Nov 27, 2013

உபுண்டு 12.04 Gnome Classic Environment -ல் Panel லில் சேர்த்த Item களை நீக்குவது எப்படி?

பழைய கணினியில் உபுண்டு லினக்ஸை நிறுவியதைப் பற்றி இதற்கு முன் எழுதிய பதிவில் கூறியிருந்தேன். நினைவகத்தை சேமிக்கும் பொருட்டு Gnome Classic Environment ஐ நிறுவினேன். அதில் மேலே இருக்கும் Top Panel லில் Chromium Browser, Mozilla Firefox Browser, Terminal, System Monitor, Google Chrome ஆகிய Item களை சேர்த்திருந்தேன். Google Chrome இணைய உலாவி சரிவர ஒத்துழைக்காததால் அதை நீக்கி விட்டேன். ஆனால் Panel லில் அதன் இணைப்பு இருந்தது.


அதை நீக்குவதற்காக அதன்மீது வைத்து வலது சொடுக்கு (Right Click) செய்த பொழுது Launch மற்றும் Properties ஆகிய இரண்டு தேர்வுகள் மட்டுமே கிடைத்தது. அதன்பின் www.askubuntu.com -ல் தீர்வு இருந்தது.


தீர்வு:

Alt Key னை அழுத்திக்கொண்டே எந்த Item ஐ நீக்க வேண்டுமோ அதன் மீது வைத்து வலது சொடுக்கினால் (Right Click)  Move மற்றும் Remove From Panel இரண்டு தேர்வுகள் கிடைக்கும். அதில் Remove From Panel ஐ சொடுக்கினால் Item நீக்கப்படும்.

References:

Nov 21, 2013

பழைய கணினியில் உபுண்டு லினக்ஸ்






அண்ணன் சோம.நீலகண்டன் அவர்கள் ஒரு பழைய HCL நிறுவன மேசைக்கணினி வைத்திருக்கிறார். அந்த கணினியில் அவர் செய்யும் அதிக பட்ச வேலைகள் கணினியில் வட்டுகளைப் போட்டு திரைப்படம் பார்ப்பது, பாடலகள் கேட்பது, மின்னஞ்சல் அனுப்புவது, யூடியூப்பில் காணொளிகள் காண்பது, இணையத்தில் நாளிதழகள் படிப்பது ஆகியவைகள் தான்.

40 GB Hard Disk, Pentium 4 Processor, 512 MB RAM இதுதான் அவருடைய கணினியின் வன்பொருள் விபரம்.

அவர் விண்டோஸ் எக்ஸ்.பி இயங்குதளத்தைதான் பயன்படு வந்தார். அவரிடம் லினக்ஸ் இயங்குதளத்தின் சிறப்புக்களையும், பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளையும், அவரினுடைய பயன்பாட்டிற்கு உபுண்டு லினக்ஸ் எந்தளவிற்கு ஒத்துழைக்கும் என்பதையும் எடுத்துக் கூறினேன். அவரும் ஏற்றுக்கொண்டு உபுண்டுவை நிறுவச்சொன்னார்.

உபுண்டு 12.04.1 LTS பதிப்பை நிறுவினேன். அவர் நீண்டகாலமாக விண்டோஸ் இயங்குதளத்தை பயன்படுத்தி வந்தார் என்பதால் gnome-classic ஐ நிறுவினேன். அதன்பின் ubuntu-restricted-extras, Mobile Media Converter, Google Chrome, Chromium, தமிழ் தட்டச்சு வசதி ஆகியவைகளை நிறுவினேன். பழைய கணினியாக இருந்தாலும் சிறப்பாக  உபுண்டு இயங்குகிறது. 166 MB RAM நினைவகத்தை மட்டுமே தொடக்கத்தில் எடுத்துக்கொள்கிறது.

Google Chrome மிகவும் மெதுவாகத்தான் இயங்குகிறது. முகநூல் போன்றவைகளை பார்வையிட்டால் இன்னும் மெதுவாக வேலை செய்கிறது. ஆனால் Chromium சிறப்பாகவும் வேகமாகவும் இயங்குகிறது. ஆகையால் Google Chrome ஐ அந்த கணினியில் பயன்படுத்த வேண்டாம் எனச் சொல்லிவிட்டேன்.

கணினியின் விபரங்களையும் மற்றவைகளையும் மேலே Screenshot எடுத்து போட்டுள்ளேன் பாருங்கள்.  நமது தோழர்கள், நண்பர்கள் வீட்டில் இருக்கும் பழைய கணினிகளில் அவர்கள் விண்டோஸ் இயங்குதளத்துடன் போராடி வந்தால் அவர்களுக்கும் உபுண்டு லினக்ஸை நிறுவிக் கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தலாமே!

Nov 6, 2013

12 வது உலகத் தமிழ் இணைய மாநாடு 2013 - கட்டுரைகள்


12 வது உலகத் தமிழ் இணைய மாநாடு கோலாலம்பூர், மலேசியாவில் ஆகஸ்ட் 15 லிருந்து 18 வரை (ஆகஸ்ட் 15-18 2013) அன்று தொடர்ச்சியாக நான்கு நாட்கள் நடைப்பெற்றது. இதுவரையிலும் நடைபெற்றுள்ள அனைத்து உலகத் தமிழ் இணைய மாநாடுகளும் முக்கியத்துவம் வாய்ந்த மாநாடுகள்தான்.

இந்த மாநாட்டில் வாசிக்கப்பட்ட அனைத்து கட்டுரைகளும் இரண்டு PDF கோப்புக்களாக 16+528  பக்கங்களுக்கு http://ti2013.infitt.org இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் ஆர்வலர்கள், கணினித்தமிழ் ஆர்வலர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் என அனைத்து தரப்பினரும் படிக்க வேண்டிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

தரவிறக்கம் செய்து படித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

[1] INFIT Front Pages - 16 Pages
[2] INFIT 2013 V7 - 528 Pages

மாநாட்டு இதழை சிறப்பாக ஒருங்கிணைத்து வடிவமைத்த மாநாட்டு குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

உபுண்டுவில் Desktop Screen Recording(video) பிரச்சனைக்கான தீர்வு

உபுண்டுவில் திரையினை காணொளியாக பதிவு செய்வதற்கு recordMyDesktop மற்றும் Istanbul மென்பொருள்கள் பயன்படுகின்றது[1][2]. நான் முதலில் பயன்படுத்திப் பார்த்தது Istanbul மென்பொருளைதான். அது நன்றாக வேலை செய்தது ஆனால் பதிவாகிய காணொளியில் சாளரங்கள், தட்டச்சு செய்பவைகள் அனைத்தும் உடைந்து சிதறி காட்சியளித்தது. சில மணி நேரம் Istanbul உடன் போராடிப்பார்த்து விட்டு அடுத்ததாக recordMyDesktop ஐ பயன்படுத்த முடிவு செய்தேன்.


சரியாக பதிவு செய்யப்படாத திரை

recordMyDesktop ஐ நிறுவ முனையத்தில் sudo apt-get install recordmydesktop gtk-recordmydesktop கொடுக்கவும். recordMyDesktop லும் திரையினை பதிவு செய்த பொழுது Istanbul லில் பதிவாகியது போலவே திறக்கப்படும் சாளரங்களெல்லாம் உடைந்து சிதறி பதிவாகியது.

இந்த பிரச்சனைக்கான காரணம் என்னவென்று அலசி ஆராய்ந்து பார்த்ததில் Display Driver தான் காரணமென்று தெரிந்தது.  விவாதக் களங்களில் பல்வேறு விதமான தீர்வுகள் கொடுக்கப்பட்டிருந்தாலும் அதையெல்லாம் செய்து பார்த்து, மொத்தமாக உபுண்டு இயங்குதளத்தையே பயன்படுத்த முடியாமல் போய் விட்டால் என்னசெய்வது? சில நேரங்களில் கடினமான முயற்சிகளை உபுண்டுவில் மேற்கொள்ளும் போது  இந்த பயம் தானாக வந்து விடுகிறது.

இந்த பிரச்சனைக்கு மிகவும் எளிமையான தீர்வு ஒன்றினை விவாத களத்தில் கொடுத்திருந்தார்கள். அது என்னவென்றால் Display Resolution ஐ மாற்றிவிட்டு திரையினை பதிவு செய்வது.  இந்த முறையைக் கையாண்ட பொழுது தெளிவாக எந்த பிரச்சனையும் இல்லாமல் பதிவு செய்ய முடிந்தது.



Display settings க்குச் சென்று 1366x768(16:9) என்பதை 1360x768(16:9) என மாற்றம் செய்து சேமித்தேன். அதன்பிறகு recordMyDesktop -ல் பதிவு செய்த பொழுது தெளிவாக பதிவாகியது.