Feb 6, 2010

லினக்சில் Directory -கள் அமைப்பு


நாம் விண்டோசில் C: , D: , F: , G: , ........ என விண்டோஸ் இயங்குதளங்களை நிறுவம் பொது வன் வட்டினை (Hard Disk) பிரித்திருப்போம்.

அது போல லினக்சில் / , /root , /home , /boot , /bin , /use , /sbin , /mnt , / ....
போன்ற ஒவ்வொன்றும் ஒரு மவுண்ட் பாயிண்ட் என்று அழைக்கப்படும்.

அனைத்து Directory களுக்கும் / (root) தான் முதன்மை

அதில் இருந்துதான் மற்ற directory கள் அமையும் .

/ - இதுதான் அனைத்து Directory களுக்கும் அடிப்படை மேல்கண்ட directory களை

நீங்கள் குறிப்பிட வேண்டும்மானால் / உடன்தான் குறிப்பிட வேண்டும் .

உதாரணம்:
/root
/bin
/usr
/home


/bin - இந்த directory லினக்ஸ் இயங்க தேவையான பினரி பைல்களை கொண்டிருக்கும்.விண்டோ சில் உள்ள .EXE கோப்புகளை போல .

/boot - இந்த directory ஆனது லினக்ஸ் boot ஆவதற்கு தேவையான கோப்புகளை கொண்டிருக்கும்.

/dev - உங்கள் கணினியில் Device சம்பந்தமான கோப்புகளை கொண்டிருக்கும்.

/home - இது விண்டோசில் My Document போல்டரைப் போல .லினக்சில் உள்ள பயனாளர் ஒவ்வொருவருக்கும் ஒரு home directory அந்தந்த பயனாளரின் பெயரில் உருவாக்கப்படும்.ரூட்( root ) பயனாளருக்கு /root என்ற directory உருவாக்கப்படும்.

உதாரணமாக:

periyar - என்று ஒரு பயனாளர் இருந்தால் /periyar என்று home directory உருவாக்கப்படும்.

No comments: