Mar 2, 2013

ஓப்பன் சோர்ஸின் ஒப்பில்லா மொழி பைத்தான் - பைத்தான் நிறுவுதல்


பைத்தான் மொழியானது விண்டோஸ், ஆப்பிள் மற்றும்  லினக்ஸ் என அனைத்து இயங்குதளங்களிலும் நன்றாக இயங்கக்கூடிய ஒரு அற்புதமான கணினி மொழி.

லினக்ஸ் இயங்குதளங்களில் பைத்தான் நிறுவுதல்:

நாம் ஏதாவது ஒரு லினக்ஸ் வழங்கலை பயன்படுத்திக் கொண்டிருந்தோமானால்(உதாரணமாக: உபுண்டு, பெடோரா, ரெட்ஹெட், மாண்ட்ரேக், சுசி லினக்ஸ் போன்றவைகள்.)

இந்த லினக்ஸ் இயங்குதளங்களில் ஏற்கனவே பைத்தான்    கண்டிப்பாக நிறுவப்பட்டு இருக்கும்.  லினக்ஸ் வழங்கல்களில் பைத்தான் நிறுவப்படாமல் இருக்க பெரும்பாலும் வாய்ப்பில்லை.

உங்களது  லினக்ஸ் இயங்குதளத்தில் பைத்தான் நிறுவப்பட்டுள்ளதா என சோதித்து பார்ப்பதற்கு கீழ்காணும் கட்டளையினை முனையத்தில் தட்டச்சு செய்து இயக்குங்கள்.

$python -V
Python 2.6.6


கவனிக்க:

$ - குறியீடானது முனையத்தின் Shell ஐ குறிப்பதாகும். V யினை பெரிய எழுத்தில் கொடுக்க வேண்டும். Small letter கிடையாது. $ குறியினையும் சேர்த்து தட்டச்சு செய்ய வேண்டாம். python -V என  தட்டச்சு செய்து இயக்கியவுடன், நிறுவப்பட்டிருக்கும் பைத்தான் பதிப்பினை வெளியீடாக கொடுக்கும். அப்படியென்றால் பைத்தான் உங்கள் கணினியில் நிறுவப்பட்டுள்ளது என்று அர்த்தம்.

அல்லது கீழ்காணும் வெளியீடு கிடைத்தால், பைத்தான் நிறுவப்படவில்லை என்று அர்த்தம்.

$python -V
bash: python: command not found

இந்த கட்டளையினை முனையத்தில் இயக்கி பிழை செய்தி கிடைப்பது அரிது. இருந்தாலும் ஒருவேளை பிழை செய்தி காட்ட வாய்ப்பிருக்கிறது.

பைத்தான் நிறுவியிருக்கப்படவில்லை எனில் நாம் நிறுவிக் கொள்ளலாம்.


முனையத்தை திறந்து,

sudo apt-get install python

எனக் கொடுத்து நிறுவிக்கொள்ளலாம்.

விண்டோஸ் இயங்குதளங்களில் பைத்தான் நிறுவுதல்:




விண்டோஸ் இயங்குதளங்களில் பைத்தான் ஏற்கனவே நிறுவப்பட்டிருக்காது. அட! பைத்தான் என்னங்க விண்டோஸ் இயங்குதளத்துடன் Internet Explorer இணைய உலாவியினை தவிர வேறு எதுவுமே நிறுவப்பட்டு வராது. ஆகையால் நாம்தான் தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ள வேண்டும்.

விண்டோஸ் இயங்குதளங்களுக்கான பைத்தான் பொதியினை தரவிறக்கம் செய்ய. இங்கு செல்லவும்.


தரவிறக்கம் செய்து மற்ற மென்பொருள்களை நிறுவுவதுப் போலவே பைத்தானையும் நிறவிக்கொள்ள வேண்டியதுதான்.

பைத்தான் மொழி கணினியில் இயங்குவதற்கு தயாராக இருக்கிறது. பிறகு என்ன வேலையினை ஆரம்பிக்க வேண்டியதுதானே !

5 comments:

Kumaresan Rajendran said...

பைத்தான் மென்பொருளை தரவிறக்கம் செய்து நிறுவிவிட்டேன், அடுத்து எவ்வாறு அதனை பயன்படுத்துவது...,

யூர்கன் க்ருகியர் said...

நன்றி. தொடர்ந்து பயில ஆர்வமாயிருக்கிறேன்.

இரா.கதிர்வேல் said...

நன்றி குமரேசன். பைத்தானைப் பற்றிய செய்திகள் தொடர்ந்து வெளிவரும் அதன் செய்துபாருங்கள்.

இரா.கதிர்வேல் said...

நன்றி யூர்கன் க்ருகியர்.

Anonymous said...

எனது லினக்ஸ் மின்ட் - OS -இல் python ஏற்கனவே நிறுவ பட்டு உள்ளது. நன்றி