Jun 7, 2012

முனையத்தில் Time கட்டளையினை StopWatch ஆக பயன்படுத்தலாம்


முனையத்தை நாம் பல்வேறு பயன்பாடுகளுக்காக பயன்படுத்துவோம்.  இன்னும் சொல்லப் போனால் முனையம் இல்லாமல் லினக்ஸ் இல்லை.  இவ்வாறு பல்வேறு  பயன்பாடுகளுக்காக பயன்படும் முனையத்தில் time கட்டளையினை stopwatch ஆக பயன்படுத்தலாம்.

முனையத்தை திறந்து (முனையத்தை திறக்க Ctrl+Alt+T ஒரு சேர அழுத்துங்கள்) time read என தட்டசு செய்து Enter Key னை அழுத்துங்கள்.

அழுத்தியவுடன் வெளியீடுகள் எதுவும் கிடைக்காது.  ஆனால் பின்புலத்தில் நேரத்தை கணக்கிட்டு கொண்டு இருக்கும்.   Ctrl+D Key ஒருசேர அழுத்தியவுடன்  வெளியீடு கிடைக்கும்.   அதில் real என்பதற்கு நேராக உள்ள நேரம்தான் Stopwatch -ன் நேரம்.

real என்பதற்கு நேராக உள்ள நேரம் ஒரு கட்டளையினை ஆரம்பித்து முடிப்பதற்கு இடைப்பட்ட காலம் ஆகும்.  அதைத்தான் இங்கு நாம் Stopwatch ஆக பயன்படுத்துகிறோம்.