May 27, 2012

உபுண்டு 12.10 -க்கு பெயர் சூட்டியாச்சு - Quantal Quetzal


அண்மையில்தான் உபுண்டு 12.04 LTS பதிப்பு வெளியிடப்பட்டு பயனாளர்கள் மத்தியில்  அதீத வரவேற்பை பெற்று வெற்றிக்கரமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

உபுண்டு 12.04 LTS பதிப்பினுடைய முக்கியமான, குறிப்பிடத் தக்க அம்சம் என்னவென்றால்,  இதுவரை வெளியிடப்பட்ட உபுண்டு LTS பதிப்புகளுக்கு  மூன்று வருடம் மட்டுமே ஆதரவு கொடுக்கப்பட்டு வந்தது.  இந்த  12.04 LTS பதிப்பிலிருந்து ஐந்து வருடமாக மாற்றப்பட்டுள்ளது.   மிக்க மகிழ்ச்சி.

இவ்வாறு மகிழ்ச்சியடைந்துக்  கொண்டிருக்கும் வேளையில்,  Mark Shuttleworth அவர்கள், உபுண்டுவினுடைய அடுத்த பதிப்பானது 12.10 க்கான Code Name வெளியிட்டிருக்கிறார்.

உபுண்டு 12.10 க்கான Code Name -  Quantal Quetzal

Quetzal - என்பது வானவில்லில் காணப்படும் பச்சை நிற இறகுகளைக் கொண்ட, Western Mexio -வில் காணப்படும் ஒரு வகை பறவைக் குடும்பத்தைச் சேர்ந்தது.


May 16, 2012

gEdit - Text Editor விண்டோஸ் இயங்குதளத்திலும் பயன்படுத்தலாம்


லினக்ஸ் இயங்குதளம் பயன்படுத்தும் அனைவரும் gEdit - Text Editor -னைப் பயன்படுத்தி இருபோம். gEdit நிரல்கள் எழுதுவதற்கு மிகவும் சிறப்பானதொரு உரை எழுதியாகும்.  GNOME  Desktop Environment -ல் gEdit இருப்பியல்பாகவே கொடுக்கப்பட்டு வருகிறது.

லினக்ஸ் இயங்குதளங்களைப் பொறுத்த வரையில் gEdit -னை விட சிறப்பான உரை எழுதிகள் இருக்கின்றன.  எடுத்துக்காடிற்கு Vim, Emacs, Nano போன்றவைகளைக் குறிப்பிடலாம்.

நாம் மேற்கண்ட Vim, Emacs, Nano உரை எழுதிகளையெல்லாம் முழுவதும் கட்டளைகளைக் கொண்டே செயல்படுத்த வேண்டும்.  ஒரு சில பயனாளர்கள் இது போன்று கட்டளைக் கொண்டு செயல்படுத்துவதை விரும்பமாட்டார்கள்.  அவர்களுக்கு gEdit ஒரு மாற்றாகும்.

gEdit நிரல்கள் எழுதுவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.  புதிதாக நிரல்கள் எழுதி பழகும் மாணவர்கள், பயனாளர்கள் gEdit -னைப் பயன்படுத்தினால் மிகவும் மகிழ்ச்சியாக நிரல்கள் எழுதிப் பழகுவார்கள்.

இத்தகைய  சிறப்பு வாய்ந்த gEdit Text Editor -னை விண்டோஸ் இயங்குதளத்திலும் பயன்படுத்தினால் நன்றாக இருக்குமல்லவா.  ஆகையால் இணையத்தில் தேடிப்பார்த்தேன் கிடைத்தது.  தரவிறக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்.

முதன்முதலாக நிரல்களை எழுதிப் பார்க்கும் மாணவர்கள், பயனாளர்கள்  Windows இயங்குதளத்தினுடைய Notepad -னைப் பயன்படுத்த வேண்டாம்.  நிரல்கள் எழுதும் ஆர்வத்தையே Notepad கெடுத்துவிடும் என்பது என்னுடைய அனுபவத்தில் நான் தெரிந்துக்கொண்டது.  ஒரு வரி எண்ணைக் கூட பிரதிப்பலிக்காத Editor.

அதற்குப் பதிலாக jEdit, gEdit, Notepad++ போன்ற உரை எழுதிகளைப்  பயன்படுத்தலாம்.