Jan 12, 2014

வலைப்பக்க உருவாக்க கருவி Brackets Editor ஐ உபுண்டு 12.04 இல் நிறுவுதல்

தமிழ் CPU ந.ர.செ.ராஜ்குமார் வலைப்பக்க உருவாக்க கருவி Brackets Editor ஐ பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தார். அதைப் படித்துப் பார்த்தேன். அருமையான தகவல்களை அளித்துள்ளார். அதில் "தொடக்க நிலையில் மேக் இயக்கச் சூழலில் மட்டும் வெளிவந்த இக்கருவி தற்போது விண்டோஸ், உபுண்டு இயக்கச் சூழலிலும் கிடைக்கிறது" என்று எழுதியிருந்தார்.

Brackets Editor ஐப் பற்றி நான் சொல்வதைவிட தோழர். ராஜ்குமார் அவர்கள் மிகவும் அழகாகவும், தெளிவாகவும் கூறியுள்ளார். ஒரு முறை படித்துப் பாருங்கள்.

நமக்கு உபுண்டுவில் இந்த வசதி உண்டு எனச் சொன்னால்தான் போதுமே, உடனே அதைச் செய்துப் பார்த்துவிட வேண்டும். இந்தப் பழக்கம் நமக்கு இரத்தத்திலேயே ஊறிப்போச்சுங்க, ஆமாங்க. ஆகையால் Brackets Editor ஐ தரவிறக்கம் செய்வதற்காக அதனுடைய வலைப்பக்கத்திற்குச் சென்றேன்.


வலைப்பக்கத்தை திறந்த உடனேயே Download Brackets Sprint 35(LINUX) என கொடுக்கப்பட்டிருந்தது. அதைச் சொடுக்கினால் உபுண்டு லினக்ஸிற்கு ஏற்ற வகையிலே .deb வடிவில் கோப்பு தரவிறக்கம் ஆனது. 45MB அளவு இருந்தது.

முனையத்தைத் திறந்து cd Downloads எனக் கொடுத்து, அதன்பின் sudo dpkg -i brackets-sprint-35-LINUX32.deb என்று கொடுத்து Brackets Editor ஐ நிறுவினேன். கீழே இருக்கும் படத்தைப் பார்க்கவும்.




உபுண்டுவில் Brackets Editor இன் தோற்றம்:


தோழர் ந.ர.செ.ராஜ்குமார் கூறியது போல Brackets Editor ஆனது "முதல் முறை பயன்படுத்துபவரை திரும்பப் திரும்ப பயன்படுத்த வசீகரிக்கும் " கருவிதான். கல்லூரிகளில் மாணவர்களுக்கு இதுபோன்ற Editor களில் நிரல் எழுத கற்றுக் கொடுத்தால், ஆர்வமுடன் கற்றுக்கொள்வார்கள். அதைவிட்டுவிட்டு இன்றைக்கும் Notepad போன்ற Editor களிலேயே நிரல் எழுத கற்றுக்கொடுத்தால், வெறுப்புத்தான் ஏற்படும். ஆர்வம் ஏற்படாது.

3 comments:

Kumaresan Rajendran said...

அருமையான மென்பொருள், தாங்களுக்கும் தோழர் ந.ர.செ.ராஜ்குமார் அவர்களுக்கும் மிக்க நன்றி,,,,

எனக்கு இந்த மென்பொருள் கண்டிப்பாக பயன்படும்,

Kumaresan Rajendran said...

லினக்ஸ் இயங்குதளங்களுக்கு சிறப்பான டவுண்லோட்மேனேஜர் எது என்று கூறுங்கள்.

இரா.கதிர்வேல் said...

நன்றி குமரேசன்.

விண்டோஸ் இயங்குதளத்துடன் ஒப்பிட்டால் லினக்ஸ் இயங்குதளங்களில் இணைய வேகம் அதிகமாகவே இருக்கும். நான் தரவிறக்கம் செய்வதற்கு தனியாக எந்தவொரு Download Manager ஐயும் உபுண்டு லினக்ஸில் பயன்படுத்துவதில்லை. தேவைப்பட்டால் முனையத்தில்(Terminal) wget கட்டளையை தரவிறக்கம் செய்ய பயன்படுத்திக்கொள்வேன்.