Aug 30, 2011

ஏன் வன்வட்டில் (Hard Disk) நான்கு Primary Partition களுக்கு மேல் பிரிக்க முடிவதில்லை


நம்மால் வன்வட்டில் நான்கு Primary Partition களுக்கு மேல் பிரிக்க முடியாது. இதற்கு MBR (Master Boot Record) னுடைய அமைப்புத்தான் காரணம். Master Boot Record ஆனது Partition Table னை சேமித்து வைக்க 64-Bytes னை மட்டும்தான் எடுத்துக்கொள்கிறது.

ஒரு Partition னினுடைய தகவலை சேமிக்க 16 - Bytes னை எடுத்துக்கொள்கிறது. ஒரு Partition க்கு 16 - Bytes வீதம் 4 Partition களுக்கு 64 Bytes. அதாவது 64 Bytes -ல் நான்கு Partition களினுடைய தகவலைதான் சேமிக்க முடியும். 4 Primary Partition கள் பிரித்தது போக மீதம் உள்ள Bytes கள் Unusable ஆக மாற்றப்படும்.

சரி அப்படியென்றால் ஒரு வன்வட்டில் நான்கு Partition கள் தானே வைத்துக்கொள்ள முடியும். ஆனால் நாம்தான் நிறைய Partition பிரித்து வைத்திருக்கிறோமே என்று கேட்கலாம். வன்வட்டில் 4 primary partition களுக்கு மேல் பிரிக்க முடியாது என்பதில் எந்த விதமான மாற்றுக்கருத்தும் இல்லை. (கவனிக்க வேண்டிய விஷயம் நமக்கு 4 Primary Partition களுக்கு மேல் தேவைப்பட்டால் Extended Partition ல் உள்ள Logical Partition ஐ Primary Partition ஆக பயன்படுத்திக்கொள்ளலாம்).

வன்வட்டில் Primary Partition போக அடுத்ததாக பிரிக்கப்படும் Extended Partition அதாவது Logical Partition னின் தகவல்கள் Master Boot Record ல் சேமிக்கப்படாது. Extended Boot Record ல் சேமிக்கப்படும். Master Boot Record -ல் உள்ளது போல மீதம் உள்ள இடம் Unusable ஆக மாற்றப்படும்.