Sep 18, 2010

LINUX For Yor Magazine -ல்வெளிவந்த GIMP தொடரின் PDF கோப்புகள்

நான் கடந்த மூன்று வருடமாக LINUX For You Magazine க்கு சந்தாதாரராக இருக்கிறேன்.இந்த இதழை முதன் முதலில் எங்கள் பாலிடெக்னிக்னினுடைய(அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி,அறந்தாங்கி,புதுக்கோட்டை மாவட்டம்) நூலகத்தில் பார்த்தேன்.அப்பொழுது இந்த இதழை படிக்கும் பொழுதெல்லாம் ஒன்றும் புரியாது ஆனால் இதழில் உள்ள படங்களைப் பார்த்து மகிழ்ச்சியடைவேன்.ஏனென்றால் கணினி என்றாலே விண்டோஸ் இயங்குதளத்தினுடைய சாளாரங்களைப் பார்த்து போரடித்து போன எனக்கு ஏதோ புதிதாக ஒரு அதிசயத்தைப் பார்த்தது போன்ற உணர்வு இருக்கும்.இந்த இதழை நூலகர் கணினி துறை மாணவர்களுக்கும்,மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை மாணவர்களுக்கு மட்டுமே கொடுப்பார் படித்துவிட்டு அவரிடமே திருப்பி ஒப்படைத்து விட வேண்டும்.பாலிடெக்னிக் இறுதியாண்டு படிக்கும் பொழுது சந்தாதாரராக ஆகினேன் ஏனென்றால் கல்லூரியை விட்டு வெளியேறிவிட்டால் இதழை படிக்க முடியாது அல்லவா.

ஒவ்வொரு மாதமும் 7-ம் தேதியிலிருந்து 12-ம் தேதிக்குள் எங்கள் கிராமத்தினுடைய தாபால் காரர் மூலம் எனக்கு கிடைத்து விடும்.லினக்ஸை கற்றுக்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள இதழ்,வசதியுள்ள மாணவர்கள் சந்தாதாரகிக்கொள்ளலாம்.ஒவ்வொரு மாதமும் இதழுடன் DVD+CD சேர்த்து வழங்குகிறார்கள்.

சென்னை,கோயம்புத்தூர்,திருச்சி போன்ற முக்கியமான இடங்களில் கண்டிப்பாக கிடைக்கும்.ஒரு தனி இதழின் விலை 100 ரூபாய்.இதழுடன் வரும் DVD யில் ஒரு சிறந்த,முக்கியமான லினக்ஸ் இயங்குதளத்தை கொடுக்கின்றனர் இயங்குதளத்தின அளவு 4.GB க்கு மேல் இருக்கும்,இந்த இயங்குதளத்தை தரவிறக்கம் செய்து பயன்படுத்திப்பார்பது என்பது முடியாத காரியம் தரவிறக்கம் செய்ய நேரமும்,செலவும் அதிகம் பிடிக்கும்.CD யில் Kernel னுடைய புதிய பதிப்புக்குண்டான Package யும் , பயனுள்ள மென்பொருள்களையும் ,தொடராக வெளிவந்த கட்டுரைகளையும் PDF கோப்பாகவும் கொடுக்கின்றனர்.இதழில் உள்ள ஒவ்வொரு கட்டுரையும் மிக அருமையாக உள்ளது.

இதழின் இணையதள முகவரி மற்றும் சந்தா விபரம் தெரிந்து கொள்ள http://www.linuxforu.com
என்னப்பா பதிவுக்கு கொடுத்த தலைப்புக்கும் நீ சொலவதற்கும் சம்பந்தமில்லை என நினைக்காதீங்க,ரொம்ப நாளாக சொல்லனும்னு நினைத்தது.அவ்வளவுதான்.

நாம் விண்டோஸ் இயங்குதளத்தில் பயன்படுத்தும் Photoshop மென்பொருளைப் போல GIMP -ம்(Gnu IMage Manipulation) லினக்ஸில் பயன்படுத்தும் ஒரு மென்பொருள்.இதைப்பற்றி அதிகம் தெரிந்து கொள்ள பிரபு சாரினுடைய சுதந்திர கிம்ப் வலைப்பூவிற்கு சென்று தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த GIMP மென்பொளைப் பற்றிய தொடர் LINUX For You Magazine -ல் பிப்ரவரி-2009 லிருந்து ஜூலை -2010 வரை தொடராக வெளிவந்தது.எனக்கு வந்த இந்த மாத இதழில் அனைத்து தொடர்களையும் PDF கோப்பாக CD -யில் கொடுத்திருந்தனர் இவையனைத்தையும் இணையத்தில் ஏற்றி அவற்றின் இணைப்புகளை கீழே கொடுத்துள்ளேன்.தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
  1. அறிமுகம்
  2. தொடர்-1
  3. தொடர்-2
  4. தொடர்-3
  5. தொடர்-4
  6. தொடர்-5
  7. தொடர்-6
  8. தொடர்-7
  9. தொடர்-8
நான் இங்கு கொடுத்திருக்கும் இணைப்புகளில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் எந்த விதமான தயக்கமும் இல்லாமல் முழு உரிமையுடன் நீங்கள் தெரிவிக்கலாம்.சுதந்திரம் மனிதனின் உரிமை

13 comments:

Tamil Blog said...

உபயோகமான பதிவு.

vikram said...
This comment has been removed by the author.
இரா.கதிர்வேல் said...

நன்றி vikramprabhu
உங்களுடைய வருகை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

இரா.கதிர்வேல் said...

நன்றி Tamil Blog உங்கள் வருகை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது

சரவணன்.D said...

thanks kathir...

அணில் said...

// சம்பந்தமில்லை என நினைக்காதீங்க,ரொம்ப நாளாக சொல்லனும்னு நினைத்தது...

பின்புலக் குறிப்புகளுடன் ஒரு கட்டுரையைப் படிக்கும் சுகமே தனிதான். ஐந்தாறு இதழ்கள் நூறு ரூபாய்க் கொடுத்து வாங்கியிருக்கிறேன். மற்றபடி இது போன்ற சிறந்த இதழ்களைப் படிப்பதற்காகவே நூலகத்தை பயன்படுத்தும் உருப்படியான நல்ல பழக்கத்தை வளர்த்துக் கொண்டேன். ஒத்த கருத்துடைய நண்பரைக் காணும் பொது அதன் மகிழ்ச்சியை சொல்லவா வேண்டும்?

இரா.கதிர்வேல் said...

ந.ர.செ. ராஜ்குமார் said...
// ஒத்த கருத்துடைய நண்பரைக் காணும் பொது அதன் மகிழ்ச்சியை சொல்லவா வேண்டும்?//

ஒத்த கருத்துடைய நண்பரை கண்டதில் எனக்கும் பெரும்மகிழ்ச்சி

நன்றி நண்பர் ந.ர.செ.ராஜ்குமார் அவர்களே

இரா.கதிர்வேல் said...

நன்றி சரவணன்

p said...

அருமையான பதிவு :-) :-)

இரா.கதிர்வேல் said...

நன்றி தோழர் சேதுபதி

Kumaresan Rajendran said...

அடிப்படை கட்டளை தொடரை,
பற்றி இன்னும் எழுதுங்கள்.

Anonymous said...

மக்களுக்கு பயனுள்ளதாக எது கொடுக்கலாம் என்று நீங்கள் சிந்திப்பது இந்த பதிவிலன்மூலம் தெளிவாக தெரிகிறது.

நம்மை அடிமையாக்கி ஆள நினைக்கும் அந்த "... கடை"யை இந்தியாவை விட்டே ஓட ஓட விரட்டுவோம்.

இரா.கதிர்வேல் said...

//suthanthira-ilavasa-menporul.com said...//

நன்றி பிரபு சார்