Jan 3, 2010

குனு என்றால் என்ன ?

  • யுனிக்ஸ் போன்றதொரு இயங்கு தளத்தினை உருவாக்கிட 1984 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட திட்டம் குனு (GNU). இதனை துவக்கியவர் ரிச்சர்ட் ஸ்டால்மேன் . இந்த இயங்கு தளம் ஒரு கட்டற்ற மென்பொருளாகும்(Free Software). இதற்கு குனு அமைப்பென்று பெயர்.
  • குனுவின் கரு (Kernal) பூர்த்தியடையாததால் லினக்ஸ் கருவுடன் பயன்படுத்தப்படுகிறது.
  • இன்றுபல கோடி பேர் பயன்படுத்தும் இந்த குனு மற்றும் லினசின் கூட்டமைப்பிற்கு குனு / லினக்ஸ் என்று பெயர்.
  • "குனு யுனிக்ஸ் அல்ல" (Gnu's Not Unix) என்பதன் பெயர்ச் சுருக்கமே குனு ஆகும். கு - நூ என
  • இது உச்சரிக்கப்படுகிறது. விளங்கு எனும் போது எழும் குற்றியலுகரத்தை போல் இதிலுள்ள 'கு' ஒலிக்கும்.
  • இணையத்தளம்: www.gnu.org
குறிப்பு: இந்த தகவல் கட்டற்ற மென்பொருள் - ரிச்சர்ட் ஸ்டால்மன் - தமிழாக்கம் - ம.ஸ்ரீ.ராமதாஸ் என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது.