Sep 22, 2013

Pendrive, External Hard Disk ஆகியவற்றை கணினியில் இணைக்கும் போது Nautilus File Manger -ல் திறப்பதை நிறுத்துவது எப்படி?




உபுண்டு லினக்ஸில் Pendrive, External Hard Disk or any storage medias ஆகியவைகளை இணைக்கும் போது அவைகள் தானாகவே Auto Mount ஆகி Nautilus File Manager திறக்கும். இவை தேவையில்லையென்று நாம் கருதினால் மிக எளிதாக அதை Disable செய்யலாம்.

இதை செய்வதற்கு dconf-editor எனும் Tool நிறுவப்பட்டிருக்க வேண்டும். நிறுவப்பட்டிருக்கவில்லையெனில் முனையத்தை(Terminal) திறந்து sudo apt-get install dconf-tools எனக்கொடுத்து நிறுவிக்கொள்ளலாம்.

அதன் பிறகு Dash Home சென்று dconf-editor ஐ திறந்து கொள்ளவும். அதில் இடது புறமாக இருப்பவற்றில் org->gnome->desktop->media-handling சென்று automount-open என்பதற்கு நேராக உள்ள டிக்கை எடுத்து விடுங்கள்.  முடிந்தது இனிமேல் எந்த வகையான  Storage Devices களை இணைத்தாலும் அவைகள் Mount ஆகும் ஆனால் File Manager -ல் திறக்கப்படாது.  விண்டோஸ் இயங்குதளங்களில் பென்டிரைவினை இணைத்தவுடன் autoplay ஆகிறதல்லவா அதைப்போன்றதுதான் இது.

இதை பகிர்ந்து கொண்டதன் அவசியம்:

என்னுடைய Compaq 515 மடிக்கணினி வாங்கி 4 வருடங்கள் ஆகிவிட்டது.  அண்மையில் Over  heating பிரச்சனையினால் இயங்க முடியாமல் நின்று விட்டது. அதனால் மடிக்கணினியினுடைய வன்வட்டினை கழற்றி 2.5' External Hard Disk Case ஒன்றினை ரூ.350 க்கு வாங்கி அதன்மூலமாக அதை வேறொரு மடிக்கணினியில் இணைத்து பயன்படுத்தி வருகிறேன்.


என்னுடைய வன்வட்டில் மொத்தம் 8 பார்ட்டிசியன்கள். உபுண்டு லினக்ஸ் இருந்ததால் அதற்கானவைகளையும் சேர்த்து.  ஒவ்வொரு முறை உபுண்டு லினக்ஸில் இணைக்கும் பொழுதும் 8 பார்ட்டிசியன்களும் mout ஆகி Nautilus File Manager -ல் திறப்பது எனக்கு தொந்தரவாக அமைந்தது.  அதனால் நேரமும் வீணாகியது.   இந்த வன்முறையை எப்படி நிறுத்துவது என தேடிய போது கிடைத்த தீர்வுதான் நீங்கள் மேலே பார்த்த பதிவு.


Sep 16, 2013

ஓப்பன் சோர்ஸ் உலகில் வெற்றி பெற! - 6 டிப்ஸ்

  1. Focus on the fundamentals and learn the concepts well. Too often, the focus is on the ‘step by step’ solution without much understanding of the what, why, and how behind the solution.
  2. Application of Mind (AoM). Learn how to apply the fundamentals (that you already know) to solve problems. Experiment with your ideas and see what comes out of it.
  3. Make ‘new’ mistakes. Learn from your own and others’ mistakes and do not repeat them. This can only happen when you experiment a lot and participate in many forums, especially global ones, as well as being on mailing lists, blogs, etc. Do not be afraid of making mistakes or be afraid of failure. Develop a thick skin and fearlessly ask your own questions.  
  4. Keep updating your skills, based on the latest trends.
  5. Be humble. However much we know, it is insignificant in the larger scheme of things.
  6. Be patient. Success does not come about in a matter of weeks or even months.

Sep 15, 2013

பைத்தானில் CGI நிரல் (CGI Programming in Python)

நீங்கள் ஒரு  Workshop அல்லது Seminar நடத்தகிறீர்கள்  என வைத்துக்கொள்ளுவோம் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பங்கேற்பாளர்கள் தங்களுடைய வருகையை அவர்களின் முழு விபரங்களோடு  முன்பதிவு செய்யவேண்டும் அந்த விபரங்கள் அனைத்தும் தகவல்தளத்தில்(Database) சேமித்து வைக்கப்பட்டு தேவைப்படும் நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இது போன்ற தேவைகளை பைத்தான் CGI நிரல் மூலமாக மிக எளிதாக செய்யலாம்.

பைத்தானில் CGI(Common Gateway Interface) நிரலை எழுதி எப்படி இயக்குவது? எனப் பார்ப்போம். கீழ்காணும் வழிமுறைகள் அனைத்தும் Ubuntu 12.04 LTS இயங்குதளத்தில் செய்துபார்க்கப்பட்டது. விண்டோஸ் இயங்குதளத்திற்கு இந்த வழிமுறைகள் அனைத்தும் பொருந்தாது.

CGI என்றால் என்ன?

Common Gateway Interface(CGI) என்பது HTML இடைமுகப்பை பயன்படுத்தி Programs or Scripts களோடு தொடர்புகொள்வதற்கு பயன்படுத்தப்படும் பொதுவான முறையாகும்.

இதில் மூன்று நிலைகள் உள்ளது அவை:

1.பயனாளர் கொடுக்கும் தகவல்களை HTML Page மூலமாக பெறுதல்
2.Web Server Software (இணைய வழங்கி மென்பொருள்) - HTTP Protocol பயன்படுத்தி பயனர் விடுக்கும் வேண்டுகோளுக்கு தேவையான பக்கங்களை வழங்குதல்.
3.நிரல் மொழிகள் (Programming languages) C, Perl, PHP, Java, Python.  CGI ன் சிறப்பே என்னவென்றால் எந்த நிரல் மொழிகளையும்  Webpage Developement உடன் பயன்படுத்தி பயனருடன் Dynamic க்காக தொடர்புகொள்ளலாம்.

மற்ற மொழிகளுடன் ஒப்பிடுகையில் Python CGI Programming மிகவும் எளிதானது. இங்கு நாம் Apache Web Server ஐ பயன்படுத்த இருக்கிறோம். Apache Server ஆனது பெரும்பான்மையான நிரல் மொழிகளோடு சிறப்பாக வேலை செய்கிறது.

நிரலை இயக்கத் தேவையானவை

1.Python
2.Apache Server
3.MySql (Optional)
4.Web Browser (Google Chrome, Mozilla Firefox)

Python, Internet Browser(Mozilla Firefox) இவையிரண்டும் உபுண்டு லினக்ஸை பொறுத்தளவில் இருப்பியல்பாகவே நிறுவப்பட்டு இருக்கும்.  ஆகையால் இவையிரண்டையும் நாம் தனியாக நிறுவத் தேவையில்லை.

Apache Server நிறுவப்பட்டிருக்காது அதனால் நாம்தான் நிறுவிக்கொள்ள வேண்டும். அதற்கு முனையத்தைத்(Terminal) திறந்து கீழ்காணும் கட்டளையை இயக்கவும்.

sudo apt-get install lamp-server^

இந்தக் கட்டளையினை நீங்கள் இயக்கினால் Apache Server, MySQL Database ஆகிய இரண்டும் சேர்த்தே நிறுவப்பட்டுவிடும். LAMP(Linux Apache Mysql Php) தெரிந்து கொள்ள இங்கு செல்லவும்.

Apache Server வெற்றிகரமாக நிறுவப்பட்டுவிட்டதா எனத் தெரிந்து கொள்ள இணைய உலாவி ஏதாவது ஒன்றினை திறந்து முகவரிப்பட்டையில் http://localhost எனத் தட்டச்சு செய்து இயக்கவும். 'It Works' என்ற செய்தி கிடைத்தால் வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளது என அர்த்தம்.



CGI Python நிரல் எழுத தொடங்குதல்

முதலில் நாம் Apache Server னினுடைய Conf கோப்பில் python நிரலை இயக்குவதற்குண்டான வரிகளை சேர்க்க வேண்டும். அதற்கு முனையத்தை திறந்து

sudo gedit /etc/apache2/sites-available/default



எனக் கொடுத்து இயக்கவும் கோப்பு திறக்கப்படும் அதில்

AddHandler cgi-script .cgi .py



எனும் வரிகளை சேர்க்கவும்.  கோப்பினை சேமிக்கவும்.

அதன் பின்பு /usr/lib/cgi-bin/ அடைவை அணுக அனுமதியளித்தல்




CGI Python நிரல் எழுதுதல் 


மேற்கண்ட நிரலை உங்களுக்கு பிடித்தமான Text Editor -ல் எழுதி /usr/lib/cgi-bin/ அடைவிற்குள் சேமிக்கவும். நிரலுக்கு நான் example.py என்று பெயரிட்டுள்ளேன்.  நீங்கள் உங்களுக்கு பிடித்தமான பெயரினைக் கொடுத்துக்கொள்ளலாம்.

நிரலை Executable ஆக மாற்றுதல் 

முனையத்தை திறந்து sudo chmod +x /usr/lib/cgi-bin/example.py எனக் கொடுத்து இயக்கவும்.



நிரலை இணைய உலாவியில் காணுதல்

உங்களுக்கு பிடித்தமான ஏதாவதொரு இணைய உலாவியினைத் திறந்து  அதனுடைய முகவரிப்பட்டையில்  http://localhost/cgi-bin/example.py எனக்கொடுத்து இயக்கவும்.


மேலும் தெரிந்து கொள்ள இங்கு செல்லவும்.