட நிறுவ முடியும்.

இயல்பாக நாம் என்ன செய்வோம், முதலில் விண்டோஸ் இயங்குதளத்தை நிறுவுவோம் அதன்பிறகு உபுண்டு லினக்ஸை நிறுவுவோம். உபுண்டுவினுடைய GRUB Boot Loader Menu மூலமாக Windows அல்லது உபுண்டு இந்த இரண்டில் எந்த இயங்குதளத்திற்குள் செல்ல வேண்டுமோ அதை தேர்வு செய்து அந்த இயங்குதளத்திற்குள் உள்நுழைவோம்.

அதுபோல விண்டோஸ் மற்றும் உபுண்டு தவிர்த்து மூன்றாவதாக ஒரு லினக்ஸ் நிறுவும் போது அதனுடைய Boot Loader ஐ Hard Disk இன் Master Boot Record(MBR) இல் நிறுவாமல் எந்த பார்ட்டிசியனில் மூன்றாவது லினக்ஸ் இயங்குதளத்தை நிறுவுகிறோமோ அந்த பார்ட்டிசியனிலேயே Boot Loader ஐயும் நிறுவ வேண்டும். உதாரணமாக மூன்றாவதாக /dev/sda4 பார்ட்டிசியனில் பெடோராவை நிறுவினால் Boot Loader ஐ /dev/sda வில் நிறுவாமல் /dev/sda4 லேயே நிறுவ வேண்டும். அதன்பின் மூன்றாவதாக நிறுவிய இயங்குதளத்தை உபுண்டுவினுடைய GRUB Boot Loader Menu வில் இணைக்க வேண்டும். நான்காவதாக ஒரு லினக்ஸை நிறுவினாலும் இதே முறைதான். ஐந்தாவதாக ஒரு லினக்ஸை நிறுவினாலும் இதே முறைதான். முக்கியமான செய்தி என்னவென்றால் /dev/sda வில் MBR ஐ நிறுவக்கூடாது அவ்வளவுதான்.



மூன்றாவதாக நிறுவிய லினக்ஸ் இயங்குதளத்தின் GRUB Boot Loader ஐ Master Boot Record இல் நிறுவாததால். நிறுவல் முடிந்தவுடன் கணினியை மறுதொடக்கம் செய்து பார்த்தால் எப்பொழுதும் போல உபுண்டுவினுடைய GRUB Menu வே உங்களுக்கு கிடைக்கும். அதில் நாம் மூன்றாவதாக நிறுவிய பெடோரா இருக்காது. அதற்காக உபுண்டு லினக்ஸிற்குள் சென்று Terminal இல் sudo nautilus என தட்டச்சு செய்து Enter Key ஐ அழுத்தவும். அதன்பிறகு /boot/grub/ அடைவிற்குச்(Folder) சென்று grub.cfg கோப்பினைத் திறந்து கீழ்காணும் வரிகளை இணைக்க வேண்டும்.

நீங்கள் மூன்றாவதாக நிறுவிய லினக்ஸ் இயங்குதளம்,

CentOS ஆக இருந்தால்

### END /etc/grub.d/40_custom ### வரிக்கு கீழே கீழ்காணும் வரிகளைச் சேர்க்கவும்

menuentry "Cent OS 6.5" {
         set root=(hd0,4)
         linux /boot/vmlinuz-2.6.32-431.el6.i686 root=/dev/sda4
initrd /boot/initramfs-2.6.32-431.el6.i686.img
}

Fedora வாக இருந்தால்

### END /etc/grub.d/40_custom ### வரிக்கு கீழே கீழ்காணும் வரிகளைச் சேர்க்கவும்

menuentry "Fedora 20" {
         set root=(hd0,4)
         linux /boot/vmlinuz-3.11.10-301.fc20.x86_64 root=/dev/sda4
initrd /boot/initramfs-3.11.10-301.fc20.x86_64.img
}



இங்கு root=/dev/sda4 , set root=(hd0,4) என நான் என்னுடைய மடிக்கணினிக்கு ஏற்ப கொடுத்திருக்கிறேன். நீங்கள் உங்களது வன்வட்டில் நிறுவும் போது எந்த partition னில் நிறுவுகிறீர்களோ அதை கொடுக்கவும். அதுபோல மேல குறிப்பிட்டு இருப்பதில் vmlinuz<...> மற்றும் initramfs<...> ஆகியவற்றின் கோப்புகளின் சரியான பெயரை கொடுக்க நீங்கள் எந்த partition னில் இயங்குதளத்தை நிறுவினீர்களோ அங்கு சென்று /boot அடைவிற்குள் இருக்கும் பெயரை Copy செய்து எழுத்துப்பிழையில்லாமல் கொடுக்கவும்.

grub.cfg கோப்பினைச் சேமிக்கவும். கணினியை மறுதொடக்கம் செய்யவும். கிடைக்கும் GRUB Menu வில் நீங்கள் பொடோராவை நிறுவியிருந்தால் பெடோராவுக்கான தேர்வும், CentOS நிறுவியிருந்தால் அதற்கான தேர்வும் கிடைக்கும்.




அப்புறம் ஏன் சும்மா இருக்குறீங்க? அடுத்த வேலைய ஆரம்பிக்க வேண்டியதுதானே!

மேலும் தெரிந்து கொள்ள:
http://www.linuxforu.com/2009/03/install-linux-straight-from-an-iso/
https://help.ubuntu.com/community/Grub2/ISOBoot
https://help.ubuntu.com/community/Grub2/ISOBoot/Examples

3 comments:

கணினி அறிவியல் said...

This post is very useful info for all users. One of good post in your blog. Thanks Kathirvel R.

கணினி அறிவியல் said...

This post is very useful for all users. One of the good post in your blog. keep continue your support. thanks

இரா.கதிர்வேல் said...

நன்றி கணினி அறிவியல்.