Jan 28, 2011

Full Circle Magazine னினுடைய 45-வது இதழ் வெளியிடப்பட்டுவிட்டது


உபுண்டு லினக்ஸ் Community யால் வெளியிடப்படும் Full Circle Magazine னினுடைய 45-வது இதழ் வெளியிடப்பட்டுள்ளது. இங்கு சென்று தரவிறக்கிக்கொள்ளுங்கள்.அனைத்து லினக்ஸ் பயனாளர்களும் படித்து பயன்பெறவேண்டிய இதழ்.

Jan 8, 2011

உபுண்டு 10.10 லினக்ஸில் தமிழில் தட்டச்சு செய்யும் வசதியினை Startup -ல் கொண்டுவருவது எப்படி?

உபுண்டு லினக்ஸில் தமிழில் உள்ளீடு மற்றும் தட்டச்சு செய்ய ibus வசதி உபுண்டு 9.10 லிருந்து உபுண்டுவுடன் சேர்த்தே வழங்கப்பட்டது (தமிழ் மொழி உட்பட அனைத்து மொழிகளுக்கும்). ஆனால் தற்பொழுது வெளியிடப் பட்டுள்ள அண்மைய பதிப்பான உபுண்டு 10.10 -ல் ஆங்கிலம் மற்றும் சீன மொழிகளைத் தவிர மற்ற மொழிகளுக்கு தட்டச்சு மற்றும் உள்ளீடு செய்வதற்கான வசதி உபுண்டுவுடன் சேர்த்து வழங்கப்படவில்லை. ஆனால்,

நம்மிடம் இணைய இணைப்பு இருந்தால் மிக எளிமையாக தமிழில் தட்டச்சு செய்யும் வசதியினை கொண்டு வந்து விடலாம். ibus-m17n என்ற பொதியினை Synaptic Package Manager மூலம் நிறுவி விட்டால் போதும் (பார்க்க படம்-1) தமிழில் தட்டச்சு செய்யும் வசதி வந்துவிடும்.இந்த பொதியினை நிறுவிய பிறகு தமிழில் தட்டச்சு செய்யும் வசதியினை கொண்டு வருவது எப்படி என்று நம்முடைய சக தோழர்கள் எழுதியுள்ள கட்டுரைகளை படித்துக்கொள்ளுங்கள்.

உபுண்டு 10.4 இல் தமிழில் தட்டச்சிடல் (தோழர் மயூரேசன்)
உபுண்டு 9.04 இல் தமிழ்ல் 99 (தோழர் மயூரேசன்)
தமிழில் தட்டச்சு செய்ய - Type in Tamil - Ubuntu (தோழர் சேதுபதி)


இவ்வாறு நாம் செய்து முடித்த பிறகு தமிழில் தட்டச்சு செய்ய வேண்டுமென்றால் ஒவ்வோரு முறையும் System => Preferences => Keyboard Input Methods சென்று துவங்க வேண்டும். இது கொஞ்சம் நேரத்தை வீணடிக்கும் செயல்தான். இதை நாம் உபுண்டு துவங்கும் பொழுதே சேர்த்து துவங்குமாறு அமைத்து விடலாம். இப்படி அமைப்பதால் என்ன பயன் என்று பார்த்தால் உதாரணமாக ,

கூகிளில் தமிழில் ஒரு வார்த்தையை கொடுத்து தேட வேண்டும் என்றால் தமிழில் தட்டச்சு செய்வதற்கான குறுக்கு விசையினை மட்டும் அழுத்தி தமிழில் தட்டச்சு செய்யலாம். கூகுளில் தேடுவதற்கு என்று மட்டுமில்லை தமிழில் எது செய்யவேண்டுமென்றாலும்(உள்ளீடு, தட்டச்சு, தமிழில் கோப்புகள் உருவாக்கம், தமிழில் கோப்புகளுக்கு பெயர் கொடுத்தல்) குறுக்கு விசையினை மட்டும் அழுத்தினால் போதும் தமிழ் வசதி உங்களுக்கு கிடைத்து விடும். இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்

படம்-1

படம்-2

System -> Preferences -> Startup Applications ஐ Click செய்யுங்கள். கிடைக்கும் சாளரத்தில் (Window) Add பொத்தானை அழுத்துங்கள் அதனை தொடர்ந்து கிடைக்கும் சாளரத்தில் (பார்க்க படம் -3)

Name : Tamil Typing
Command : /usr/bin/ibus-daemon -d
Comment : Tamil Typing

என்று கொடுங்கள். கொடுத்து முடித்தபின் Add பொத்தானை அழுத்துங்கள். அதன் பிறகு Close பொத்தானை அழுத்துங்கள் அவ்வளவுதான் முடிந்தது வேலை ஒருமுறை Logout செய்து விட்டு Login செய்யுங்கள் தமிழில் தட்டச்சு செய்வதற்கான வசதி தொடங்கியிருக்கும். (பார்க்க படம் -4)

படம்-3


படம்-4

Jan 4, 2011

Full Cirlce Magazine 44 -வது இதழ் வெளியிடப்பட்டுவிட்டது

உபுண்டு லினக்ஸ் Community யால் வெளியிடப்படும் Full Circle Magazine னினுடைய 44-வது இதழ் வெளியிடப்பட்டுள்ளது.இங்கு சென்று தரவிறக்கிக்கொள்ளுங்கள்.அனைத்து லினக்ஸ் பயனாளர்களும் படித்து பயன்பெறவேண்டிய இதழ்.