May 14, 2010

லினக்ஸ் மின்ட் - ATI Graphics Card - நெருப்பு நரியும் -தமிழ் இணையதளங்களும் -எனது Compaq 515 மடிக்கனினிக்கான அனைத்து வசதிகளையும் கொண்ட லினக்ஸும்




நான் வைத்திருக்கும் மடிக்கணினி Compaq 515 மடல் கணினி.நானும் என் மடிகணினியில் Sabayon,Fedora,Debian நிறுவி பார்த்து பயன்படுத்தி விட்டேன்.எனது மடிக்கணினியில் உள்ள Sound Card Driver,WiFi, Blue tooth இதில் ஏதாவது ஒரு வசதியினை விட்டு விடும்.நான் எனது மடிக்கணினியில் முதலில் லினக்ஸ் இயங்குதளம் என நிறுவியது Sabayon 4 லினக்ஸினை Sabayon லினக்சில் ஒலிவசதி நன்றாக வேலை செய்தது ஆனால் WiFi,Blue tooth வசதிகள் வேலைசெய்யவில்லை.எனது பல்கலைக்கழகத்தில் WiFi வசதி இருக்கிறது.இணையம் வசதி இல்லை என்றால் சரிப்பட்டு வராது.சரி அடுத்தக்கட்ட வேலையினை ஆரம்பிப்போம் என்று Debian 5.0 வினை நிறுவினேன் இதிலும் ஒலி வசதி நன்றாக இயங்கியது ஆனால் WiFi,Bluetooth வசதி வேலைசெய்யவில்லை.இதற்க்கு தீர்வு என்னதான் என்று யோசித்துக்கொண்டிருக்கும் பொழுது எனக்கு உபுண்டு 9.04 வட்டு கிடைத்தது.உபுண்டு 9.04 யினை நிகல்வட்டாக இயக்கி பார்த்தேன்.ஒலி வசதி வேலை செய்யவில்லை ஆனால் WiFi,Bluetooth நன்றாக வேலை செய்தது.சரி ஒலி வசதி இல்லை என்றால் என்ன அதான் WiFi,Bluetooth வேலை செய்கிறதே என்று திருப்தியடைந்துகொண்டு உபுண்டு லினக்சை விட்டு பிரிய மனமில்லாமல் உபுண்டு லினக்சையே பயன்படுத்த ஆரம்பித்தேன்.இன்னும் உபுண்டு தான்.நான் திருப்தியடைந்து விட்டேன் நண்பர்கள் திருப்தியடைவார்களா என்னுடைய நண்பர்களும் Compaq 515 மடிக்கணினி தான் வைத்திருக்கிறார்கள்.அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நான்தான் உபுண்டு 9.04 லினக்சை நிறுவிக்கொடுத்தேன்.விண்டோ இயங்கு தளத்தில் விட ,உபுண்டு 9.04 லினக்சில் WiFi வசதி மிகவும் வேகமாக செயல் படுகிறது என்று. சந்தோசமடைந்த்தார்கள்.பாடல்,படங்கள் ( குறிப்பாக mp3,vob) கேட்க முடியாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் அவர்கள் லினக்சை பயன்படுத்த விடாமல் தடுத்தது.இந்த பிரச்சனை லினக்ஸ் மின்ட் ஆல் தீர்ந்தது.

இதில் நான் கூறியிருக்கும் Linux Mint னுடைய வெளியீட்டு பெயர் Linux Mint 5.0
  • லினக்ஸ் மின்ட் இல் ஒலி வசதி நன்றாக வேலை செய்தது
  • Windows Wireless Driver என்பதன் மூலம் WiFi வசதி மிகவும் அருமையாக வேலை செய்தது.Blue Tooth வசதியும் நன்றாக வேலை செய்தது.
  • mp3,mpeg,avi,vob,vcd கோப்புகளை எந்த விதமான plugin களும் இல்லாமல் இயக்க முடிந்தது.
என்னப்பா தலைப்புக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கிறது என்று பார்க்கிறீர்களா சரி விசயத்திற்கு வருகிறேன்.
  • இதெல்லாம் இருந்த லினக்ஸ் மின்டில் தமிழ் மொழியுடன் உள்ள வலைப்பூக்கள், இணையத்தளங்கள் ஆகியவைகள் சரியாக தெரியவில்லை அதாவது எழுத்துக்கள் சரியாக தெரியவில்லை.சரி நெருப்பு நரியில் தான் பிரச்சனை என்று நினைத்து நெருப்பு நரியில் ஒரு சில மாற்றங்கள் உண்டு பண்ணினேன்.அப்பொழுதும் இந்த பிரச்சனை தீரவில்லை.இதைப்பற்றி வடுவூர்குமார் அவர்கள் ஒரு பதிவு இட்டிருந்தார் அதில் உள்ளவாறும் செய்து பார்த்து விட்டேன்.அப்பொழுதும் சரியாகவில்லை சரி இதற்கு என்னதான் தீர்வு என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
  • அப்பொழுது எதார்த்தமாக லினக்ஸ் மின்ட் இல் Elyssa => Administration இல் EnvyNG என்று ஒரு வசதி இருந்தது இது எதற்கு என்று எதார்த்தமாக திறந்தேன்.அப்பொழுதுதான் ATI/NVIDIA கிராபிக்ஸ் கார்டு களுக்கு உண்டான டிரைவர் களை லினக்ஸில் நிறுவுவதற்கான மென்பொருள் என்று தெரிந்தது.அப்புறம் என்ன என்னுடைய ATI Graphics Card க்கு உண்டான தேர்வினை தெரிவு செய்து Apply கொடுத்தேன்.
  • ஒரு சில நிமிடங்களில் நிறுவியும் விட்டது.கணினியினை மறுதொடக்கம் (Restart) செய்ய சொல்லி கேட்டது.கணினியினை மறுதொடக்கம் செய்தேன்.மறுதொடக்கம் ஆகி மறுபடியும் லினக்ஸ் பயன்பாட்டுக்கு வந்த பொழுது பயனாளர் நுழையும் திரையிலேயே ஒரு நல்ல மாற்றம் தெரிந்தது.
  • பயனாளர் பெயர்,கடவுச்சொல் கொடுத்து லினக்ஸ் மின்டில் நுழைந்தேன் ATI Graphics Card Driver ஐ நிறுவுவதற்கு முன்பு இருந்ததைவிட Desktop Screen மிகவும் தெளிவாக தெரிந்தது.ரொம்பவும் மகிழ்ச்சி
  • சரி அடுத்து இணையத்தை இணைத்து என்னுடைய வலைப்பூவை நெருப்பு நரியில்(FireFox) பார்த்தேன் என்ன ஆச்சரியம் தமிழ் எழுத்துக்கள் மிகவும் தெளிவாக இருந்தது.அப்படி என்றால் இந்த எல்லா பிரச்சனைக்கும் ATI Graphics card Driver லினக்ஸ் மின்டில் இல்லாமல் இருந்ததுதான்.இப்பொழுது என்னுடைய மடிக்கணினி லினக்ஸ் மின்டுடன் புதுப்பொலிவுடன் ஜொலிக்கிறது.
சந்தேகம் ஏதேனும் இருந்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தை பெருதுபடுத்தி பார்த்துக்கொள்ளுங்கள்.உங்கள் நண்பர்கள் யாரும் Compaq 515 மாடல் மடிக்கணி வைத்திருந்தால் அவர்கள் லினக்ஸ் பயன்படுத்த வேண்டும் என்று விரும்பினால் நீங்கள் தயங்காமல் அவர்களுக்கு Linux Mint 5.0 யினை பரிந்துரைக்கலாம்.
  • இந்த பதிவு லினக்ஸ் மின்டில் SCIM Input Method ஐ பயன்படுத்தி இடப்பட்டது.

6 comments:

Kumaresan Rajendran said...

//விண்டோ இயங்கு தளத்தில் விட//

விண்டோஸ் இயங்கு தளத்தை விட

Kumaresan Rajendran said...

//விண்டோ இயங்கு தளத்தில் விட//
விண்டோஸ் இயங்கு தளத்தில் விட

Anonymous said...

Fantastic.
Fantastic.
Fantastic.

இரா.கதிர்வேல் said...

//Menporul.co.cc said...

Fantastic.
Fantastic.
Fantastic.//

நன்றி சார்

இந்த தளத்தின் தற்காலிக உரிமையாளர். said...

உங்கள் கருத்துகள் அனைத்தும் அறுமை.இது தொடர என் வாழ்த்துக்கள்.
நன்றி.

kamalakkannan said...

வாழ்த்துக்கள் நண்பா