Nov 5, 2012

பெரும்பாலான விண்டோஸ் 8 இயங்குதளங்கள் நிறுவியிருக்கும் கணினிகளில் நாம் லினக்ஸைப் பயன்படுத்தலாம், Linux Foundation அதற்கான தீர்வை கண்டுபிடித்திருக்கிறது


Linux Foundation -னுக்கு நன்றி

Unified Extensible Firmware Interface (UEFI) :


UEFI என்பது இயங்குதளத்திற்கும், Firmware க்கும் இடையில் உள்ள ஒரு மென்பொருள்  இடைமுகப்பு ஆகும்.  இது BIOS Firmware இடைமுகைப்புக்கான ஒரு மாற்று. BIOS க்கான மாற்று என்றுக்கூட எடுத்துக் கொள்ளலாம்.

அனைத்துவிதமான IBM-PC களிலும் இது தற்பொழுது பயன்பாட்டில் உள்ளது.  பயன்பாட்டு ரீதியாக பார்க்கும் பொழுது பெரும்பாலான UEFI Images -கள் BIOS Services க்கு மரபு ரீதீயான ஆதரவை வழங்குகிறது.

மற்றொரு இயங்குதளத்தினுடைய உதவிகள் இல்லாமலையே கணினியினுடைய பழுது மற்றும் கண்டறிதல் வேலைகளினை தூரத்திலிருந்தே செய்ய அனுமதிக்கிறது.

EFI (Extensible Firmware Interface) னினுடைய உண்மையான விவர குறிப்புகள் இன்டெல் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டது.

இதைப் பற்றி மேலும் தெரிந்துக் கொள்ள இந்த சுட்டிக்கு செல்லவும்.

மைக்ரோசாப்டின் குறுக்குப் புத்தி:

மைக்ரோசாப்ட் நிறுவனம் UEFI தொழில்நுட்பத்தினை தூக்கிப் பிடிப்பதற்கான காரணமே விண்டோஸ் 8 இயங்குதளம்  நிறுவியுள்ள கணினியில், லினக்ஸ் இயங்குதளத்தினை இரட்டை நிறுவுதாலாக நிறுவிப்  பயன்படுத்தக் கூடாது என்பதற்காகவும்,

இனி வரும் காலங்களில் லினக்ஸை இரட்டை நிறுவுதலாக  நிறுவிப் பயன்படுத்தும் முறையினை  தடை செய்வதற்க்காகவுமேயாகும்.

ஆனால் மைக்ரோசாப்ட் நிறுவனம் என்ன நியாயம் கற்பிக்கிறது என்றால்,  திருட்டு மென்பொருள்கள் மற்றும் இயங்குதளங்கள் பயன்படுத்துவதினை தடுப்பதற்குத்தான்  இந்த UEFI தொழில்நுட்பம் எனக் கூறுகிறது.

இந்த பிரச்சனை ஒரு 7-8 மாதங்களுக்கு முன்பே ஆஸ்திரேலிய லினக்ஸ் பயனாளர்கள் குழுக்களால் விவாதிக்கப்படு எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டது. தீர்வு என்னவோ இப்பொழுதுதான் கிடைத்திருக்கிறது.

இந்தப் பிரச்சனைக்கு  தீர்வு கண்டதன் மூலம் இனி வரும் காலம் லினக்ஸிற்குத்தான் என்பதை வெள்ளோட்டமாக  உலகுக்கு மெய்பித்துக்  காண்பிக்கப்பட்டுள்ளது.

UEFI பிரச்சனைக்கு Linux Foundation தீர்வு கண்டுபிடித்து முடிவு கட்டியிருக்கிறது:

முன்னிருப்பாகவே விண்டோஸ் 8 இயங்குதளம் நிறுவி வரும் கணினிகளில் , பெரும்பாலான ஓப்பன் சோர்ஸ் இயங்குதளங்களை பயனாளர்கள் இரட்டை நிறுவுதலாக பயன்படுத்துவதற்கு Linux Foundation தீர்வு கண்டுபிடித்திருக்கிறது.

UEFI அல்லாத BIOS உள்ள கணினியில் அனைத்து லினக்ஸ் இயங்குதளங்களையும் மிகவும் எளிதாக எந்த பிரச்சனையுமின்றி விண்டோஸ் இயங்குதளத்துடன் நிறுவிப் பயன்படுத்தலாம்.  ஆனால் UEFI தொழில்நுட்பத்துடன் முன்னிருப்பாக நிறுவி வரும் விண்டோஸ் 8 உள்ள கணினிகளில் லினக்ஸை நிறுவுவது கொஞ்சம் கடினம்.

இந்த  UEFI Secure Boot தொழில்நுட்பம் gatekeeper -ரைப் போல செயல்படும். security key உள்ள இயங்குதளத்தினை மட்டுமே Boot ஆக அனுமதிக்கும்.

Gate pass இல்லையென்றால் உள்ளே நுழைய அனுமதியில்லாதது போல , security key இல்லையென்றாலும் உள்ளே நுழைய அனுமதியில்லை.

Secure Boot னுடைய மற்றுமொரு Advantage என்ன வென்றால்,  கணினி Boot ஆகும் பொழுது செயல்படும் வைரஸ் மற்றும் மால்வேர்களின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும்.

ஆனால், பிரச்சனை என்னவென்றால் இந்த கடுமையான பாதுகாப்பு அம்சத்தினால் , Unsigned மென்பொருள்கள் , லினக்ஸை நிறுவுவதற்கு பயன்படும் நிரல்கள் போன்றவைகளையும் சேர்த்து தடை செய்கிறது.  இதற்குத்தான் Linux Foundation தீர்வு கண்டுபிடித்திருக்கிறது.



4 comments:

அணில் said...

இனிப்பான தகவல்

sivananthan.m said...

தோழருக்கு வணக்கம், நான் என்னுடைய கணினியில் வின்டோஸ் எக்ஸ்பி மற்றும் உபுண்டு10.04 ஓஎஸ் பயன்படுத்தி வருகிறேன். நான் லினக்ஸிற்கு புதியவன், எனது கணினியில் உபுண்டு 12.10 எப்படி நிறுவுவது, மற்றும் அதில் மைக்ரோமேக்ஸ் 353 3ஜி மோடத்தை எப்படி நிறுவுவது என்பதனையும் தெரிவியுங்கள், நன்றி.

இரா.கதிர்வேல் said...

பின்னூட்டங்களின் மூலம் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருவதற்கு நன்றி தோழர் ந.ர.செ.ராஜ்குமார் அவர்களே.

இரா.கதிர்வேல் said...

///sivananthan.m said...///

நீங்கள் ஏற்கனவே நிறுவியிருக்கும் 10.04 னை எப்படி நிறுவினீர்களோ அதே போன்றுதான் 12.10 னையும் நிறுவ வேண்டும். நிறுவுதல்களில் ஏதும் மாற்றம் இருக்காது. (வேறு ஏதாவது ஒரு முறையில் நிறுவ வேண்டுமானால் என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு தெளிவாக எழுதி அனுப்புங்கள்).

Micromax 3G modem னை லினக்ஸில் நிறுவுவது எப்படி என்று அந்த நிறுவனத்தின் கையேட்டினை படித்துப் பாருங்கள் அல்லது பெரும்பாலும் லினக்ஸ் Automatic காக Driver னை நிறுவிக்கொள்ளும். Network Connections --> Mobile Broadband Option மூலம் முயற்சி செய்து பாருங்கள்.